Daily Archive: February 11, 2020

கதாபாத்திரப் பரிணாமம் ,விமர்சனம்

Vaanam Kottatum Movie Review நண்பர் தனாவின் படம் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கப் பதற்றங்கள் ஓய்ந்து படத்தின் வெற்றியை ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் லாபம் வரும் ஒரு படம் என்பது கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது   ஓர் ஆர்வத்தில் இதற்கு வந்த விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்தேன். தமிழில் வருமளவுக்கு சினிமா விமர்சனங்கள் எந்த மொழியிலும் இல்லை என நினைக்கிறேன். ஒரு படத்திற்கு சாதாரணமாக ஐநூறு விமர்சனங்கள் வருகின்றன. மலையாளத்தில் நினைத்தே பார்க்கமுடியாது. ஹாலிவுட் படங்களுக்கு உலக அளவில்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129772/

பேய்ச்சி உரை -கடிதம்

  அன்பின் அருணா நலம்தானே! நவீனின் பேய்ச்சி நாவல் குறித்தான தங்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை  முழுவதும் கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல வருடிச்செல்கிறீர்கள்.எனினும்  முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் நீங்கள் அதை சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது. முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுகிறீர்கள். இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு  குறிப்பை  பார்க்க எத்தனித்து பின்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129670/

உலகெலாம் -கடிதம்

உலகெலாம்… அன்புள்ள ஜெ வணக்கம். உலகெலாம் கட்டுரை கற்கண்டு துகள் போல சிறிய கட்டுரையாக இருந்து இனிக்கிறது. வைரகல்போல பெரிதாக வண்ணம் தெளித்து ஒளிகின்றது. மீண்டும் ஏன் இதுமாதிரியான கட்டுரைகளை மறுபிரசுரம்செய்யவேண்டி உள்ளது? இலக்கியத்தை தூக்கிபிடிப்பதற்காகவா? ஆம். அறியாமையையே ஒரு பொருளாக வைத்து வியபாரம் நடத்தும் மனிதர்களை மட்டம் தட்டுவதற்காகவா? இல்லை. அவர்களின் வியாபாரத்திற்கு உங்கள் நல்லதை, உயர்ந்ததை, போற்றுதற்கு உரியதை அகங்களை நசுக்கி மிதித்துக்கொள்கின்றீர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்காக. தமிழர்களில் அதிகபடியாக அறியாமையின் வடிவமாக இருக்கிறார்கள் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128622/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73

பகுதி ஏழு : பெருசங்கம் – 5 சுதமன் நகருக்குள் செல்ல விரும்பவில்லை. உப்பரிகையில் நின்று அவர் நகரை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் அச்சத்தை உணர்ந்தார். அவ்வச்சம் எதனாலென அவருக்கு தெரியவில்லை. உயரமான பாறையில் நின்று கீழே கொந்தளிக்கும் கடலை பார்ப்பதுபோல தோன்றியது. மீண்டும் தன் அறைக்குச் சென்று தன் கைகளுக்குள் நிற்கும் சிறு அலுவல்களில் மூழ்கிவிடவேண்டும் என்று விழைந்தார். உப்பரிகையிலிருந்து விழுந்துவிடுவார் என்று அஞ்சியவர்போல அவர் கைப்பிடிகளை பற்றிக்கொண்டார். அவர் நெடுநாட்களாக விழைந்தது தலைகால் புரியாமல் வெறிகொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129739/