Daily Archive: February 6, 2020

இன்றைய வாசிப்பு

படிப்பறைப் படங்கள் புதிய வாசிப்பறை வலி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வெவ்வேறு இடமிருக்கவேண்டும் என்பது என் செல்லக்கொள்கை. ‘பெட் தியரி’. வாசிக்கும் இடத்தில் எழுதும் உளநிலை வருவதில்லை. எழுதும் இடத்தில் வாசிப்பதற்கும். வாசிக்கும் இடத்தை வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது. வசதியான இடம், அழகான இடம், ‘இங்கே அமர்ந்து வாசிக்கலாமே’ என்று தோன்றும்படியான இடம், கடந்துபோகும்போதெல்லாம் வாசிக்கவேண்டும் என எண்ணச்செய்யும் இடம் தேவை.   ஆனால் வீட்டில் அதிக இடமில்லை.எல்லா இடத்திலும் புத்தகங்கள் படுக்கைகள் இன்னபிற. வீட்டை பெரிதாக்குவதில் பொருளில்லை என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129617/

நீலம் ஒரு புன்னகை!- இவான் கார்த்திக்

வஞ்சியில் அன்னைக்கு கோவில் கட்டி பூஜைகள் நடந்து முடிந்த பொழுது அன்னை கடலைநோக்கினாள் , புலையர் குல கன்னி வழி கலைமான் மீதேறி அன்னை வருகிறாள். மீண்டும் அன்னையின் பிறப்பு. அவள் மீண்டும் மீண்டும் எங்கோ பிறந்து கொண்டே இருக்கிறாள். அன்னைகளின் முழுக்கதையையும் அக்கன்னி தன் அகக்கண்வழி காண்கிறாள். அவள் பூப்படைந்து , முதல் ரத்தம் வெளிவருந்து , முதற்கரு அவளுள் சூல்கொள்ள விளைவதன் வழி தெய்வமொன்று பிறக்கின்றது. நீலம் ஒரு புன்னகை!– கொற்றவை ஒரு வாசிப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/129684/

ஒரு வாழ்வறிக்கை

  நான் இந்த உலகத்திற்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது பொதுவாக அறியப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். நான் தொடங்கி, இவ்வளவு தொலைவு முன்னேறி வந்திருக்கும் இந்தப் பணியின் நிறைவுக்காகவே என் இறுதி விலையையும் கொடுப்பேன் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்கலாம். எனினும், என்னிடம் கொடுப்பதற்கு அதிகமில்லை. என் சேமிப்புகள் அனைத்தும் இந்தப் பணியில் கரைந்துவிட்டன. பிறவழிகளில் வந்த என் வருமானங்களும் இந்த நோக்கத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. இதனாலெல்லாம் நான் சிறிதும் வருத்தப்படவில்லை.   கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரத ஆங்கில மொழியாக்கத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129700/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 18 அர்ஜுனன் நகர்நுழைவு முடிந்து அரண்மனையை அடைந்தபோது களைத்து தளர்ந்துவிட்டிருந்தான். அவன் அஸ்தினபுரியின் அணிப்படையினருடன் கோட்டைமுகப்பை அடைந்தபோது முதற்கதிர் எழத் தொடங்கியிருந்தது. அவ்வேளையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனை எதிர்நோக்கி கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில் செறிந்திருந்தனர். உள்முற்றத்தில் அவனுடைய தேர் செல்வதற்கான பாதையை அமைக்கும்பொருட்டு நூற்றுக்கணக்கான புரவிவீரர்களை அணிநிரத்தி வேலி ஒன்றை அமைத்திருந்தாள் சம்வகை. ஆனால் அந்த வேலி மக்கள்திரளின் உந்தலால் உலைந்தாடிக்கொண்டிருந்தது. மேலும் மேலும் படைகளை அங்கே நிறுத்தவேண்டியிருந்தது. அவர்கள் நீர்நிறைந்த ஏரியின் கரை என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129672/