Daily Archive: February 2, 2020

மீண்டு நிலைத்தவை

விமர்சனம் என்பது ஒருவகையான அத்துமீறலாக, ஒரு துடுக்குத்தனமாக, யாரோ சிலரை புண்படுத்துக்கூடியக் காரியமாக கருதப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பிறகும் ஒரு கருத்து வெளிபடும். ‘நம்ம எதுக்கு மத்தவங்கள புண் படுத்தனும், அவர்கள் வருத்தப்படமட்டார்களா’ என்று. அவர்கள் கதையைப் படித்துவிட்டு அவர்களைவிட அதிகமாக வருத்தமடைந்துதானே நான் என்னுடைய விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். என்னுடைய வருத்தத்தை நீங்கள் கணக்கில் கொள்ளமாட்டீர்களா? என்பேன். மீண்டு நிலைத்தவை

Permanent link to this article: https://www.jeyamohan.in/129200

நாகப்பிரகாஷின் கதைகள் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை.பெரிய இடி மழைக்காக மனிதர்கள் ஓடி ஒதுங்குவதைக் கண்டு ஒரு கட்டெறும்பு, எதற்குக் காரணம் இல்லாமல் ஓடுகிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கும். மழை நன்றாக ஓய்ந்த பின்னர் மனிதர்கள் சகஜமான நிலைக்குத் திரும்பியிருப்பர். அப்போது அந்த எறும்பு நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு மேலே உள்ள ஒரு பழுத்த இலையும், அதில் தேங்கி இருந்த நீரும் அந்த எறும்பின் மேல் விழுந்த போது பிரளயம் எனப் பதறிக் கொண்டு ஓடும்.   நாகபிரகாஷின் கதை உலகமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129451

வேறுவழிப் பயணம்- கடிதங்கள்

  வேறுவழிப் பயணம்   அன்புள்ள ஜெ,   வேறுவழிப்பயணம் என்னை உலுக்கிய ஒரு கட்டுரை ஒரு சாதாரண மனிதாபிமானக் கதையாக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஏழைகளுக்கு உதவுபவர், சேவைசெய்பவர். அது தப்பு என்றோ சிறிய விஷயம் என்றோ சொல்லவில்லை. அது சிறந்த விஷயம்தான். ஆனால் அதில் தத்துவப்பிரச்சினை ஏதுமில்லை. அதிலுள்ளது ஈகோ, குற்றவுணர்ச்சி ஆகியவற்றுடன் கலந்த அறவுணர்ச்சியும் இரக்கமும்.   ஆனால் இந்தக் கட்டுரையில் வரும் ஜான் ஃபீசன் ஒரு பெரிய சிக்கலை உருவாக்குகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129832

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் ”சார் பெரிய ரைட்டர்!” ”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”   அன்புள்ள ஜெ நலம்தானே? இலக்கியம் இலக்கியவாதிகளைப்பற்றி மக்களிடையே நிலவும் கருத்துக்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் அந்த அனுபவம்தான். இலக்கியவாசகன் என்று எங்கேயும் காட்டிக்கொள்ள முடியாது. ஒரே அலுவலகத்தில் எட்டாண்டுகளாக வேலைபார்த்த என் நண்பர் இலக்கியவாசகர் என தற்செயலாக முகநூல் வழியாகத்தான் அறிந்தேன். இருவருமே காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறோம். காரணம் அனுபவங்கள். வீட்டில் மனைவியைப்பொறுத்தவரை வாசிப்பு என்பது வெட்டிவேலை. அலுவலகத்தில் அது கவனக்குறைவு, அலட்சியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128213

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 14 அறைக்குள் காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. கதைகள் சொல்லப்படும் இடங்களில் காற்று மேலும் பொருள்கொண்டுவிடுவதாக யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். அது அங்கே சிறுகுழந்தைபோல சூழ விளையாடிக்கொண்டிருக்கிறது. திரைச்சீலைகளை அசைக்கிறது. சாளரக்கதவுகளில் தொற்றி விளையாடுகிறது. கூச்சலிடுகிறது. மேலாடைகளை பற்றி இழுத்து தன்னை பார்க்கும்படி அழைக்கிறது. ஆனால் அது அத்தனை கதைகளையும் கேட்டு அறிந்துகொண்டிருக்கிறது. அவை அக்காற்றில் என்றுமிருக்கும். வேதங்கள் உறையும் காற்று. தொல்கவிஞர்களின் சொற்கள் ஒன்றொழியாமல் சேர்ந்திருக்கும் காற்று. பீமன் “இது நஞ்சு என மறுநாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129624