Daily Archive: February 1, 2020

இன்று கோவை ‘அரசன் பாரத’ நிறைவு விழா

  கோவையில் இன்று மாலை 6 மணிக்கு இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம் [அவிநாசி சாலை]யில் அரசன் பாரத விழா நிகழ்கிறது. கோவையின் முதன்மைக்குடிமக்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அனைவரையும் வருக என வரவேற்கிறேன்.   நான் இன்று காலைமுதல் கோவையில் இருப்பேன். இடம் Raja Nivas 30, bashyakaralu road east, R.S, RS Puram, Coimbatore, Tamil Nadu 641002   நண்பர்களை வரவேற்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129646/

அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி

    கல்கி வார இதழில் அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் குறித்து அமிர்தம் சூரியா எடுத்துள்ள பேட்டி.    

Permanent link to this article: https://www.jeyamohan.in/129660/

பச்சைச்சட்டை

  சென்ற மாதம் ஈரோட்டில் குற்றவாளிகள் நடுங்க, நீதிபதிகள் அதைவிட நடுநடுங்க ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞரும் சிந்தனையாளரும் இலக்கியச் செயல்பாட்டாளரும் பொதுவாக பண்பாட்டுத் தீவிரவாதியுமான நண்பர் கிருஷ்ணன் ஒரு பாறையிலிருந்து சறுக்கி விழுந்தார். இந்த நிலைகுலைவுக்குப் பின் பல்வேறு பண்பாட்டுக் காரணிகள் இருக்கும் என்றாலும்கூட உடனடியான பின்னணி இவ்வாறு.   கிருஷ்ணனும் கும்பலும் அருகே உள்ள பிள்ளைதின்னிக் கரடு என்னும் இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். உடன் தன்னறிவிப்புத் தொல்லியலாளரான ராஜமாணிக்கமும் கிருஷ்ணனின் சீடர்களான பாரி, மணவாளன், மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129631/

செயல் -ஒரு கடிதம்

செயல்   அன்பின் ஜெ.. இன்று காலை நெகிழ்வுடன் விடிந்தது. மேகாலயா ஐஏஎஸ் அதிகாரியும், நண்பருமான ராம்குமார் பகிர்ந்து கொண்ட கட்டுரையை மனமகிழ்வுடன் படித்தேன். மறைந்த ஐஏஎஸ் அதிகாரிகளான எஸ்.ஆர்.சங்கரன் (https://en.wikipedia.org/wiki/S._R._Sankaran), பி.எஸ்.கிருஷ்ணன்  (https://indianexpress.com/article/opinion/columns/p-s-krishnan-ias-andhra-pradesh-6129265/), யுகாந்தர் (https://www.thebetterindia.com/195446/bn-yugandhar-ias-hero-father-satya-nadella-microsoft-tribute-india/) – நினைவில் வந்து போனார்கள்.  இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையை உண்மையாக உள்வாங்கி, ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற உழைத்தவர்கள். இவர்களைப் போன்ற பல்லாயிரம் அதிகாரிகளின் வியர்வையில் தான் இன்றைய இந்தியா எழுந்து நிற்கிறது. 1988 ஆம் ஆண்டு ஊரக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129579/

சத் -தர்சன் – ஒரு கடிதம்

சத்- தர்சன்- ஆனந்தகுமார் புத்தாண்டு புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்கியிருந்த வேறொரு ஆசிரமத்தில் இருந்த நண்பரின் வழியாக சத் தர்சன் குறித்து அறிந்தேன். அங்கே போவதற்காக முன்பதிவு செய்திருந்த போது தங்கள் வலைதளத்தில் சத்தர்சனில் தாங்கள் தங்கியிருந்த பதிவைப் பார்த்தேன். போவதற்கு முன்பு சென்னை பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து தெரிவித்தது நினைவிருக்கலாம். கோவையை விட குளிர் அதிகம் இருக்கும் என்றீர்கள் இருந்தாலும் நான் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129524/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 63

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 13 பீமன் அந்தப் பேழையை மீண்டும் பீடத்தின்மேல் வைத்தான். அவர்கள் அனைவரையும் ஒரே தருணத்தில் நோக்கியபடி அது அங்கிருந்தது. சற்றுநேரம் சொல்லின்மை நிலவியது. பீமன் “இதைப்பற்றி சொல்லும்படி நான் கின்னரநாட்டு பாணர்களிடம் உசாவினேன். புதுப்புது பாணர்களை அழைத்துவரச் சொன்னேன். ஒவ்வொருவரும் ஒரு கதை சொன்னார்கள். ஒன்றுடன் ஒன்று பிணைந்து தனிவழி தேரும் கதைகள் அவை. ஒரு கட்டத்தில் அக்கதைகளை அந்தியின் கேளிக்கைகளில் ஒன்றாகவே கொண்டேன்” என்றான். “உண்மையில் நான் இந்த விழிமணியை என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129615/