Monthly Archive: February 2020

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

கால்டுவெல் குறித்து தமிழில் எப்போதுமே பேச்சு உள்ளது. இன்று அவர் வரலாற்றில் வகிக்கும் இடம் தமிழில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவருடைய முதன்மையான நூலாக கருதப்படுகிறது. திருநெல்வேலி சரித்திரம் குறிப்பிடத்தக்க இன்னொரு நூல். தமிழின் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்த தொடக்க கால நூல்களில் ஒன்று அது. அதேசமயம் திருநெல்வேலிச் சாணார் வரலாறு [1849] என்றபேரில் அவர் நாடார் சாதியினரை பற்றி எழுதிய நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129873/

மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)

2012இல் ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்ட கவிஞர் சாம்ராஜ் 2016இல் ‘பட்டாளத்து வீடு’, 2019இல் ‘ஜார் ஒழிக!’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். கவிதையிலிருந்து சிறுகதை நோக்கி அவரை நகர்த்தியது எது என்று யோசித்துப் பார்த்தால் தனக்கு கிடைத்த அளப்பரிய வாழ்வனுபவங்களின் வழி சேகரமான நினைவுகளின் பாரத்தைப் புனைவின் வழியாக இறக்கி வைத்துவிட வேண்டுமென்ற அவரது துடிப்பும் அதற்கு கவிதை பொருத்தமான வடிவமாக இருக்க முடியாது என்ற அவரது சரியான அவதானிப்பும்தான் காரணமாக இருக்குமென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129872/

யா தேவி – விமர்சனங்கள்-13

    தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை – செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129977/

வெண்முரசு- கல்பொருசிறுநுரை

  வெண்முரசு நாவல்நிரையின் அடுத்த நாவல் ‘கல்பொருசிறுநுரை’. சங்கப்பாடலில் எனக்கு பிடித்த சொல்லாட்சி. கல்லில் பொருதி மறையும் சிறு நுரை. ஒரு பெருஞ்சிரிப்பு போல எழுந்து பொலிந்து அக்கணமே மறைந்து பின்வாங்கி இல்லையென்றாகி நிகழவே இல்லையோ என்று மறையும் அலை. ஆனால் அலைகள் மீளமீள நிகழ்வனவும்கூட அவற்றுக்குப்பின்னால் என்றுமுள்ள கடல் உள்ளது. அலை கடலின் என்னும் அழியாமொழியின் ஒரு சொல் மட்டுமே.   ‘காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது அறியுநர் கொல்லோ அனை மதுகையர்கொல் யாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129841/

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு   அன்புள்ள ஜெ,   வினவு இணையதளத்தில் தமிழகத்தின் தீவிர இடதுசாரி அமைப்பான ‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்’ தலைவர் மருதையன் அவர்களின் பதவி விலகல் கடிதம், அவ்வமைப்பின் தளமான வினவு நின்றுபோவது பற்றிய அறிவிப்பு ஆகியவற்றை வாசித்தேன். உடனடியாக நினைவிலெழுந்தது பின்தொடரும் நிழலின் குரல் நாவல்தான்.   இன்றுவரை அந்நாவல் இடதுசாரி எதிர்ப்பு நாவல், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129965/

அ.வரதராஜன்

  அன்புள்ள ஜெ   ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உதவியைச் செய்திருக்கிறது. யார் அந்த அ.வரதராஜன் என்று தேடச்செய்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்   ஆர்.எஸ்.பாரதி பேசியதை ‘பெரியார் வழியில் இருந்து’ பிறழ்ந்தவர் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் அம்பேத்கர் உள்ளிட்ட அத்தனைபேரையும் பற்றி அலட்சியமாக, ஆணவமாகத்தான் பேசியிருக்கிறார். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, தான்தான் எல்லாம் சொல்லிக்கொடுத்தேன் என்ற வகையிலே பேசியிருக்கிறார்   தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம் தியோசபிக்கல் சொசைட்டியால் முன்னெடுக்கப்பட்டது. கிறித்தவ கல்விநிறுவனங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129924/

யாதேவி – கடிதங்கள் 12

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   சில சிறுகதைகள் உங்களால் மட்டுமே எழுத முடியும். யா தேவி அவ்வகைப்பட்டது. மிக மிக எளிமையான கட்டமைப்பு. இரு கதாபாத்திரங்களின் உரையாடல். மிக மிக மென்மையான, நொய்மையான உணர்வுகள் பேசப்படுகின்றன. ரயிலில் கதையும் இவ்வகை கட்டமைப்புடையதே. ஆனால் அங்கே பேசப்பட்டவை மிகத் தீவிரமான உணர்வுகள். இங்கே ஒரு மாதிரி மரத்துப் போன உணர்வுகள் பரிமாறப்படுகின்றன. நாட்பட்ட பழக்கத்தால் மரத்துப் போனவை. அன்ஸாலுக்கு மட்டுமல்ல, ஸ்ரீக்கும் கூடத்தான்.   இச்சிறுகதையின் மையமே இப்புடவியனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129876/

அய்யன்காளி, வைக்கம்

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ,   வைக்கம் போராட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நான் இன்னும் அதியமானின் புத்தகத்தை படிக்கவில்லை (புத்தகம் என்னிடம் இருக்கிறது). நிர்மால்யாவின் ‘மகாத்மா அய்யன்காளி’ புத்தமும் இருக்கிறது. இவற்றோடு அதிகம் பேசப்படாத இன்னொரு புத்தகம், மேரி எலிஸபத் கிங் எழுதி ஆக்ஸ்போர்டு வெளியிட்ட ‘Gandhian Non-Violent struggle and untouchability in South India: The 1924-25 Vykom Satyagraha and the Mechanisms of …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129950/

அரசன் பாரதம் -சீனு

  ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன் முழு மகாபாரதம் வரிசைப்படி படிக்க ‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள் ‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா   இனிய ஜெயம்   பேரரசன் அவர்களுக்கான பாராட்டு விழா. இதோ மற்றொரு விழாநாள். புதுவை நண்பர்கள் வசம் பேசும்போதே விழாவுக்கான மனநிலை துவங்கிவிட்டது. இதோ வந்து போச்சிங்க ஒண்ணாந்தேதி என்று அவருக்கான சம்பள நாள் போல குதூகலப்பட்டார் மணிமாறன். இரவு பேருந்து கடலூர் திரும்புகையில் வழி நெடுக அரசன் மகாபாரத மொழியாக்கம் குறித்தே சிந்தனை சென்றது.   அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129867/

யா தேவி- கடிதங்கள்-11

  யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி கதையைப் பற்றி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கதைகளுக்கு இது ஒரு சிறப்பு. எல்லா கோணங்களும் படிக்கப்பட்டுவிடும். கவனிக்காமல் போகாது. ஆனால் என்ன சிக்கல் என்றால் இத்தனை பேசப்பட்டபின் சிலசமயம் கதையில் ஒன்றும் காண்பதற்கே இல்லையோ என்று தோன்றும்   ஆனால் உங்கள் கதைகளை கொஞ்சநாள் கழித்து படிக்கும்போது அதுவரை பேசப்படாத ஒன்றை நான் புதிதாகக் கண்டடைகிறேன். இந்த அனுபவம் எனக்கு பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129855/

Older posts «