Monthly Archive: February 2020

அந்தி எழுகை

எந்த இடத்திலும் எந்த உளநிலையிலும் அந்தி அழகியது. பெரும்பாலானவர்கள் அந்தியை ஓர் அணைதலாக, மறைதலாக ஆகவே விடைபெறலாக, துயரமாக எண்ணிக்கொள்கிறார்கள். கவிதைகளில் எப்போதுமே அது அவ்வாறுதான் காட்டப்படுகிறது. எனக்கு அவ்வாறல்ல, ஏனென்றால் எனக்கு இரவு இனியது. இரவில்தான் இலக்கியம், இசை. பகல் என்பது வெளிறிப்போன, பற்றி எரியும் யதார்த்தங்களின் வெளி. இரவு குளிர்ந்த அழகிய கனவுப்பரப்பு. ஒவ்வொருநாளும் இரவை ஒருவகை இனிமையுடன் எதிர்கொள்கிறேன். ஆகவே அந்திகளை எப்போதுமே கொண்டாடுகிறேன் நான் அந்திநடையை தவறவிடுவதில்லை. பெரும்பாலான பயணங்களில் அந்திகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129802

மெய்மையின் பதியில் -கடிதங்கள்

  மெய்மையின் பதியில்… அன்புள்ள ஜெ   மெய்மையின் பதியில் வாசித்தேன். ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு. இன்றைக்கு ஐயா அவர்களைப்பற்றி வாசிக்கக் கிடைப்பவை எல்லாமே அந்த நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்டவை. அவை புராணம் கலந்த பக்திமிகுந்த பதிவுகள். அதற்கு வெளியே கிடைப்பவை இடதுசாரிகள் அவரை ஒரு சாதியத்தலைவர், சமூகப்போராளி என்ற அளவில் மட்டுமே சுருக்கி எழுதிய குறிப்புகள்.   இன்றைய வாசகனுக்கு ஐயா அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள், அன்றைய வரலாற்றுச்சூழல் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128356

யா தேவி! – கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை] ஜெயமோகன் அவர்களுக்கு,   நாளுக்கு பல்லாயிரம் பேரால் புணரப்படும் ஆன்ஸெலின் உடலை ஒருவன் தொட்டால் அவளால் உணர முடியவில்லை என்பது சிறப்பான படிமம். அதைத் தொடவும் ஒருவனால் முடியும். அவன் உடலை பயன்படுத்தி உடலுக்கப்பால் உள்ள ஒன்றை தொட்டு பெண்மையோடு உரையாடுபவன். அதை சாத்தியமாக்கவே அவன் உடலை ஒதுக்கிய தவத்தில் இருக்கிறான். அறிதலுக்கு துய்த்தலிலிருந்து விலகி இருத்தல் தேவை. துய்ப்பவர்களால் அறியவே முடியாது. யா தேவி கதை மிக எளியது, ஆனால் சிக்கலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129810

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79

பகுதி எட்டு : அழியாக்கனல்-3 தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை. அஸ்தினபுரியின் அரண்மனைக் கோட்டை தெரிந்ததும் அவன் “அரண்மனையா!” என்றான். அருகே நடந்த ஒரு முதியவன் “ஆம், பெருங்கொடையாட்டு. பொன் பெறும் நாள்!” என்றான். தீக்ஷணன் அப்போதுதான் அதை உணர்ந்தான். “நூற்றெட்டு கொடை மையங்கள். நீங்கள் எவரென்று கூறி உரியவற்றில் இணையலாம்.” அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129777

புதிய வாசகர் சந்திப்பு- ஈரோடு

  சென்ற நான்காண்டுகளாக நடைபெறுவதுபோல இந்த ஆண்டும் ஈரோட்டில் புதிய வாசகர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என நண்பர்கள் எண்ணுகிறார்கள். மார்ச் 7,8 [சனி ஞாயிறு] இரண்டு நாட்கள்.   முன்னர் புதியவாசகர்களாக வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களாக நிலைபெற்றுவிட்டார்கள். இப்போது வாசிக்கவும் எழுதவும் வந்திருக்கும் புதியவர்களுக்கான நிகழ்ச்சி இது.   இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர் , வயது , தற்போதைய  முகவரி, தொழில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129823

ஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு

  2020 ஆம் ஆண்டுக்கான குரு நித்யா இலக்கிய அரங்கை ஊட்டியில் வரும் ஏப்ரல் ,17,18 ,19 ஆம் தேதிகளில் வைத்துக்கொள்ளலாம் என நண்பர்கள் கருதுகிறார்கள். ஊட்டியில் அது வசதியான காலம்.   நண்பர்களின் பொதுவான வசதியை அறிய ஆசைப்படுகிறேன். தேதி முடிவானபின் முறையாக அறிவிக்கப்படும், பதிவுசெய்யும் வசதியுடன்   ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/129807

கவிதை, ஆளுமை, பாவனைகள்

கவிதையில் அசடுவழிதல்   அன்புள்ள ஜெ,   உங்கள் விமர்சனத்திற்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். நான் கவிதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்குப்புரிகிற வரையில் அந்த கவிதை ஏன் அசட்டுத்தனம் என நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? அது வழக்கமாக வாசிக்கும் கவிதை போலத்தானே இருக்கிறது?   எஸ்.சதீஷ்குமார்   அன்புள்ள சதீஷ்குமார்,   உங்கள் ஒருவரியிலேயே பதில் இருக்கிறது ‘வழக்கமாக வாசிக்கும்’ வரிகளைப் போல் இருந்தால் அது கவிதையா என்ன? கவிதைக்கு ஒரு ‘பிறிதொன்றிலாத தன்மை’ இருந்தாகவேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129800

படம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம்

    சுரங்கப்பாதைக்கு அப்பால்… அன்புள்ள ஜெ,   சுரங்கப்பாதைக்கு அப்பால் ஓர் அழுத்தமான கட்டுரை. அதை கட்டுரை என்று சொல்ல முடியுமா? புகைப்படங்கள், நினைவு, கவிதை, வாழ்க்கைக்குறிப்பு, பாடல் எல்லாம் கலந்த ஒரு பதிவு. இணையம் வந்தபின்னர்தான் இத்தகைய ஒரு கலைவடிவம் சாத்தியமாகிறது. அந்தக் கலவை ஒவ்வொன்றையும் இன்னொன்று அழுத்தம் கொண்டதாக்குகிறது   மலைகளின் பின்னணியில் மதுவுடன், மழையில் நனைந்து அமர்ந்திருக்கும் குமரகுருபரனின் புகைப்படம் கிளர்த்தும் உணர்வுடன் அந்தக்கவிதை ஆழமாக ஊடுருவுகிறது. நஞ்சுபோல இனியது என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129766

கண்ணீரைப் பின்தொடர்தல் -கடிதம்

கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க   அன்புள்ள ஜெ.   நூலகத்தில் புத்தக  ரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி…மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் கிடைத்தன.  இவை இரண்டும்  தற்போது அச்சில் இல்லாத. நூல்கள் என நினைக்கிறேன்.    கண்ணீரை பின் தொடர்தல் இன்று புதிய வாசகர்கள் நிறையபேர் வாசித்திருக்கமாட்டார்கள். சமீபத்தில் வாசித்த அக்னி நதி, மீசான் கற்கள், முன்பு வாசித்த நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்ய நிகேதனம், பாத்துமாவின் ஆடு என நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129751

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78

பகுதி எட்டு : அழியாக்கனல்-2 மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம் அங்கே ஏற்கெனவே செதுக்கப்பட்டிருந்தது. மிச்சமில்லாமல் கரைந்தழியும் உணர்வை அடைந்தான். ஆனால் சற்றுநேரத்திலேயே அவன் பிரிந்து படியலானான். அவன் அடித்தளமென அமைந்திருக்க அவனுக்குமேல் அலைகள் சுழித்துக்கொண்டிருந்தன. ஓசைகள், வண்ணங்கள், உடல்கள். அவன் மேல் உடல்கள் முட்டியபோதெல்லாம் அவன் துணுக்குற்றான். உடல் அதிர்ந்து சீறித் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129770

Older posts «