Monthly Archive: January 2020

ஜே.ஜே.சிலகுறிப்புகள், திறனாய்வு, ரசனை

ஜேஜேயும் புளியமரமும் ஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில் ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா? அன்புள்ள ஜெயமோகன்,   வணக்கம். நலமா? விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு என் வாழ்த்துக்கள். அருளாளர் விருது பெறவுள்ளத்திற்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.   சில நாட்களுக்கு முன்பு ஜேஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்து முடித்தேன். மிக சிறந்த வாசிப்பாக அது அமைந்தது.   ஆல்பெர் காம்யுவை பற்றி அவர் மறைந்த பின்னர் நிகழும் இரங்கல் கூட்டத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129249

இரண்டு குறுங்கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி அவர்களை கௌதம் ஜெயசாரதி என்பவர் போற்றி எழுதியதை பார்த்தேன். அதில் ஒரு வரி “வேட்டியணிந்த வெண்முரசு”. வேடிக்கையாக இருந்தது. உங்கள் கவனத்திற்காக   ஜெயக்குமார்   அன்புள்ள ஜெயக்குமார்   பெரிய குண்டெல்லாம் இல்லை.கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறார், அவ்வளவுதான்.  அதற்காக அப்படியெல்லாம் சொல்வது சரியல்ல என்றுதான் நினைக்கிறேன்   ஜெ   அன்புள்ள ஜெ   மனுஷ்யபுத்திரனின் நட்புத்துரோகக் கவிதைகளைப் பற்றி ஒரு தனி ஆய்வுக்கட்டுரையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129585

சிறுகதைகளின் நிலவெளி -முத்துக்குமார்

  [நரேந்திரன் மொழியாக்கம் செய்த சிறுகதைத் தொகுதியான ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’ நூலுக்கான மதிப்புரை]    மிகத் தெளிவான முன்னுரையுடன் இம் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு தொடங்குகிறது. இத்தொகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பத்து ஆங்கிலச் சிறுகதைகளை மொழி பெயர்த்து தந்திருக்கிறார் அறிமுக எழுத்தாளரான நரேன். பெரும்பாலும் இந்த எழுத்தாளர்கள் அனைவருமே புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பல தலைமுறைகளாக அங்கு தொடர்ந்து வாழ்ந்த பிறகே தீரும் அடையாளச் சிக்கலில் ( Identity Crisis) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129439

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 10 இடைநாழியினூடாக நடக்கையில் நகுலன் சகதேவனின் தோளைத் தட்டி “இப்பரிசை அரசருக்கு அளிக்கையில் இது எவ்வண்ணம் பொருள்படும் என்று நம்மால் கணிக்க இயலாது. அதைப்பற்றி அமைச்சரே அறிவிக்கட்டும். உரிய தருணம் உருவானால் அன்றி அரசரிடம் இதை முன்வைக்க இயலாது” என்றான். சகதேவன் “எப்படியும் நான் கூறியதையேதான் அவர் கூறப்போகிறார்” என்றான். “அவர் கூற வேண்டிய முறையில் அதை கூறுவார். இது அறத்தோனா அன்றா என்ற தீர்ப்பை அளிக்கும் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129596

அகம்நக விற்பது

  விற்பனை முகவர்களைப் பற்றி எப்போதுமே எனக்கு ஓரு வியப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா விற்பனையாளர்களைப் பற்றியும் அந்த வியப்பு உண்டு. சாலையோரங்களில் கடைகளைப் பார்த்தபடி நடக்கையில்  ‘அய்யோ இங்கெல்லாம் எப்படி வியாபாரம் ஆகும்!’ என்று பதற்றம் கொண்டபடியே இருப்பேன். சிலசமயம் சில கடைகள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த உரிமையாளரை எண்ணி அனுதாபப்படுவேன். விற்பனை என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு தெய்வத்திடம் மன்றாடுவது என்பது என் எண்ணம். அந்த தெய்வம் சுயநலம் மிக்கது. பொருட்படுத்தாதது. புண்படுத்தத் தயங்காதது.   இளமையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128189

தன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்

  நம்முள் ஆன்மீக பிரக்ஞை வளர வளர நாம் இவ்வுலகத்தில் இருக்கும் எல்லாவற்றோடும் நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம்.. ஆகவே சுரண்டல் அங்கு இல்லை. நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம். நம்மை நாமே குணப்படுத்திக் கொள்கிறோம்- டாக்டர். வெங்கிடசாமி, அரவிந்த் கண் மருத்துவமனை   லாரி பேக்கர் காந்தியை முதன்முதலாக சந்தித்த தருணத்தைப் பற்றி வாசித்ததுண்டு. இந்தியர்களுக்கு உகந்த கட்டுமானத்தை எழுப்புங்கள் என பேச்சு வாக்கில் காந்தி சொனனது அவருடைய வாழ்வை திசை மாற்றியது. வெரியர் எல்வினின் கதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129228

யுவால் – கடிதம்

ஹராரியின் கலகச்சட்டகம் உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா? இனிய ஜெயம் தளத்தில் யுவால் அவர்களின் மானுட வரலாற்றுப்பார்வையை சார்ந்து, ஏற்றும் மறுத்தும் வந்த பதிவுகளும்,தொடர்ந்த சுரேஷ் பாபு அவர்களின் பதிவும் கண்டேன். யுவால் அவர்களின் பார்வையில் உள்ள எதிர்மறை அம்சம் பலரை ஒவ்வாமை கொள்ள வைப்பதையும், அதே எதிர்மறை அம்சம் சிலரை புளகம் கொள்ள வைப்பதையும் சமீப காலங்களில் அருகே இருந்து காண முடிகிறது. பொதுவாக ‘இனிமே அவ்ளோதான் மனுஷன் . எல்லாம் பூட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129250

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 9 சகதேவனின் படைகள் நகரை அணுகிவிட்டதை அறிவிக்கும் முரசொலிகள் எழுந்ததும் கோட்டைமுகப்பின் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த நகுலன் எழுந்து தன் உடைவாளை எடுத்து இடையில் பொருத்திக்கொண்டு “செல்வோம்” என்று யுயுத்ஸுவிடம் சொன்னான். யுயுத்ஸு அருகே சுவர் சாய்ந்து நின்றிருந்தான். தலைவணங்கி சொல்லின்றி அவனுடன் நடந்தான். அவர்கள் தெற்குக் கோட்டைமுகப்பை சென்றடைந்தனர். அணிப்படையினரும், மங்கலச் சேடியரும், இசைச்சூதரும், வேதியரும் முகப்பில் நிரைகொண்டு சகதேவனை எதிர்நோக்கி நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னால் நகுலன் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129565

வணங்குதல்

இரு காந்திகள். சுதந்திரத்தின் நிறம் ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…   இவ்வாண்டுக்கான பத்மபூஷண் விருது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள் கொண்டிருப்பது முதல் வகையான புகழ். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் அடைந்திருப்பது இரண்டாம் வகை புகழ். மரபின் மொழியில் சொல்லப்போனால் பொன்றாப்புகழ்.   ”தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” , “செயற்கரிய செய்வார்” என்னும் இரண்டு வரிகளால் அவர்களை நம் மரபு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129593

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிச் சொல்லலாமா?– 2   நவீனத்துவர் வாழ்க்கையைப்பற்றிப் பேச அஞ்சியதைப்பற்றி மேலும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொதுச்சிந்தனை மேலோங்கியிருக்கிறது. முன்பெல்லாம் அது உலகளாவ பரவுவதில்லை. காலனியாதிக்கம் வழியாக உலகம் ஒற்றை கருத்துப்பரப்பாக ஆகியபின்னர் உலகளாவ ஏறத்தாழ ஒரே உளநிலை உருவாகி நிலைகொள்கிறது. அந்த உளநிலை ஆன்மிகசிந்தனை உட்பட அனைத்திலும் ஊடுருவுகிறது.  நவீனத்துவ சிந்தனை அவ்வாறு நம் முந்தைய தலைமுறையினரின் எல்லா பார்வைகளையும் ஆட்கொண்டிருந்தது. இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என. பின்நவீனத்துவச் சிந்தனை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129283

Older posts «

» Newer posts