Daily Archive: January 31, 2020

அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி

  அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது மகிழ்ச்சிக்குரியது மகாபாரதத்தை மொழிபெயர்த்த தமிழன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129651

பூனைசாட்சி

  போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?   நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப் பற்றி எழுதும்போது அது அவர்களை அறியாமலேயே குறியீடாக ஆகிவிடுகிறது. அவர்கள் அந்த உயிரின் ஏதேனும் சில கூறுகளை ஒரு கருத்துநிகழ்வாக உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் விலங்குகளும் என்ற தலைப்பில் விரிவாகவே ஆராய்ச்சி செய்யலாம்.   அவர் சொன்னார்,  “இல்லைசார் பூனைகளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128671

மானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.

ஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான்.   கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில் அப்படியாகத்தான் ஆசானின் மேதமை எழுதப்பட்டிருக்கிறது.   தீபம் கதையில் முடிவில் வரும் ஒரு வரி …   “இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்தை நானே பார்த்துக்குவேன்” என்று தன் அத்தை மகளிடம் முருகேசன் சொல்வதது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129474

இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்

பெத்தவன் – இமையம்   மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை – இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும் கருத்து. மனிதத்தை மறுக்க முயலும்போது – என்று சொல்கையில் அந்த மனிதம் எந்த இடத்திலேனும், யாராலேனும் உணரப்படுகிறதா என்றால் –ஒரேயொரு ஜீவனால் மட்டும். அந்த ஒரு ஜீவன் பெண்ணைப் பெற்ற தந்தை. தந்தையாலும் அது உணரப்படாவிட்டால் அப்புறம் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129633

காந்தியின் இடம்- பி.ஏ.கிருஷ்ணன்

  காந்தியின் அரசியல் இடம், வரலாற்று இடம் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் விரிவான உரையாடல். தெளிவான அரசியல்நோக்கு கொண்ட உரையாடல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129637

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 12 பேச்சு இயல்பான அமைதியை சென்றடைந்தது. பீமனை மாறிமாறித் தழுவி பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை உணர்ந்து தனித்தனர். தாங்களென்றான பின்னர் மொழியை சென்றடைந்தனர். மொழியில் தங்களை அளந்து அளந்து ஊற்றி முன்வைத்தனர். மொழி காட்டெருமைகள் கொம்புமுட்டிக்கொள்வதுபோல உரசி வருடி விலகி மீண்டும் தொட்டு விளையாடியது. பேராற்றலின் விளையாட்டுக்கருவி. கொலைக்கருவிகளால்தான் மிகச் சிறந்த விளையாட்டை நடத்த முடிகிறது. யுயுத்ஸு அவர்கள் ஒவ்வொருவரும் அகத்தே சலிப்பதை, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் அத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129613