Daily Archive: January 27, 2020

வணங்குதல்

இரு காந்திகள். சுதந்திரத்தின் நிறம் ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…   இவ்வாண்டுக்கான பத்மபூஷண் விருது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள் கொண்டிருப்பது முதல் வகையான புகழ். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் அடைந்திருப்பது இரண்டாம் வகை புகழ். மரபின் மொழியில் சொல்லப்போனால் பொன்றாப்புகழ்.   ”தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” , “செயற்கரிய செய்வார்” என்னும் இரண்டு வரிகளால் அவர்களை நம் மரபு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129593

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிச் சொல்லலாமா?– 2   நவீனத்துவர் வாழ்க்கையைப்பற்றிப் பேச அஞ்சியதைப்பற்றி மேலும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொதுச்சிந்தனை மேலோங்கியிருக்கிறது. முன்பெல்லாம் அது உலகளாவ பரவுவதில்லை. காலனியாதிக்கம் வழியாக உலகம் ஒற்றை கருத்துப்பரப்பாக ஆகியபின்னர் உலகளாவ ஏறத்தாழ ஒரே உளநிலை உருவாகி நிலைகொள்கிறது. அந்த உளநிலை ஆன்மிகசிந்தனை உட்பட அனைத்திலும் ஊடுருவுகிறது.  நவீனத்துவ சிந்தனை அவ்வாறு நம் முந்தைய தலைமுறையினரின் எல்லா பார்வைகளையும் ஆட்கொண்டிருந்தது. இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என. பின்நவீனத்துவச் சிந்தனை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129283

பத்ம விருதாளர்கள்

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் மிக முக்கியமான பலர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்களால் உலகுக்குக் காட்டப்படாதவர்களே பலர் அவர்களில் உள்ளனர்.   தமிழகத்தில் பத்மவிருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் காந்திய சூழலில் அறியப்பட்டவர். அமர்சேவா அமைப்பை நடத்திவரும் ராமகிருஷ்ணன் அவர்களும் ஓரளவு புகழ்பெற்றவர். ஆனால் தமிழகத்திற்கு வெளியே பத்ம விருது பெற்ற பலர் அறியப்படாதவர்கள். அவர்களில் காடுகளைப்பற்றிய அறிவின் களஞ்சியமான பழங்குடி அன்னையும் உண்டு.   பொதுவாக இவர்கள் பற்றிய கவனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129590

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 8 யுயுத்ஸு யுதிஷ்டிரனின் அறையை அடைந்து “என்னை அழைத்திருக்கிறார்” என்றான். ஏவலன் அவன் வருகையை அறிவித்து உள்ளே அனுப்பினான். யுயுத்ஸு உள்ளே சென்று சொல்லின்றி யுதிஷ்டிரனை வணங்கினான். யுதிஷ்டிரன் மஞ்சத்தில் கால்களை நீட்டி தலையணைகளில் சாய்ந்து அமர்ந்திருந்தார். முகம் சற்று தெளிவுகொள்வது போலிருந்தது. மூச்சு மட்டும் எழுந்து எழுந்து அமைய நெஞ்சு அசைந்துகொண்டிருந்தது. அமரும்படி கைகாட்டினார். அவன் அமர்ந்ததும் “உன்னை அழைத்தது ஒரு சந்திப்புக்காக. என் உளநிலையுடன் ஒத்துச்செல்பவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129589