Daily Archive: January 26, 2020

தும்பி,தன்னறம் – வேண்டுகோள்

  மனதிலுதித்த எண்ணத்தின் போக்கில் செயல்பட்டுநிற்கும் மனிதர்களுக்கு காலத்தாலான புறக்கணிப்புகளும் நிராகரிப்புகளும் ஒவ்வொரு படிநிலையாக நிகழ்கிறது. அதன் பெருவலி பொறுத்து முன்னைவிட முனைந்து இன்னும் செயல்வேகம் கொள்வதென்பது, சுற்றியிருக்கும் வாழ்வுமனிதர்களின் நம்பிக்கையளிப்பைச் சார்ந்திருக்கிறது. இடர்கடக்க உதவுகிற இப்பெருஞ்செய்கை, எத்தனையோ செயல்தேக்கங்களை தாண்டிவிடுகிற உளப்பிடிப்பை நம்மையறியாமல் நல்கிவிடுகிறது. தமிழ் பதிப்பகச்சூழலில், அத்தகைய பொதுநம்பிக்கையினை தன்னறம் நூல்வெளியும் தும்பியும் அடைந்திருப்பது, வாழ்வுக்கான நன்றிக்கடனாகிறது.   தன்னறத்தின் ‘மீண்டெழ’ பதிவை மனமேற்று, கடந்த மூன்றுநாட்களாக, வெவ்வேறு ஊர்களிலிருந்தும் நண்பர்கள் தொகையுதவி அளித்திருந்தார்கள்.முதற்கட்டமாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129541

தருமபுரி இலக்கிய விழா

அன்புள்ள ஜெ   வணக்கம்   நலந்தானே ? ஒருமுறை நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போதுதான் என்னளவில் இந்நிகழ்ச்சி முழுமை பெறும். அதற்காக எங்கள் தொடர் செயல்பாடுகளை உங்களுக்கு கவனப்படுத்தவே இதை அனுப்புகிறேன். நன்றி. தங்கமணி மூக்கனூர்ப்பட்டி E.Thangamani Teacher, GH School, Sandapatti, Morappur Via, Dharmapuri DT, 635305. Cell:9442448322 Mail: [email protected] Facebook: Thangamani Elasiappan Blog : teacherthangamani.blogspot.com

Permanent link to this article: https://www.jeyamohan.in/129577

எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?

அன்புள்ள ஜெ ,   நேற்று நாம் அறையில் பேசியதன் தொடர்ச்சியாகவே இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்,  வாசகர் நிஷாந்தின் ‘இருத்தலியல்’ பற்றிய  நீண்ட கேள்விக்கும், மாதவனின் ‘டின்னிடஸ்’ பற்றிய கேளிவிக்கும்,அதற்கு முன்னரும் உங்களிடம் கேட்கப்படட சில , கேள்விகளுக்கு, ‘ ‘இலக்கியம் படியுங்கள்’ நாவல் எழுதுங்கள் ‘கவிதை வாசியுங்கள் ‘  என்று மானுட சிக்கல்களுக்கு தீர்வாக  ஒன்றை அல்லது ஒரு செயல்பாட்டை முன் வைக்கிறீர்கள்.    அவ்வாறே, நம் குருகுலங்கள், ஆசிரமங்கள், துறவிகள்,தங்களை நாடிவரும்  ஒவ்வொருவருக்கும் ஒன்றை பரிந்துரை செய்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129281

மீண்டும் சந்திக்கும் வரை…

யானைவந்தால் என்ன செய்யும்? மீளும் நட்பு நேற்று [24-1-2020] காலம் செல்வம் நாகர்கோயில் வந்து என் வீட்டில் ஒருநாள்  ‘நின்றார்’. அதற்கு முந்தையநாள் கருணாகரன். கூடவே கருணாகரன் எழுதிய நூலையும் செல்வம் எழுதிய சொற்களில் சுழலும் உலகம் நூலையும் வாசித்தேன். இரண்டுநாளாக ஒரே யாழ்ப்பாணத்தமிழ். மானிப்பாய், புங்குடுதீவு, சில்லாலை எல்லாம் கொல்லைப்பக்கம்தான் என்று ஒருபிரமை.   ‘பேந்து’   மாலையில்  ‘வெளிக்கிட்டு’ தெங்கம்புதூரில் லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றோம். அவர் சற்று நோயுற்றிருக்கிறார். ஒருமாதமாக அவருக்கு நுரையீரல் தொற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129566

மலேசியா- ஓர் இலக்கியப்பூசல்

பொதுவாக இலக்கியச் சண்டைகள் ஆர்வமூட்டுபவை. எம்.கோவிந்தனின் புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உண்டு ‘இலக்கியப்பூசல் என்பது உண்பதற்கு ஏற்பச் சமைக்கப்பட்ட இலக்கியச் செய்திகளின் தொகுப்பு’. மலேசிய இலக்கியம் பற்றிய செய்திகளை இந்த இலக்கியப்பூசலில் இருந்து எளிதாக உணர்கிறோம். ஆனால் தகவல் கட்டுரைகளின் சோர்வூட்டும் அறிவித்தல்முறை இவற்றில் இல்லை   ம.நவீன் இன்றைய மலேசிய இலக்கியத்தில் நிகழும் இரண்டு முதன்மையான பூசல்களை எதிர்கொள்கிறார். இரண்டுமே தமிழ் எழுத்தாளர் சாம்ராஜ் அங்கே கூலிம் இலக்கிய முகாமில் மலேசியக் கவிதைகளைப்பற்றிச் சொன்னவற்றுக்கான எதிர்வினைகளுக்குரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129424

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 7 யுதிஷ்டிரன் அவருடைய சிற்றறையில் தாழ்வான மஞ்சத்தில் இடைவரைக்கும் மரவுரிப் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்தார். ஏவலன் வரவு அறிவித்தபோது சற்றே புரண்டு தலையணையை உயரமாக வைத்துக்கொண்டு வெறுமனே விழிகளைத் திறந்து நோக்கிக்கொண்டிருந்தார். நகுலன் உள்ளே நுழைந்து முகமன் உரைத்து தலைவணங்கினான். சுரேசரும் யுயுத்ஸுவும் அவனைத் தொடர்ந்து வந்து அறைக்குள் நின்றனர். சுரேசர் மட்டும் யுதிஷ்டிரனின் தலையருகே சிறுபீடத்தில் அமர்ந்தார். யுதிஷ்டிரன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. நகுலன் “மூத்தவரே, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129542