Daily Archive: January 23, 2020

அருளப்படுவன…

அவ்வப்போது விழாக்களில் சிலர் குழந்தைகளை அழைத்து வருவதுண்டு. குழந்தைகளை கையில் எடுக்கையில் அருகே அமரச்செய்கையில் ஒரு தனி உவகை உருவாகிறது. அதுவரைக்கும் இருந்த உளநிலையே மாறிவிடுகிறது. கருத்துக்களை சொல்கூட்டிக் கொண்டிருந்தேன் என்றாலும், நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தேன் என்றாலும், வேறொருவனாக மாறிவிடுகிறேன். குழந்தைகளைக் கையில் எடுக்கையில் வெறும் மனிதன் உண்மையில் எனக்கு குழந்தைகளை கொஞ்சுவது என்பதே மறந்துவிட்டது. குழந்தைகளைக் கண்டால் ஒரு மாதிரி பேதலித்து பெரும்பாலும் வெறுமே சிரித்துக் கொண்டே இருக்கிறேன். என் அண்ணா  சின்னக் குழந்தைகளை மெய்மறந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128505

அறிவெதிர்ப்பும் ஆணவமும்

பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கியுடன் வந்தார் – விகடன் ஜெ சென்ற ஆண்டு ஜூன் மாதம் நீங்கள் தாக்கப்பட்டபோது பாலபாரதி என்ற மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ எழுதியிருந்த ஒரு செய்தி அப்போது முகநூலில் பிரபலமாகச் சுற்றியது நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அதில் அவர் அகிம்சையின் உச்சத்தில் நின்று, நீதிநெறியின் உருவமாகவே தோற்றமளித்து நீங்கள் எப்படியெல்லாம் சட்டபூர்வமாக அணுகியிருக்கவேண்டும், என்னென்ன செய்திருக்கக் கூடாது என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருந்தார். அப்போதே அந்த அரசியல்வாதியின் பந்தாவான ஆடம்பரக் கார்ப் பயணங்கள்,  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129519

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்து நம் முன்னோர்கள் பட்ட பாட்டை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் எந்த நோக்கத்திற்காக அவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மஹாபாரதத்தை மொழிபெயர்த்தனரோ கிட்டத்தட்ட அதே நோக்கத்திற்காகவே நானும் இப்பணியைச் செய்யத் தொடங்கினேன். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் சொற்ப அளவைக்கூட அனுபவிக்காத எனக்கே சில இழப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129516

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 4 நள்ளிரவிலேயே முல்கலரின் உடல் அவர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் மைந்தரும் மனைவியும் கதறி அழுதுகொண்டிருக்க அந்த ஓசையை என்னவென்று புரியாமல் போத்யர் நோக்கிக்கொண்டிருந்தார். தெருக்களில் புதிதாகக் குடியேறியிருந்த அயல்நிலத்துச் சூதர்கள் வந்து கூடினர். எப்படி அஸ்தினபுரியின் சூதர் முறைப்படி உடலை எரியேற்றுவது என அவர்களுக்கு தெரியவில்லை. அதை உசாவியறிய உதவும் எவரும் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் போத்யரை அடையாளம் கண்டார். “இவர் மூத்தவர், முறைமை அறிந்தவர். அவரிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129511