Daily Archive: January 21, 2020

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா

  முழுமகாபாரதம் நிறைவு   அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு முடித்திருக்கிறார். முழுமகாபாரதம் என்னும் இணையதளத்தில் ஏறத்தாழ ஏழாண்டுக்காலம் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இந்த மொழியாக்கம் வெளியாகியிருக்கிறது. தமிழில் இது ஒரு தனிப்பெரும் சாதனை. தன் செயலில் முழுதளிப்பும் இடைவிடா ஊக்கமும் கொண்ட ஒருவரால் மட்டுமே செய்து முடிக்க இயல்வதான பெரும்பணி இது. அத்தகையோர் இன்று அரிதானவர்கள்   சாதனையாளரான அருட்செல்வப் பேரரசன் அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழாவை விஷ்ணுபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129499

ஒரு விடுதலைப்பாடல்.

  1978ல் என நினைக்கிறேன். நான் அப்போது பத்தாம் வகுப்பு மாணவன். கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம்.  அங்கே ஒரு வட இந்தியக்கூட்டம் வந்திருந்தது. பத்துப்பதினைந்து இளம்பெண்கள். அதேயளவு இளைஞர்கள். வங்காளிகளாகக்கூட இருக்கலாம். பெண்கள் எல்லாரும் ஒரேநிறமான சுடிதார் அணிந்திருந்தார்கள். அந்த ஆடை அன்றெல்லாம் குமரிமாவட்டத்தில் காணக்கிடைக்காது. பெண்கள் குண்டாக,வெண்ணிறமாக இருந்தனர். இரட்டைச்சடை வேறு போட்டிருந்தனர். ஆகவே நாங்கள் நின்று வேடிக்கைபார்த்தோம் அவர்கள் ஒரு பாட்டுபாடிக்கொண்டிருந்தனர். கைகளை தட்டியபடி. ஆண்களும் அதில் கலந்துகொண்டனர். பள்ளிக்கூட பாட்டு போலவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128706

ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை

பாண்டிச்சேரியில் 2010 ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்ற ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை. அ.வெண்ணிலா- மு.ராஜேந்திரன் ஆசிரியத்துவத்தில் வெளியான எட்டு பகுதிகள் கொண்ட தொகுதி இது.   இமையம் உரை   அ.வெண்ணிலா உரை      

Permanent link to this article: https://www.jeyamohan.in/129219

சத்- தர்சன்- ஆனந்தகுமார்

புத்தாண்டு புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள் அன்புள்ள ஜெ. வணக்கம் தங்கள் வரவு நல்வரவானது.. சற்றே தாமதமான இந்த நன்றிக் கடிதத்தை எவ்வாறு உங்கள் தளத்தில் எழுதுவது எனும் முறை தெரியவில்லை. விருந்தினர்கள் உபயோகிக்கும் வகையில் இக்கட்டிடத்தை சீராக்கி முடிப்பதில் கடுமையான பணி அழுத்தம் இருந்ததே தாமதத்திற்குக் காரணம்.. இந்த இடம் எப்போதும் தீவிர உடல், மன உழைப்பைக் கோருகிறது. இது போன்ற காரியங்களில், சில வேலைகளை தொடர்ந்து முன்னோக்கிச் சுழற்றவில்லையென்றால், அது பின்னோக்கி நகர்ந்துவிடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129419

புதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி

  அன்பிற்கினிய ஜெ,   வணக்கம் .   நலம் , உங்கள் நலனை விழைகிறேன்   புதுவை வெண்முரசு கூடுகை தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது .உரையாடல் தளத்திலிருந்து நீண்ட நாள் இலக்கான “விவாதம்” என்கிற தளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான முதல் முயற்சியாக “நீலம்” குறித்த உரையாடலை முழுமையாக ஒருவரே தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலம் அதை அடைய முயல்கிறோம் .   கடலூர் சீனு ‘நீலம்’ குறித்த பன்னிரண்டு அமர்வை இந்த வருடம் முழுவதுமாக ஒவ்வொரு கூடுகையிலும் அவரே உரையாற்றுவார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129470

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 2 மைந்தன் சென்றபின் போத்யர் தன் இல்லத்தின் சிறிய திண்ணையிலேயே நாளின் பெரும்பகுதியை கழித்தார். ஒவ்வொரு நாளும் அவர் இளையோன் இல்லத்திலிருந்து எவரேனும் அவருக்கு இரு வேளை அன்னம் கொண்டுவந்து படைத்தனர். முதலில் அவர் தயக்கமும் அச்சமும் கொண்டிருந்தார். முதல் நாள் அவரிடம் வந்து “மூத்தவரே, தாங்கள் விழைந்தால் நான் சமைக்காத அரிசியை கொண்டுவந்து படைக்கிறேன். அதில் தீட்டு இல்லை. தாங்கள் வேண்டுமெனில் தங்கள் அன்னக்கலத்தை திண்ணையில் வைக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129458