Daily Archive: January 18, 2020

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் அன்புள்ள ஜெமோ, பெரியாரின் மறுபக்கம் என்ற பேரில் ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது. விரிவான மூலநூல் ஆதாரங்களுடன் உள்ளது. மறுப்பு தெரிவிப்பவர்கள் இதைத்தான் மறுக்கவேண்டும். வைக்கம் போராட்டத்தில் காந்தியே ஈடுபடவில்லை, அவர் வைக்கம் போராட்டத்தை உண்மையில் எதிர்த்தார், பெரியார்தான் நடத்தினார் என்று திகவினர் சொன்னதற்கு எதிரான விரிவான ஆதாரங்கள் அவர்களின் தரப்பினர் எழுதிய நூலில் இருந்தே எடுத்து அளிக்கப்பட்டுள்ளன. http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part16/?fbclid=IwAR0x7E6wiBE-SwnLQYkarTSvC9JM2dRXf4YjMw2W7cu0L7oU3pi280grH04 ஈவெராவின் மறுபக்கத்தை வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி. ஸ்ரீனிவாஸ் *** அன்புள்ள ஸ்ரீனிவாஸ், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129445

ம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை அன்புள்ள ஜெ, அருண்மொழிநங்கை அவர்களின் உரையை பார்த்தேன். முதல் உரை என்றே சொல்லமுடியாது. எந்தக்குறிப்பும் கையில் இல்லாமல் நாவலின் எல்லா கதாபாத்திரங்களையும் நினைவுகூர்ந்து பேசினார். முன்னர் வாசித்த நாவல்களின் கதாபாத்திரங்களைக்கூட நினைவுகூர்ந்து ஒப்பிட்டுப் பேசினார். இலக்கியச் சூழலுக்கு இத்தகைய உரைகளே தேவையாகின்றன. இத்தகைய உரைகளில்தான் நம்பகத்தன்மை இருக்கிறது. சொல்பவர் தன் உள்ளத்திலிருந்து சொல்கிறார் என்பது தெரிகிறது. அதில் செயற்கையான பாவனைகள் ஏதுமில்லை.  அருண்மொழி அவர்கள் நவீனின் நாவலில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கிறார் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129358

இரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒரு பரபரப்பன நகரில் இருக்கிறோம் என்ற பிரக்ஞை தவிர்க்க முடியாததாக இருக்கும். குறைந்த தூரமே பயணிக்க வேண்டி இருந்தாலும் இரண்டு மூன்று பேருந்துகள் மாறிப் பயணிக்கும்படியாகும். ஒவ்வொரு பேருந்தின் எண்ணாக சரியாகப் பார்த்து ஏறும்படி இருக்கும். ‘நடந்தே வந்திருக்கலாமோ’ என்று நினைக்கும்படி ஐந்து கிலோமீட்டர் தூரத்தை பேருந்தில் கடக்க ஒரு மணிநேரம் ஆகும். இவற்றை மனதில் கொண்டே சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒரு தெளிவான பயணத் திட்டத்துடன் வருவேன். அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129418

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49

பகுதி ஐந்து : விரிசிறகு – 13 பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை நோக்கும்பொருட்டு இருபுறமும் நின்றிருந்த மக்கள் முண்டியடித்தனர். அத்தனை கட்டுப்பாடுகளும் அழிய சாலை மழைவிழும் ஓடைநீர் என கொந்தளித்தது. அதன் நடுவே அவளுடைய தேர் சுழன்றும் அமைந்தும் சென்றது. வாழ்த்தொலிகளின் அதிர்வு தன் பற்களை கூசவைப்பதுபோல் உணர்ந்து சம்வகை வாயை இறுக்கிக்கொண்டாள். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129448