Daily Archive: January 15, 2020

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020

வணக்கம், அரூ அறிவியல் சிறுகதைகள் 2019″ வம்சி பதிப்பக வெளியீடாகத் தற்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. தேர்வான பத்து கதைகளும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சுனில் கிருஷ்ணனின் முன்னுரைகளுடன் இடம்பெற்றுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்திய நண்பர் சரவணனுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129158

புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை

  பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள் எழுதிய ஒரு நூலில் அரசுக்கு எதிரான, ஆதாரமில்லாத செய்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு அவர்மேல் பபாசி நடவடிக்கை எடுத்திருக்கிறது. பபாசியின் புகாரின்பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.   பபாசி பெரும்பாலும் அரசை நம்பி இருக்கும் ஓர் அமைப்பு. இங்கே இத்தகைய பெரிய அமைப்பு எதுவாயினும் அரசை நம்பியே இருந்தாகவேண்டும். அரசு எதிர்நிலை எடுத்தால் அதை நடத்தவே முடியாது. மேலும் இங்கே நூல்விற்பனை என்பது பெரும்பாலும் அரச நூலக ஆணையைச் சார்ந்தது.[அதில் எப்போதுமே அரசியல் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129389

பத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை

  சென்னையில் 10-1-2020 அன்று பி.டி.தியாகராஜர் அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பத்து நூல்வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை.   பத்து ஆசிரியர்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகள்.   =============================================================================== பத்துநூலாசிரியர்கள்      பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்   பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா] பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி விஜயராகவன் தேரையின் வாய் பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன் தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை   நாகப்பிரகாஷ் எரி பத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129351

ஊறுகாய்

ஜெ,   பப்பாஸி சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊறுகாய் ஸ்டால் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தன்னறம் போன்ற பதிப்பகங்களுக்கு பதிலாக அளிக்கப்பட்ட இடம் அது   எம்.சரவணக்குமார் அன்புள்ள சரவணக்குமார்,   நான் கவனித்தது வேறு சில. அந்தக்காலத்தில் ஒரு வாரிசு நடிகர் கதைநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார் [கிசுகிசு]. அவருக்கு சினிமாவுக்கான கதைகேட்பது என்பது பொழுதுபோக்கு.குறிப்பாக சாப்பிடும்போது. ஒரு நாற்காலி டெஸ்க் செய்து வைத்திருந்தார்.U வடிவில். அதில் பத்துபதினெட்டு கிண்ணங்களில் பலவிதமான பருப்புகள், கொட்டைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129394

பத்துநூல் வெளியீடு உரைகள்.

பத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும்போது பத்து உரை என்பது ஒரு வகை விதிமீறல். பத்துப்பதினொன்று நூல்கள் இன்றெல்லாம் சாதாரணமாக வெளியிடப்படுகின்றன. ஆனால் உரைகள் ஒன்றிரண்டுதான். ஆனால் வெவ்வேறு குரல்கள் ஒலிக்கவேண்டும், வெவ்வேறு ஆளுமைகள் அரங்கேறவேண்டும் என விரும்பினோம். பேசிய அனைவரும் பெரும்பாலும் இளைஞர்கள். ஆகவே இவை அடுத்த தலைமுறையின் குரல்களும்கூட   இந்த உரைகள் எல்லாமே பத்துநிமிடங்களுக்குள் முடிபவை. சிற்றுரைகள். ஆகவே நூலைப்பற்றிய சுருக்கமான அறிமுகங்கள் [விரிவான கட்டுரைகள் பின்னர் வெளியாகும்.] மொத்த பேச்சுக்களும் ஒன்றரை மணிநேரத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129353

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46

பகுதி ஐந்து : விரிசிறகு – 10 சம்வகை யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்து நின்றாள். ஏவலன் தலைவணங்கி அவள் வருகையை அறிவிக்க யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று மீள்வதற்குள் அவள் அங்கே ஆற்ற வேண்டியதென்ன என்பதை முடிவு செய்துவிட்டிருந்தாள். யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று தலைவணங்கும்போது அவள் சற்றே சலிப்புற்ற உடல்பாவனையை அடைந்திருந்தாள். நூல் நோக்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் “கூறுக!” என்றார். அவருக்கு தன்மேல் மெல்லிய ஆர்வமும் உள்ளார்ந்த விலக்கமும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அல்லது அதற்கும் அடியில் ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129391

மீண்டெழ உதவுங்கள் – தன்னறம்

2020 சென்னைப் புத்தகக்கண்காட்சி சந்தையில் ‘தும்பி – தன்னறம் நூல்வெளிக்கு’ அரங்கு மறுக்கப்பட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி அமைப்பினர் கடந்த மூன்று வருடங்களாக தும்பி மற்றும் தன்னறம் நூல்வெளிக்கு அரங்கு கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் சில எளிய காரணங்களைச் சொல்லி இம்முறை அரங்குப் பட்டியலிலிருந்து எங்களை நிராகரித்திருக்கிறார்கள். வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைக்காமல், புத்தகக் கண்காட்சி நிர்வாகம் பரிந்துரைக்காக எங்களை அலையவைப்பது தாங்கவியிலாத மனஅயர்ச்சியைத் தருகிறது. ஆனால், ஒவ்வொரு வருடமும் அரங்கைப் பெறுவதற்கு எங்களுடைய செலயல்களைக் காட்டிலும் பரிந்துரைக்காகவே நாங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129206