Daily Archive: January 14, 2020

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்

  நான்குநாள் வீட்டில் இருந்தேன், தன்னந்தனியாக. ஆறாம் தேதி வீட்டுக்கு வந்ததுமே கதவை வெளியே பூட்டி பூட்டு தொங்கவிட்டு உள்ளே ஒளிந்துகொண்டேன். எழுத்து. மாடிக்கும் கீழுமாக ஏறி இறங்கி நடைப்பயிற்சி. முதல் நாள் மூன்றுவேளையும் தோசை. அடுத்த வேளைக்கு சோறு சமைத்துக் கொண்டேன். எழுத்து மட்டுமே. கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் பேசிப்பேசி வாய் உலர்ந்தமைக்கு மாற்றாக பேசாமலேயே நான்குநாள். கிளம்பும் அன்றுதான் லக்ஷ்மி மணிவண்ணனும் ஷாகுல் ஹமீதும் வந்தார்கள். கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். ஓரிரு சொற்கள். ஒன்பதாம் தேதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129315

சீரியல் கில்லர்கள் -கடிதம்

யக்ஷி உறையும் இடம் ஆஸ்திரேலிய யக்ஷி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் வாசகர் எழுதிய ஆஸ்திரேலிய யக்ஷி படித்த உடனே ஞாபகம் வந்தது, மனோஜ் நைட் சியாமளன் த சிக்ஸ்த் சென்ஸ். அதிலும் இம்மாதிரி ஒரு அம்மா தன் இரண்டு பெண்களையும் சிறிது சிறிதாக விஷம் வைத்துக் கொல்லப் பார்ப்பார். இது நாள் வரை எனக்கு தெரியவில்லை, அது எதற்கு என்று. இப்பொழுதுதான் அந்த மனநிலை பிறழ்வு ( manchusse n syndrome ) தொடர்பு படுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128360

புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்

புத்தாண்டு ஜெ, ஆனைகட்டி அருகே உள்ள கோட்த்துரா, அகலி, நர்சிமுக்கு, உற்றூக்குளி போன்ற அட்டபாடி பகுதிகளில் கடந்த மழை காலத்தில் சுற்றி இருக்கிறேன். அப்படியே உள் செல்ல செல்ல ஆள் அதிகம் இல்லா பகுதிகள் தன்னின் உண்மையான உள் அமைதியின் ஒரு இடத்திற்கு இயல்பாக கொண்டு சென்று விடும். கலையையும், இயற்கை சார்ந்து தன்னோடு தான் இருத்தலையும் கொண்ட சத்-தர்ஷன் அழகு கவிதை. என் ஆசையின் நீட்சியாக மகிழ்ந்து கொண்டேன். வரும் அனைவருக்கும்,அங்கு இருக்கும் அந்த தினங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129246

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45

பகுதி ஐந்து : விரிசிறகு – 9 சம்வகை நகரைச் சூழ்ந்திருக்கும் சிறுநகர்களை ஆளும் தலைவர்களை நகருக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சிற்றவை ஒன்றில் கூட்டி அவர்களின் பணிப்பொறுப்புகளை மீண்டும் உணர்த்தி, பிழைகளைக் கண்டறிந்து கடிந்து அறிவுறுத்திவிட்டு அஸ்தினபுரிக்கு மீண்டாள். அஸ்தினபுரியில் உருவாகி வந்த கலவைமொழியில் அவ்வுரையாடலை நிகழ்த்தி முடிக்கையில் அவளுக்குள் சொற்கள் ஒழிந்த சலிப்பு நிறைந்தது. குடித்தலைவர்களுக்கு தங்கள் இடமென்ன என்பதில் இடறல் இருந்தது. சிலர் தங்களுக்கான கோன்மையை அரசு தொடர்ந்து உருவாக்கித் தரவேண்டுமென எதிர்பார்த்தார்கள். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129356