Daily Archive: January 11, 2020

கலைகளைப் பிரித்துப்பார்த்தல்

வணக்கம் ஜெ கலைகளை நான் அறிவதற்கு செய்த சிறுமுயற்சி இது. கலைகளை இவ்வாறு பிரிக்கிறேன் இயக்க கலை மற்றும் நிலை கலை. ஒரு கதையை படித்தவுடன் அது அழுகை கோபம் போன்ற ஏதோ ஒரு ரசனையை நம்முள் எழ செய்தால் அது இயக்க கலை. மாற்றாக ஒரு கதை நம்முள் இருக்கும் அனைத்தையும் வெளி கொண்டு வந்து நம் கண் முன்னே அவற்றை காண செய்து உணர்ந்து பகுத்து புரிந்து கடந்து அறிந்து அமைய செய்தால் நிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128777

அருண்மொழியின் உரை

அருண்மொழி மலேசியாவில் கெடா அருகே கூலிம் ஊரில் பிரம்மவித்யாரண்யத்தில் நடந்த நவீன இலக்கிய முகாமில்  ஆற்றிய உரை. கல்;லூரிக் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் மேடையில் பேசுகிறாள். நடுவே ஆஸ்திரேலியாவில் நூலை ‘எடிட்டிங்’ செய்வதைப்பற்றி ஒரு பதினைந்துநிமிடம் பேசியிருக்கிறாள். உரையை எழுதி திரும்ப எழுதி தயாரிக்க இரண்டுநாட்கள் ஆகியது என்று சொன்னாள். அதற்கான நேரம் இப்போது வேலையை உதறிவிட்டபின்னரே வாய்த்திருக்கிறது. உரையாற்றும்போது நான் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டாள். ஆகவே வெளியே போய்விட்டேன். உரை வலையேற்றம் செய்யப்பட்டபோது ஊட்டியில் வைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129195

விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜானவி பரூவாவின் மாயவி(த்)தைக் கதையை வாசித்தபின் அவரின் தொகுப்பைச் சென்னையில் தேடினேன். கிடைக்கவில்லை. ப்ரதி அமேசானில் இருக்கிறது. டெலிவரி சார்ஜ் என அவர்கள் போடும் தொகை புத்தகத்தின் விலையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருப்பதால் மலைத்துக்கொண்டு வாங்கவில்லை. அவரின் மின்னஞ்சல் முகவரி தாருங்களேன். புத்தகத்தை வாங்கி படித்தபின் அவருடன் புத்தகங்களைப் பற்றி எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு அந்தக் கதைப் பிடித்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129212

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42

பகுதி ஐந்து : விரிசிறகு – 6 துச்சளை தன் இடர்நிலையை ஒருங்கிணைவுடன் சொல்லி முடித்தவுடனேயே அதைப்பற்றி அனைத்துத் தெளிவுகளையும் அடைந்துவிட்டதுபோல் சம்வகைக்கு தோன்றியது. ஒன்றை தொகுத்துச் சொல்வதன் வழியாகவே அதை முழுமையாகவே நோக்கவும் புரிந்துகொள்ளவும் முயல்கிறது, சொன்னதுமே அதை கடக்கும் வழியை உள்ளம் அடைந்தும்விடுகிறது. துச்சளை அந்நிகழ்வுகளை அவ்வாறு எவரிடமும் தொகுத்துச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அந்நகருக்குள் அந்நிலத்திற்குள் நின்று அதை அவ்வாறு சொல்லவும் இயலாது. அங்கே அவள் அயலவள். அத்தனை தொலைவு விலகி வந்தவுடனேயே உள்ளமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129237