Daily Archive: January 6, 2020

சு.வெங்கடேசனுக்கு  ‘இயல்’ விருது

  தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்புக்காக வழங்கப்படும் இயல் விருது 2020 ஆண்டுக்கு நாவலாசிரியர் சு.வெங்கடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரெண்டோ நகரை மையமாகக் கொண்டு, ஈழத்தமிழ் வாசகர்கள் மற்றும் கனடிய  யார்க் பல்கலையால் வழங்கப்படும் இவ்விருது தமிழின் பெருமைமிக்க இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்று. காவல்கோட்டம்’ ‘வேள்பாரி’ போன்ற நாவல்களின் ஆசிரியரான சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள் ***       சு..வெங்கடேசனுக்கு இயல்விருது – 2019   கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129155

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) நான் மைசூரில் பிறந்து பின்னர் கோவையில் இளங்கலை வரை பயின்றவன். இளங்கலையில் உளவியலும் முதுகலையில் சமூகப்பணியையும் கற்றேன். 2013ல் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மசூரியில் பயிற்சியும், அசாம் மாநிலத்திலும், மத்திய அரசிலும் பின்னர் மேகாலயாவிலும் பணியாற்றியுள்ளேன். தற்போது தென்மேற்கு காரோ மாவட்டத்தின் ஆட்சியராக உள்ளேன். என் மனைவி அபிநயா மருத்துவத்தில் முதுகலை பயின்று வருகிறார். மகனுக்கு இரண்டரை வயது. பெற்றோர் கோவையில் வசிக்கிறார்கள். என் அண்ணன் அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் மென்பொருள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129071

விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, விஷ்ணுபுரம் பத்தாம் ஆண்டின் விருதுவிழா ஒரு வாசகனாக மனநிறைவு அளித்தது இசை, யுவன் சந்திரசேகர், கே.என். செந்தில், வெண்பாகீதாயன், அமிர்தம் சூரியா, சுரேஷ்குமார இந்திரஜித், ரவிசுப்பிரமணியம், ஜானவி பருவா, பெருந்தேவி, சங்கரப்பிள்ளை, அபி என அமர்வுகள் அனைத்தும். நன்றாக இருந்தது. ஆவணப்படம் நன்றாக இருந்தது. சினிமா தாக்கம், சங்கீத ரசனை, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசைக்கலைஞர்கள், எழுத்தில் மேற்கு உலகின் தாக்கம், எளிய மக்களின் துயர், அமானுஷ்யம், பழந்தமிழ் இலக்கியத்துடனான உறவு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129069

’அகதி’ ராம்குமார் முன்னுரை

கோவையில் நடந்த ஒரு சிறிய புத்தக விழாவில் ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் பள்ளி முடித்த நேரம். கையில் பணம் இல்லை. அம்மாவின் வங்கி அட்டை மட்டும் இருந்தது. அம்மாவை தொலைபேசியில் அழைத்து அதை வாங்கிக்கொள்ளவா என்று கேட்டேன். ‘அதுக்கென்னடா….எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்’ என்றார். அன்று நான் கேட்டது ஐநூறு ரூபாய். ஒரு நடுத்தர குடும்பமான எங்களுக்கு அதுவே அதிகம்தான். இருந்தாலும் தயங்காமல் வாங்கச் சொன்னதற்கு அன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129073

விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்

அன்புள்ள ஜெ நலம்தானே? விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு வந்துவிட்டு திரும்பி அந்த மீட்டலிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். என்னைப்போன்ற வாசகர்களுக்கெல்லாம் இத்தகைய திருவிழாக்கள் பெரிய அனுபவம். திரைப்படவிழாவுக்கு நான் வழக்கமாகச் செல்வதுண்டு. ஆண்டு முழுக்க சினிமா பார்க்கிறோம். ஆனால் ஒரு சினிமாவிழாவின் கொண்டாட்டமே வேறு. அப்போது மனம் தளும்பிக்கொண்டிருக்கிறது. சினிமா பற்றி மட்டுமே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் இந்த விழாவும். இந்த விழாவிலே ஏராளமானவர்கள் கலந்துகொள்வதற்கான காரணம் இந்தப்போதைதான். நிறைய வாசிக்கிறோம். ஆனால் அதைப்பற்றிப் பேச ஆளில்லை. அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேச்சில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129081

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 37

பகுதி ஐந்து : விரிசிறகு – 1 நகர்மேல் எழுந்துநின்ற கோட்டை மேலிருந்து சம்வகை சூழ நோக்கிக்கொண்டிருந்தாள். அஸ்தினபுரிக்குள் பாரதவர்ஷம் எங்கணுமிருந்து மக்கள்பெருக்கு வந்து நிறையத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. அனைத்துத் தெருக்களிலும் தலைகள் செறிந்து திரளன்றி பிறிதொன்றும் விழிக்கு தெரியாமலானது. நகரம் ஒரு கொடியென நெளிவதாக, சுனையென அலைகொள்வதாக விழிமயக்கூட்டியது. ஒவ்வொருவரும் அந்நகரை நோக்குவதை விரும்பினர். எங்கேனும் உயர்ந்த இடத்தில் இருந்து அதை நோக்கியவர்கள் மெய்மறந்து விழிகளாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129080