Daily Archive: January 4, 2020

பாண்டிச்சேரியில்…

  ஜனவரி ஐந்தாம் தேதி பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு மறுபதிப்பு வெளியாகிறது. அந்நிகழ்வில் பங்கெடுக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம். பாண்டிச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி , இந்து ஆசிரியர் என்.ராம், நீதியரசர் தாவீது அன்னுச்சாமி, இமையம், கி.ராஜநாராயணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மு.முருகேஷ், அ.வெண்ணிலா ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். தொகுப்பாசிரியர் மு.ராஜேந்திரன் ஏற்புரை வழங்குகிறார் இடம் ஓட்டல் ஜெயராம் , காமராஜர் சாலை பாண்டிச்சேரி நாள் 5-1-2020 பொழுது மாலை ஐந்துமணி ***

Permanent link to this article: https://www.jeyamohan.in/129075

மீள்கை

விஷ்ணுபுரம் விழா எப்போதுமே ஒரு தனிமையை அளிக்கிறது. நண்பர்கள் புடைசூழ இருந்து பேசி, சிரித்து, களித்து மெல்ல உருவாகும் தனிமை அது. முதலில் உருவாவது ஒருவகையான சங்கடம். நான் இவ்விழாவில் என்னை முன்வைப்பதில்லை. எவ்வகையிலும் என் படைப்புக்கள் பேசப்படுவதே இல்லை. ஆயினும் ஒரு பெருமிதம் உருவாவதை தவிர்க்கமுடியாது. அப்பெருமிதம் ஒருநாள் நீடிக்கும். விழா மறுநாள் காலை உலகையே வென்றுவிட்டது போலிருக்கும். நண்பர்களும் நிறைவுடன் மிதப்புடன் இருப்பார்கள். அன்று மாலைக்குள் அது குறையத்தொடங்கும். குறைந்தாகவேண்டும். இவை என்னுடையவை அல்ல, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129022

பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

1965 ஆம் ஆண்டு ராகவன்- ருக்மிணி தம்பதியருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். மேற்கு மாம்பலத்தில் வளர்ந்தார். ராஜ்பவனில் பணியாற்றியதால் நண்பர்கள் வட்டாரத்தில் கவர்னர் ஸ்ரீனிவாசன் என்று அழைக்கப்படுபவர். வெண்முரசின் மெய்ப்பு நோக்குனர். தீவிர வாசகர். உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)? கல்வி – தமிழிலக்கியத்திலும் கல்வியியலிலும் முதுகலைப் பட்டம். தமிழிலக்கியத்தில் எம்.ஃபில். பணி – தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு. குடும்பம் – அம்மா, மனைவி, மகன் – வாசகர்கள் இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129062

விழா கடிதம் – நினேஷ்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, முதன் முறையாக இந்த வருடம்தான் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்கிறேன். வெள்ளிக்கிழமை காலை விழா அரங்கம் வந்தடைந்த பொழுது மீனாம்பிகை தங்கும் அறைக்கு வழிகாட்டினார்கள். அதற்குப்பின் இந்த இரண்டு நாட்களும் தங்கும் அறை சம்பந்தமாக செய்த அனைத்து தொந்தரவுகளை பொருட்படுத்தாமல் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்த விருந்தினர்களை போல் கவனித்துகொண்டார்கள். அருமையான உணவு, தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகள், தெளிவான விழா ஒருங்கிணைப்பு செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றிகள். நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129057

விலாஸ் சாரங் தன் படைப்புலகம் குறித்து…

கூண்டுக்குள் பெண்கள் எழுத்தை இயற்றுதல் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் மராத்தியில் எழுதப்பட்டவை. பின்னர் ஆங்கிலத்தில் ‘மறு ஆக்கம்’ செய்யப்பட்டவை. ஏன் ‘மறு ஆக்கம்’ என்று சொல்கிறேன் என்றால் நான் செய்ததை மொழிபெயர்ப்பு என்று சொல்வது சரியாக இருக்காது. ஒவ்வொரு கதையின் இறுதி வரைவும் மூலக்கதையோடு ஒப்பிடாமல் எழுதப்பட்டது. ஏனென்றால், அந்த நிலையில் கதை ஆங்கிலத்தில் எடுபடுகிறதா என்பதுதான் என் கவலையாக இருந்தது. இப்படி செய்வது எனக்கு எளிதாகவே இருந்தது. ஏனென்றால், நான் மராத்தியில் எழுதும்போது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129064

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35

பகுதி நான்கு : அன்னையெழுகை – 7 இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகளை சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு பழகியிருக்கவில்லை. அஸ்தினபுரியில் அதற்கென்றே அணிஏவலர்கள் குடிமரபாக பயின்றுவந்திருந்தார்கள். அவர்களின் கலை நூலாக யாக்கப்பட்டு மரபாக கற்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் அதற்கான நெறிகள் இருந்தன. நாகபட கணையாழியை நீள்விரலில் அணிவித்தமைக்காகவே ஓர் அணியேவலர் சிறைப்படுத்தப்பட்டார் என்னும் செய்தியை அவன் இளமையில் கேட்டிருந்தான். குடித்தலைவர்களுக்கும் வணிகர்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128740