Daily Archive: January 3, 2020

மதுரை அயோத்திதாசர் நூல்வெளியீட்டு விழாவில்

மதுரையில் பேராசிரியர் டி.தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் நூல்வெளியீடு வரும் ஜனவரி 4 அன்று நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். சு.வெங்கடேசன், சமஸ் ஆகியோர்  கலந்துகொள்கிறார்கள்.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/128925

விழா 2019

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் விஷ்ணுபுரம் விழாவுக்கு இம்முறை நேராக மலேசியாவிலிருந்து வந்துசேர்ந்தேன். விழா ஏற்பாடுகள் எதையும் என்னிடம் தெரிவிக்கவேண்டாம் என சொல்லியிருந்தேன். தெரிவிப்பதில் பெரிய பயன் ஏதுமில்லை என்பது ஒரு காரணம். நான் அவற்றில் சொல்ல ஏதுமில்லை. அமைப்பாளர்கள் செந்தில், ராம்குமார், விஜய்சூரியன், மீனாம்பிகை, செல்வேந்திரன், ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் அமைப்பாளர்களாகவே பல்லாண்டுகளாக பணியாற்றுபவர்கள். ஆகவே நாகர்கோயிலில் ரயிலில் ஏறிப்படுத்தபோதுதான் விஷ்ணுபுரம் விருது பற்றி நினைத்துக்கொண்டேன். அதுவரை மலேசியாவில் நான் ஆற்றிய உரைகளைச் சார்ந்தே என் உள்ளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129021

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) ஊர் சேலம். உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். ஒரு தம்பி, திருப்பூரில் வேலை செய்கிறான். இப்போது எர்ணாகுளத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். முறையான பள்ளிக் கல்வி வாய்க்கவில்லை, வேலைக்குப் போக நேர்ந்தது. இணையம் வழியும், தொலைநிலைக் கல்வி மூலமும் இப்போதே படித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்? என் வீட்டில் சற்றே வாசிப்புப் பழக்கம்  இருந்தது. தாத்தா வீட்டில் தொடர்கதைகளை இதழ்களிலிருந்து சேர்த்து பைண்ட் செய்தெல்லாம் வைத்திருந்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129037

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

பால்யகாலச் சித்திரங்கள் தொடர்ந்து ஆழ்மனதில் வண்ணம் உலராமல் தங்கி நிற்பவை. வயதேறும் தோறும் ஆழம் கொள்பவை. பிற்கால உலக அனுபவங்களை ஆழ்மனச் சித்திரங்களைக் கொண்டுதான் உரசிப் பார்த்துக் கொள்கிறோம். நல்லவை அல்லவை எனப் பிரித்துப் பார்ப்பதும் ஏற்பதும் மறுப்பதுமான உளத் தீர்மானங்களை இவையே உருவாக்கித் தருகின்றன. மனிதனின் அகத்தில் இவை நிகழ்த்தும் மாற்றங்களே அவனது குணாம்சங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன. சமூகத்தின் மீதான பார்வையும் அதனுடனான சமருக்கும் சமரசத்துக்குமான கருவிகளையும் காப்புகளையும் உருவாக்கித் தருவதும் இவையே. பசி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129045

விழா- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்! வணக்கம்.விருது விழாவுக்கு வந்திராத அது பற்றி அறிந்திராத ஒருவரை நினைவில் கொண்டு என் விழா நினைவுகளை எழுதியிருக்கிறேன். அதன் சுட்டி:https://wp.me/patmC2-9r நன்றி. சாந்தமூர்த்தி, மன்னார்குடி. *** பெருமதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் விழாவில் இந்த முறை கலந்து கொண்டதும் உங்களை சந்தித்ததும் சென்ற ஆண்டில் மிக மறக்க முடியாத நிகழ்வாக எனக்கு அமைந்தது. முக்கியமாக உங்களை நேரில் முதல் முறையாக சந்தித்ததும், (பார்த்தது என்று தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129047

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34

பகுதி நான்கு : அன்னையெழுகை – 6 இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு மேல் செங்கற்களாலான பிறிதொரு கோட்டை எழுந்து அதற்குமேல் மாபெரும் மரக்கலங்கள்போல மரத்தாலான காவல்மாடங்களை ஏந்தியிருந்தது. அவற்றை மரக்கலங்கள் என்று எண்ணும் கணம் கற்சுவர் அலைகொள்வதுபோல் உளமயக்கு உருவாகும். அக்காவல்மாடங்களும் ஏழு அடுக்குகள் கொண்டவை. மூன்று கீழடுக்குகளில் கீழ்நோக்கி சரிந்து திறக்கும் சாளரங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128620