Daily Archive: January 2, 2020

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

2007ல் நான் நாகர்கோயிலில் இருந்து ஈரோடு நண்பர்களைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் விஜயராகவன் அறிமுகமானார். அவர் என்னை வாசித்திருந்தார். ஈரோடு நண்பர்களை என் வழியாக அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் இன்றுவரை பயணத்தோழராகவும் விஷ்ணுபுரம் அமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்துவருகிறார். தொடர்ந்த வாசிப்பாளர். உலக இலக்கியத்தில் நீடித்த கவனம் கொண்டவர். தொடர்ச்சியாக மொழியாக்கங்கள் செய்துவந்தாலும் இப்போதுதான் முதல் நூல் வெளிவருகிறது உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) எனது பெற்றோருக்கு தலைமகனாக போடிநாயக்கனூரில் பிறந்து, அரசு பொறியாளரான தந்தையின் பணி காரணமாக மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129009

‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

. உலகின் பல்வேறுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளை படிக்கும்போது வாழ்வின் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வு, நிலைகுலைவுகள் ஆகியவற்றை அவர்கள் காண்பிக்கும் காட்சிபடிமங்களும் பல்வேறு கோணங்களும், அவர்களுடைய கலாச்சாரம் வாழ்நிலை சூழல் மதம் மற்றும் அரசியல் சார்ந்து பிரதிபலிப்பதை பார்த்து மொழிபெயர்க்க ஆவல் கொண்டேன். இத்தொகுப்பில், புனைவுகதைகளில் உள்ள உணர்வு வித்தியாசங்களுக்காகவும், படைப்பாளிகளின் படைப்புப் பார்வையில் பெண் எனும் பிரகிருதியை அவர்கள் அணுகும் விதங்களுக்காகவும் என் ரசிப்பின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன். கட்டற்ற வேட்கையையும், உடலை கொண்டாடும் போக்கையும், மாயா யதார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129012

விழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்

வணக்கம்.. நான் முதன் முறையாக விஷ்ணுபுரம் விழாவிற்கு இவ்வருடம் 2019 வந்திருந்தேன்.மிகச் சிறப்பாக நடைபெற்றது பெருந்திருவிழா. அரங்கில் செலவிட்ட எனது கணங்கள் அனைத்திலும் பிரமிப்பில் திளைத்துக்கொண்டிருந்தேன். பல்வேறு எழுத்தார்கள், வாசகர்கள் என ஒரு பேரறிவுக் கூட்டம் அங்கு நிறைந்திருந்தது. கவிஞர் அபிக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை விஷ்ணுபுரம் அளித்திருக்கிறது. விழா ஒருங்கிணைப்பு மிக அருமையாக செய்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி.இரண்டாம் நாள் அங்கு வருவதற்கு உண்மையில் பணம் இல்லை பக்கத்து வீட்டில் நூறு ரூபாய் கடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129008

அபி -ஆவணப்படம்

அபி ஆவணப்படம் விஷ்ணுபுரம் விழாவில் 2019 டிசம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட து     ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண் படத்தொகுப்பு – குமரேசன் படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன் ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர் ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ் வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129002

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33

பகுதி நான்கு : அன்னையெழுகை – 5 இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே குனிந்து கூர்ந்து நோக்கினான். அவை வணிகப்படகுகள் போலவும் தோன்றவில்லை. சிறிய பயணப்படகுகள், ஓரிரு பாய்கள் மட்டுமே கொண்டவை. அவற்றில் பொருட்களும் பெரிதாக இருக்கவில்லை. படகுத்துறையை நோக்கி சென்றுகொண்டிருந்த படகுகளில் மக்கள் அள்ளித் திணித்ததுபோல் செறிந்திருந்தார்கள். பலர் தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் சுழற்றி காற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128522