Daily Archive: January 1, 2020

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலா எழுதி வெளியாகும் முதல் நூல் இது . இதிலுள்ள கட்டுரைகள் இந்தத்தளத்தில் வெளியானவை. காந்தியம் இன்று நடைமுறையில் எப்படி செயல்படுகிறது என்பதை காந்தியக்கொள்கைகளைக் கடைப்பிடித்து சாதனைகளை செய்த ஆளுமைகள் வழியாக சித்தரிக்கின்றன இக்கட்டுரைகள்.   ஓர் அரிய நாள் -பாலா   =============================================================================== நூலாசிரியர்கள்  பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்   பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா] பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி விஜயராகவன் தேரையின் வாய் பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன் தேரையின் வாய்’ தொகுப்பிற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128999

குரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு

  ஊட்டியில் ஆண்டுதோறும் நிகழும் குரு நித்யா இலக்கிய முகாம் முடிவு செய்யப்பட்டுள்ளது   நாள் MAY 1, 2, 3 [வெள்ளி சனி ஞாயிறு]   இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருவது இந்த இலக்கிய முமாம். இலக்கியம் குறித்த அறிமுகம்- உரையாடல் என்பது இதன் நோக்கம். நட்பார்ந்த ஒரு சூழலில் இலக்கியத்தை பயில்வது இது. பெரிதும் இளம் வாசகர்களுக்கு என இலக்குகொள்ளப்பட்டது. இலக்கியவாசகர்கள் இதில் பங்குகொள்ளலாம்.   பங்கேற்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129987

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்   உங்களைப்பற்றி – கல்வி, குடும்பம், வேலை:   இளநிலை – வேளாண்மை, முதுநிலை: ஊரக மேலாண்மை குடும்பம்: சிறு விவசாயக் குடும்பம். அம்மாவும் அப்பாவும் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள். அம்மாயி, தாய்மாமாவின் உதவியால் படித்தேன். காதல் திருமணம் – மனைவி விஜயலக்‌ஷ்மி மனித வளப் பேராசிரியர். மகள் முதுநிலை – வளர்ச்சியியல் பட்டதாரி. தற்போது சென்னை ஐஐடியில் திபெத் அகதிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறார். மகன் அருண் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128998

தும்பி – தன்னறம் நாட்காட்டி 2020

    அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   கடந்த வருடம் தன்னறம் நூல்வெளி சார்பாக வெளியிட்டிருந்த நாட்காட்டியில், பிரகாஷ் வரைந்த காந்தியின் கோட்டோவியங்களோடு உங்களுடைய சில வார்த்தைவரிகளையும் இணைத்து அச்சுப்படுத்தியிருந்தோம். நிறைய மனங்களுக்கு நிறைவையளித்த நாட்காட்டியாக அது இன்றளவும் இருக்கிறது. இம்முறை 2020ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வினோபா பாவேயின் புகைப்படங்கள் மற்றும் வாழ்வுச்சொற்களைக்கொண்டு தன்னறம் மற்றும் தும்பி சார்பாக வடிவமைத்திருக்கிறோம். நாட்காட்டியின் முழுமைபெற்ற வடிவம் இன்று அச்சுக்குச் செல்கிறது.   பூமிதான இயக்கத்தைத் தோற்றுவித்து, பாதயாத்திரை வழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128996

விழா- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் மீண்டும் முழுமையான நிறைவைத்தந்திருக்கும் இரண்டு நாட்கள். துயரும் மகிழ்வும் நிறைவுமாக வீடு திரும்பினேன், விஷ்ணுபுரம் விழாமுடிந்து வீடுவந்த பின்னரும் மனம் அங்கேயே அரங்கினுள் அமர்வுகளில் அமர்ந்திருக்கும் உணர்விலேயே இருக்கின்றது. அன்று பெருந்தேவி, விழாவிற்கு  ஸ்ரீவள்ளி  வரவில்லை என்று  சொன்னதுபோல  அன்னையும் ஆசிரியையுமாகிய ஒருத்தியை  பொள்ளாச்சியிலேயே விட்டுவிட்டு வாசகியும் எழுத்தாளர்களை சந்திக்கும் ஆர்வமுள்ளவளுமான நான் மட்டுமே விழாவிற்கு  வந்திருந்தேன். வேறு எந்த நினைவுமின்றி அங்கு கிடைத்த அரிய பலவற்றை திகட்ட திகட்ட அள்ளிஅள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128989

விழா – ஆனந்தகுமார்

அன்புள்ள ஆசானுக்கு, இன்னும் கனவு நிலையில் தான் இருக்கிறேன். வாழ்வின் சிறந்த இரண்டு நாட்கள். விஷ்ணுபுரம் விழா எனக்கு இதுதான் முதல் அனுபவம், ஆனாலும் அப்படி இல்லை என்பது போல, எல்லோரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் போலத்தான் இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் செறிவாக அமைந்தது. எழுத்தாளர் உடனான கூடுகைகள் உலகத்தரம். உங்கள் கனவு ஏற்கனவே செயல்படத் தொடங்கி விட்டது. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் அது நடந்திருக்கும், நிச்சயமாக! எழுத்தாளர் கூடுகைகள் பற்றி நண்பர்கள் விரிவாக எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128992

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32

பகுதி நான்கு : அன்னையெழுகை – 4 யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன் நகரில் சந்தித்த மானுடரிலிருந்து அவர்கள் உடலசைவால் வேறுபட்டார்கள். அது என்ன என்ன என்று நோக்கி நோக்கி அவன் கண்டடைந்தான். அஸ்தினபுரியின் அசைவுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டவையாக, ஒற்றைத் திரளின் அலைவுகளாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் நிகழசைவும் முந்தைய அசைவுகள் அனைத்துக்குஅம் தொடர்ச்சியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128469