Monthly Archive: January 2020

அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி

  அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது மகிழ்ச்சிக்குரியது மகாபாரதத்தை மொழிபெயர்த்த தமிழன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129651

பூனைசாட்சி

  போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?   நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப் பற்றி எழுதும்போது அது அவர்களை அறியாமலேயே குறியீடாக ஆகிவிடுகிறது. அவர்கள் அந்த உயிரின் ஏதேனும் சில கூறுகளை ஒரு கருத்துநிகழ்வாக உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் விலங்குகளும் என்ற தலைப்பில் விரிவாகவே ஆராய்ச்சி செய்யலாம்.   அவர் சொன்னார்,  “இல்லைசார் பூனைகளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128671

மானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.

ஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான்.   கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில் அப்படியாகத்தான் ஆசானின் மேதமை எழுதப்பட்டிருக்கிறது.   தீபம் கதையில் முடிவில் வரும் ஒரு வரி …   “இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்தை நானே பார்த்துக்குவேன்” என்று தன் அத்தை மகளிடம் முருகேசன் சொல்வதது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129474

இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்

பெத்தவன் – இமையம்   மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை – இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும் கருத்து. மனிதத்தை மறுக்க முயலும்போது – என்று சொல்கையில் அந்த மனிதம் எந்த இடத்திலேனும், யாராலேனும் உணரப்படுகிறதா என்றால் –ஒரேயொரு ஜீவனால் மட்டும். அந்த ஒரு ஜீவன் பெண்ணைப் பெற்ற தந்தை. தந்தையாலும் அது உணரப்படாவிட்டால் அப்புறம் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129633

காந்தியின் இடம்- பி.ஏ.கிருஷ்ணன்

  காந்தியின் அரசியல் இடம், வரலாற்று இடம் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் விரிவான உரையாடல். தெளிவான அரசியல்நோக்கு கொண்ட உரையாடல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129637

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 12 பேச்சு இயல்பான அமைதியை சென்றடைந்தது. பீமனை மாறிமாறித் தழுவி பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை உணர்ந்து தனித்தனர். தாங்களென்றான பின்னர் மொழியை சென்றடைந்தனர். மொழியில் தங்களை அளந்து அளந்து ஊற்றி முன்வைத்தனர். மொழி காட்டெருமைகள் கொம்புமுட்டிக்கொள்வதுபோல உரசி வருடி விலகி மீண்டும் தொட்டு விளையாடியது. பேராற்றலின் விளையாட்டுக்கருவி. கொலைக்கருவிகளால்தான் மிகச் சிறந்த விளையாட்டை நடத்த முடிகிறது. யுயுத்ஸு அவர்கள் ஒவ்வொருவரும் அகத்தே சலிப்பதை, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் அத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129613

குடைக்கீழே…

  பழைய மலையாளப் பாடல்களுடன் ஏதோ ஒரு நினைவு இணைந்திருக்கிறது. இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டது முன்பு ஒரு முறை லட்சத்தீவுக்கு படகில் செல்லும்போது. ஆனால் அப்போது இது என் இளமைக்காலத்தைய நினைவாகப் பதிந்துவிட்டிருந்த ராமகிருஷ்ணன் ஆசாரியுடன் இணைந்திருந்தது. அவருக்கு பிடித்தமான பாடல். சுருள்முடி நெற்றியில் தொங்கி அசைய, மரத்தை இழைத்தபடி இதைப் பாடுவார்.  “கேட்டோ கொச்சே, இந்தப் பாட்டை நம்ம பெண்ணு சேர்ந்து பாடுவா”   அழகன், பாடகன், மிகமிக மென்மையானவன். கனவுகளிலேயே வாழ்ந்தவன். இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129460

கோழிப்பிராண்டல்!

ராமனின் நாடு   அன்புள்ள ஜெ   ஒரு சின்ன சந்தேகம். உங்கள் கட்டுரை ஒன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.[ராமனின் நாடு ]   எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல்.   ஆனால் கட்டுரையின் இறுதியில்   “அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப்போயிருப்பார் என நினைக்கிறோம்”   என்று செம்படவர்கள் சொல்கிறார்கள்   அவ்வளவு பெரிய வாக்கியத்தை சைகையில் சொல்வது எப்படி என தெரியவில்லை. ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129620

தம்மம் தந்தவன்- கடலூர் சீனு

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத் தம்மமும் தமிழும் சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி தம்மம் தந்தவன்  முடியாத புத்தர்  நல்ல பல  புனைவுகளை,மிக நேர்த்தியான வடிவமைப்பில்,சர்வதேச தரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நற்றினை பதிப்பகம், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய நாவலாசிரியரான விலாஸ் சாரங் எழுதிய தி மான் ஆப் தம்மா எனும் நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பரும், வாசகரும்,மொழிபெயர்ப்பாளரும்,எழுத்தாளருமான காளிபிரசாத் அவர்கள்.   தமிழின் மொழிபெயர்ப்பு சூழலில் இருந்து பேசத் துவங்குவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129441

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 11 கோட்டைவாயிலில் காத்து நின்றுகொண்டிருந்தபோது யுயுத்ஸு முதன்முறையாக தன் உள்ளம் ஊக்கம் கொண்டு எழுந்திருப்பதை உணர்ந்தான். மீள மீள அக்கோட்டைவாயிலில் எவரெவரோ உள்ளே நுழைவதற்காக அவன் காத்திருந்த நினைவுகள் எழுந்தன. இளமைப்பருவத்தில் எல்லாக் காத்திருப்புகளும் உள்ளத்தை பொங்கி எழச் செய்வதாக இருந்தன. ஒவ்வொன்றும் நகருக்குள் எதையோ புதிதாக கொண்டுவந்தன. அக்கோட்டைவாயில் சிப்பியின் சிறு திறப்பு, உள்ளே வருபவை அங்கே முத்தென உருமாறுகின்றன என்று அரண்மனையில் சொல்லப்படுவதுண்டு. தீய செய்திகள்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129602

Older posts «