Daily Archive: December 31, 2019

காலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்

ஆனந்தரங்கம்பிள்ளை    பாண்டிச்சேரிக்கு 1985ல் நான் முதல்முறையாகச் சென்றேன். ரோமெய்ன் ரோலந்து நூலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்புகளை அப்போதுதான் பார்த்தேன், அதைப்பற்றி பேச்சுவாக்கில் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய சொல்லும்படியாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. அதை நான் வாங்கியதற்கு ஒரே காரணம்தான். அவை மொத்தமாக ஏழு ரூபாய்க்குக் கிடைத்தன. மூன்று தொகுதிகளாக ஆயிரம் பக்கங்களுக்குமேல். ஆனால் மிகப்பழைய பதிப்பு. புரட்டினால் தாள்கள் ஒடிந்துவிடும் அளவுக்கு நைந்தது   அந்நூலை நான் அவ்வப்போதாக வாசித்தேன். என்னை பெரிதும் கவர்ந்தது அதன் நடை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128192

விழா ,கடிதம்-கதிர்முருகன்

 அன்புள்ள ஜெ வணக்கம்..     மருதமலை ரோட்டில் இருக்கும் என் வீட்டிலிருந்து சற்றேறக்குறைய மூன்றாவது கிலோ மீட்டரில் ஆர்எஸ் புரத்தில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்கத்தில் இனிதே நிறைந்தது விஷ்ணுபுரம்  பத்தாம் விருது விழா…     இந்த நிகழ்விற்காக ஆஸ்திரேலியாவிலிந்தும் அமெரிக்காவிலிருந்தும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குழுமியிருந்தவர்களில்  மிகக் குறைந்த பயண நேரத்தில் வந்தவன் நானாகத்தான் இருப்பேன்.     எனக்கு விழா உணர்வு ஒரு நாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128974

விழா-சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ   மற்றுமொரு ஆண்டு கடந்துவிட்டது. இந்த பத்து விழாக்களில் முதல் விழாவிற்கு மட்டும் நான் வந்ததில்லை. ஒன்பது ஆண்டுகளாக வருகிறேன். நம் நண்பர்கள் சிலர் பத்தாண்டுகளாக வருபவர்கள் இருப்பார்கள். எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. எது என்னை திரும்பத்திரும்ப வரச் செய்கிறது?   முதன்மையாக உங்களையும் நம் நண்பர்களையும் காண வேண்டும் எனும் விழைவு. வருடத்திற்கு இருமுறையோ மூன்று முறையோதான் எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு. சுந்தரவடிவேலன், காளி போன்றோரிடம் தினமும் பேசுகிறேன் ஆனால் சந்திப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128970

விழா- கடிதங்கள்- சுபா, யோகா

அன்புநிறை ஜெ, விஷ்ணுபுர விழா தந்த மகிழ்வும் கொண்டாட்டமுமான மனநிலையோடு இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தேன். ஜனவரி 10 சென்னை வந்துவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு இவ்வளவு பெருங்களிப்பின் பின் எழும் துயரை, பிரிவின் அழுத்தத்தை இலகுவாக்கியிருக்கிறது. விழாவைப் பற்றி எண்ணும்போது நதியின் பெரும் பிரவாகத்தில் கலந்துவிட்ட ஒற்றைத் துளியின் அனுபவம் போல ஒரு ஒருமித்த அனுபவமும் அதனிடையே மிதந்து செலலும் தன்னிலை அனுபவமுமாய் இரண்டு பறவைகள் மனதுள் உரையாடிக் கொண்டேயிருக்கின்றன. “உயிர் சுவையுடையது.மனம் தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128982

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 31

பகுதி நான்கு : அன்னையெழுகை – 3 யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து முற்புலரியிலேயே கிளம்பினான். கருக்கிருள் இருக்கும்போதே அவன் பயணத்திற்கான ஆடைகளை அணிந்து அரசமுற்றத்தில் நின்றிருந்த தேரை நோக்கி வந்தான். அவ்வேளையில் அங்கு அவனுடன் பயணம் செய்யும் சிறிய காவலர்படையும், கொடியேந்தியும், கொம்பூதியும் மட்டுமே இருப்பார்கள் என்று அவன் எண்ணினான். அவர்கள் முன்னரே ஒருங்கி நின்றிருந்தனர். காவலர்தலைவன் வாள்தாழ்த்தி தலைவணங்கினான். படிகளில் இறங்கி தெற்கிலிருந்து வீசிக்கொண்டிருந்த குளிர்க்காற்றில் ஆடை பறக்க நின்று தலை நிமிர்ந்து இருண்ட வானில் தொங்கியவைபோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128459