Daily Archive: December 29, 2019

ஒரு கனவு

  விஷ்ணுபுரம் விருதுவிழா ஓர் இலக்கிய கொண்டாட்டமாக இன்று மாறியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா முடிவுறுகையில் இனி என்ன என்னும் கேள்வியே மேலெழுகிறது. இது எளியமுறையில் ஒரு முன்னோடியைக் கௌரவித்து விருது அளிக்கும் நிகழ்வாக தொடங்கப்பட்டது. இயல்பாக முந்தையநாள் உரையாடல்கள் ஒருங்கமைந்தன. அவற்றை முறைப்படுத்தி ஒரு இலக்கியக் கருத்தரங்கு போல ஒருங்கிணைத்தோம்.   ஆனால் இந்நிகழ்ச்சியின் எல்லை இதுவே. இதில் இந்திய அளவில் எழுத்தாளர்களை அழைக்கிறோம். வேண்டுமென்றால் ஓர் எல்லையைக் கடந்துசென்று சர்வதேச அளவில் எழுத்தாளர்களை அழைக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128718

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

  அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள் அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் அன்புள்ள ஜெயமோகன்,   “அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்” படித்தேன். என் தரப்பாக நான் கூற விரும்புவது “இரண்டும் தான்”. ஆனால் பெருமளவில் எதிர்ப்பே.   ஏற்பு:   உலகியலுக்கான நமது கடமைகளை சரியாக செய்வதுவரை நம் படிப்பு ஏற்கப்படுகிறது  என்றே எண்ணுகிறேன்.   ஒரு மாணவனாக தேவையான நல்ல மதிப்பெண் – கல்லூரி முடித்ததும்  ஒரு நல்ல வேலை  – திருமணம் – குழந்தைகள் என சராசரி பெற்றோர்  அந்தந்த பருவத்தில் எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்றிவிட்டு படித்தும் வந்தவன் என்ற என் சொந்த அனுபவத்திலும் இவைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128482

விழா -வாழ்த்துக்கள்

  அன்புள்ள ஜெ,   நலம்தானே?   விஷ்ணுபுரம் விருதுவிழா வரவிருக்கிறது. பத்தாண்டுகளாக இந்த விருதுவிழாவை நான் உங்கள் தளம் வழியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் நேரில் வந்ததே இல்லை. நான் இந்தியாவுக்கு வெளியே வாழ்பவன். வெவ்வேறு நாடுகள். ஆனால் இலக்கியம் என்னை தமிழகத்துடன் இணைத்துக்கொண்டிருக்கிறது.   விஷ்ணுபுரம் விருதுவிழா இலக்கியத்தை ஓர் இயக்கம்போலவே முன்னெடுக்கிறது. முன்பு எழுதியிருந்தீர்கள். க.நா.சு சொன்னதுபோல இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் என்னும் எண்ணமே உங்களைச் செயல்படச் செய்தது என்று. அதேசமயம் அதை மலினப்படுத்தாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128691

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 29

பகுதி நான்கு : அன்னையெழுகை – 1 யுயுத்ஸு அரண்மனையின் உப்பரிகைகள் வழியாக சுரேசரின் அறை நோக்கி சென்றான். செல்லும் வழியில் அவ்வப்போது நின்று கீழே பெருகி அலைகொண்டிருந்த திரளை நோக்கினான். இரவும் பகலுமென அவர்கள் முழங்கிக்கொண்டிருந்தார்கள். அஸ்தினபுரி ஆட்சிசெய்ய முடியாத பெருந்திரளாக மாறிவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதன்மேல் பெருமுரசுகள் ஆணைகளை முழங்கியபடியே இருந்தன. அது எந்த ஆணையையும் செவிகொள்ளவில்லை. “காட்டுயானைக்கு ஆணையிடுவதுபோல் உணர்கிறேன்” என்று சுரேசர் ஒரு மாதம் முன்பு அதை நோக்கி நின்றிருக்கையில் சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128455