Daily Archive: December 28, 2019

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு சந்திப்பின் முழுமை என்பது அதுதரும் நம்பிக்கையும் உத்வேகமும்தான். அவ்வகையில், விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு நற்சந்திப்புத் தருணங்களை உருவாக்கித்தரும் கூடுகையாக நம் எல்லோருக்கும் மாறிவிட்டிருக்கிறது. நேற்றைய முழுபொழுதுமே எங்கள் அனைவருக்கும் அகமகிழ்வும் மனநிறைவும் நிரம்பிவிரிந்தது. நீங்களும், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களும் அளித்த இவ்வாய்ப்புக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம். முதல்நாள் நிகழ்வின் மகிழ்வுத்தருணங்களை புகைப்படக்கலைஞர் வினோத் பாலுச்சாமி காட்சிச்சித்திரங்களாக ஒளிப்படுத்தி இருக்கிறார். உங்களின் மேலான பகிர்வுக்கு அந்த ஒளிப்படங்களின் தொகுப்பை இத்துடன் அனுப்பியிருக்கிறோம்.  இணைப்பு: விஷ்ணுபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128937

விஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019

  விஷ்ணுபுரம் விருது விழா 2019 புகைப்படங்கள் – நாள் -1  

Permanent link to this article: https://www.jeyamohan.in/128932

விஷ்ணுபுரம் விருதுவிழா:வாழ்த்துக்கள்

  அன்புள்ள ஜெ   விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வாழ்த்துக்கள். இம்முறை அபி விருதுபெறுவது ஓர் அரிய நிகழ்வு. ஒரு ஆக்கபூர்வமான இலக்கியச் சூழல் மிகமெல்லிய குரலையும் கேட்பதாக இருக்கவேண்டும். அபி ஒரு சருகு உதிரும் சப்தத்திலே எழுதியவர். [மலர் உதிரும் சப்தம் அல்ல என்று வேண்டுமென்றேதான் சொல்கிறேன். அவருடையது அந்தியின் கவிதை. அதாவது உதிர்வதன் கவிதை] அவருடைய படைப்புக்கள் மேல் வெளிச்சம் விழுந்துள்ளது மகத்தான ஒரு பணி   அபியின் படைப்புக்கள் பற்றிய ஆவணப்படமும் அவர் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128771

புலி : ஜானவி பரூவா

  மானஸ் தேசிய பூங்காவின் நுழைவு வாயிலின் சோதனைச் சாவடியை அவர்களின் கார் சென்றடைந்தபோது சூரியன் மறைந்து, வெளிச்சம் வெகுவாக குறையத்துவங்கி இருந்தது. காரோட்டி லஹுன் காரில் இருந்து இறங்கி சாலையோரத்தில் இருந்த மரத்தாலான காவலர் குடில் நோக்கி சென்றான். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஜீப், அவர்களது அம்பாசிடரை அணுகியதால்,பின்னாலிருந்து எழுந்த சரளைக் கற்களில் டையர்கள் உரசும் ஒலியை கேட்டுக்கொண்டிருந்தாள் பப்லி “இதோ அவங்களும் வந்துட்டாங்களே” என்றபடி முன் இருக்கையிலிருந்து  திரும்பி அப்பா கண்ணாடி வழியாக பின்னால் பார்க்க முயன்றார். அவளது அம்மாவுக்கும், சகோதரன் ரூபுலுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128883

யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை

கவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்   எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும்  ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார். வயல், கடம்பநாட்டு சந்தை, சவறையில் உள்ள அம்மாவின் வீடு, சாஸ்தாம்கோட்டையிலிருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் , ஏ.ஈ.ஓ ஆபீஸ் என அனைத்திற்கும் சைக்கிள் தான். அடூரில் இருக்கும் வங்கிலிருந்து பணயம் வைத்ததை மீட்டு வந்தது அந்த சைக்கிளில்தான். உடல் நலமில்லாத என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128767

பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

கே.ஜி.சங்கரப்பிள்ளை எனக்கு 1986 முதல் அறிமுகம். சுந்தர ராமசாமி ஆசான் விருது பெற்றதை ஒட்டி ஒரு பாராட்டுக்கூட்டம் திரிச்சூரில் ஏற்பாடாகியது. அதை நடத்தியவர்களில் ஒருவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை.. அன்று அவர் முதன்மையான சமூகக் களப்பணியாளர். மாவோயிச சிந்தனைகளில் ஈடுபாடுள்ளவர். அவர்களின் இதழ்களில் முதன்மையாக எழுதியவர். ஆனால் ஆற்றூர் ரவிவர்மா போன்ற கவிஞர்களுடன் ஆக்கபூர்வமான உறவில் இருந்தவர்.   மேடையில் சுந்தர ராமசாமியின் தனுவச்சபுரம் என்ற கவிதையை கே.ஜி.சங்கரப்பிள்ளை. மிகவும் உணர்ச்சிகரமாக பாராட்டிப்பேசினார். “சரி இந்த ஊரென்ன, இப்போது எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128654

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 11 இடைநாழியினூடாக சாரிகர் சத்யபாமையின் பின்னால் நடந்தார். அந்த நாளின் அத்தனை நிகழ்வுகளும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டால் போதும் என்னும் எண்ணம் அவருள் நிறைந்திருந்தது. மானுட உள்ளம் எப்போதுமே பரபரப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. அன்றாடத்தின் மாற்றமின்மையையும் சலிப்பையும் போக்கும் எதுவும் உவகையையே அளிக்கிறது. அது தீங்கானதாக இருப்பினும், கொடியதாயினும். ஆனால் உள்ளத்திற்கு ஒரு கொள்ளளவு உள்ளது. அது நிறைந்ததும் பரபரப்பே சலிப்பூட்டுகிறது. பின்வாங்கி செயலின்மையில் சுருண்டுகொள்ள விழைகிறது அகம். தன் உள்ளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128421