Daily Archive: December 27, 2019

இன்று விஷ்ணுபுரம் விருது விழா

விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. காலையிலிருந்தே கருத்தரங்கு தொடங்கும். பல்வேறுவகைப்பட்ட படைப்பாளிகளை வாசகர்கள் சந்திக்கும் அமர்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. இடம் ராஜஸ்தானி சங் அரங்கு. மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   அபி முந்தையநாளே வந்துவிடுவார். அவரை சந்திக்க விரும்புபவர்கள் சந்திக்கலாம். இரவில் சந்திப்புகள் முடிந்தபின் வழக்கம்போல இலக்கிய வினாடிவினா. குவிஸ் செந்தில் நடத்துகிறார்.   மறுநாள் காலை 9 மணிமுதல் சந்திப்புகள் நடைபெறும். அபி மற்றும் சிறப்பு விருந்தினர்களுடனான உரையாடல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128689

மலேசியா- இரு விருதுகள்

  மலேசியாவிலிருந்து நேற்று [25-12-2109] நள்ளிரவில் திருவனந்தபுரம் வந்திறங்கினோம். பின்னிரவு மூன்று மணிக்கு நாகர்கோயில். தூங்கி விழித்து இன்று [26-12-2109] மாலை கோவை விழாவிற்கு. கோவை விழாவில் என்னுடைய பங்கு என்பது அவ்வளவுதான். முழுக்கமுழுக்க நண்பர்களே நடத்தும் விழாவாக மாறிவிட்டிருக்கிறது. நான் கடைசி நேரத்தில் மற்ற விருந்தினர்களுடன் ஒருவராகச் சென்று சேர்கிறேன். என்ன நடக்கிறது என அதற்குமேலும் கண்டுகொள்வதில்லை.   சொல்லப்போனால் விழா முதல் ஆண்டுமுதலே இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதன் அமைப்பாளர்கள் தொழில்முறையாகவே நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள். இதைவிடப்பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128896

விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்

  விஷ்ணுபுரம் விருதுவிழா, மற்றும் அரங்குகள் தொடங்கும்போது ஒவ்வொரு முறையும் அதன் முறைமைகள் நெறிகள் குறித்து எழுதவேண்டியிருக்கிறது. இம்முறையும்   முறைமையும் நெறிகளும் இல்லாத அரங்கு என ஒன்று இல்லை, அப்படியொன்று உலகில் எங்கும் நிகழ்வதுமில்லை. ஆனால் தமிழகத்தில் முதிரா இலக்கியவாதிகள் நடுவே இலக்கியம் முறைமையும் நெறிகளும் இன்றியே நிகழமுடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அது நம் மதுக்கடை உளறல்களில் இருந்து உருவானது. கூடுதல்குடித்தவர் கூடுதலாக உளறுவது என்பதே அங்குள்ள நெறி.   தமிழகத்தில் அவ்வாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128551

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் கவிதைகள் உங்கள் தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது – கொஞ்சம் அரசியல் பேசி தன்னை தானே கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் ” நெஞ்சோடு கிளத்தல் வகையிலான கவிதைகள் இவை அனைத்தும்.     முழுதாக வசித்தாலும் துண்டாக நாலைந்து வரி வாசித்தாலும் இக்கவிதைகள் தரும் அனுபவங்கள் மிகவும் புதியவை,மனம் ஏற்கனவே அறிந்ததை சரியாக சுட்டும் வார்த்தை அடுக்குகள் – என்ன ஒரு பகடி – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128916

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 10 சாரிகர் தன் அறையின் மஞ்சத்தில் நினைவு மீண்டார். அவரருகே ஏவலன் நின்றிருந்தான். “துயில்கொள்க… பீதர்நாட்டு ஓய்வுமருந்து தரப்பட்டிருக்கிறது” என்றான். அவர் உள்ளத்தில் எந்நினைவும் இருக்கவில்லை. அவர் வெறுமனே ஏவலனை நோக்கிக்கொண்டிருந்தார். கையூன்றி எழமுயன்றபோது ஓர் உலுக்கலாக அனைத்தும் விழிகளுக்குள் தோன்ற விக்கலோசையுடன் மஞ்சத்தில் விழுந்தார். ஏவலன் நீர்க்குவளையை எடுத்து நீட்ட அதை வாங்கி உடல்முழுக்க சிந்தும்படி அருந்தினார். நீர் உள்ளே சென்று வெம்மையை அணைத்தது. கண்களை மூடி குருதித்தெறிப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128419