தினசரி தொகுப்புகள்: December 25, 2019
மாயவி(த்)தை- ஜானவி பரூவா
விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
நவம்பர் மாதத்தின் ஒரு காலை. நபகிரஹா மலைப்பகுதியில் இருக்கும் ஹாப்பி வில்லாவில் வசிக்கும் ஜியு தாஸ் உற்சாகத்துடன் விழித்துக் கொண்டாள். படுக்கையில் எழுந்தமர்ந்து தன்னைச் சுற்றியிருந்த...
பீடமா?
அன்புள்ள ஜெ
மீண்டும் ஒரு கேள்வி, இதையும் கேட்டுவிட்டால் முடிந்தது. நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டாலும் சரி. நீங்கள் ஒரு இலக்கியபீடம் ஆக, இலக்கிய அதிகாரமையம் ஆக முயல்கிறீர்களா? விஷ்ணுபுரம் விழா உட்பட நீங்கள் செய்துகொண்டிருக்கும்...
சொல்
ஆழ்ந்த
தனித்த
துயருற்ற
ஒன்று
பிரார்த்தனை செய்யவேண்டியதில்லை.
அதன் இருப்பே ஒரு பிரார்த்தனை
அதன் சலிப்பும் நம்பிக்கையும்
துயிலும் விழிப்பும் மன்றாட்டுக்கள்
ஒரு சொல்லை
மிகமிகக் கவனமாக நகர்த்துபவன்
ஒரு சொல் நகர்ந்த இடைவெளியை
திடுக்கிடலுடன் கண்டுகொள்பவன்
வேறெந்த தோத்திரத்தையும் தேடுவதில்லை.
நாவரைக்கும் வந்தமையாத
சொற்கள் ஒவ்வொன்றும் சிறுபுயல்கள்.
அழியாதவற்றை கண்டுகொண்டபின்
அவன் எழும்போது
முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனாக...
கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை
மற்றவன்
அரிவாளிலிருந்து
ஓங்காரம் பிறந்தது
அல்லது
ஓங்காரத்திலிருந்து
அரிவாள் வந்தது
என்று குஞ்சம்பு வாதிட்டான்
அதாவது
கருத்திலிருந்து ஆயுதமும்
ஆயுதத்தில் இருந்து கருத்தும்
செவுளில் ஓர் அறைவிழ
குஞ்சம்பு கீழே விழுந்தான்
ஓங்காரத்திலிருந்தோ
அரிவாளிலிருந்தோ
அடியுண்டாகலாம் என்று ஒருவன் சொன்னான்
ஓங்காரத்தில் இருந்து உண்டாகாது
என்று ஒருவன்
அரிவாளில் இருந்து உண்டாகாது
என்று இன்னொருவன்
அடி என்பது
படைப்பிலிருந்து
பிசாரை விரட்டுதல்
என்று ஒருவன்...
விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்
https://youtu.be/rR-HyMwAV1o
https://youtu.be/XGXhV-8bCtA
https://youtu.be/ZFvSYdIhm4U
https://youtu.be/jEm_mm58LA4
https://youtu.be/grSkpASZfp8
https://youtu.be/4onZFo2QEl8
https://youtu.be/8vqjKBqQzPk
விஷ்ணுபுரம் விருது 2016 ஆண்டு வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 8
சத்யபாமையின் அறைவாயிலில் நின்றிருக்கையில்தான் சாரிகர் அவர் அங்கே எதற்காக வந்தார் என்பதை நினைவுகூர்ந்தார். அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை தன்னுள் உருவாக்கிக்கொள்ள முயன்றார். அதற்குள் கதவு திறந்து...