Daily Archive: December 25, 2019

மாயவி(த்)தை- ஜானவி பரூவா

விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா   நவம்பர் மாதத்தின் ஒரு காலை. நபகிரஹா மலைப்பகுதியில் இருக்கும் ஹாப்பி வில்லாவில் வசிக்கும் ஜியு தாஸ் உற்சாகத்துடன் விழித்துக் கொண்டாள். படுக்கையில் எழுந்தமர்ந்து தன்னைச் சுற்றியிருந்த போர்வையை மெதுவாக விலக்கினாள். நளினமாக சுழன்று திரும்பியவள் படுக்கை விளிம்பில் நிலைகொண்டு சிமெண்ட் தரையை பார்த்தாள்.  அவளுடைய செருப்புகள் குட்டையான அவளது கால்களுக்கு எட்டாத தூரத்தில் தரையில் ஒழுங்காக விடப்பட்டிருந்தன. ஜியு கன்னங்களை உள்ளிழுத்து உறிஞ்சி உள்ளங்கைகளை படுக்கையில் தனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128811

பீடமா?

அன்புள்ள ஜெ   மீண்டும் ஒரு கேள்வி, இதையும் கேட்டுவிட்டால் முடிந்தது. நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டாலும் சரி. நீங்கள் ஒரு இலக்கியபீடம் ஆக, இலக்கிய அதிகாரமையம் ஆக முயல்கிறீர்களா? விஷ்ணுபுரம் விழா உட்பட நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கான காரணம் இதுதானா?   எஸ்.செல்வக்குமார் அன்புள்ள செல்வக்குமார்,   இத்தகைய வம்புகள் விஷ்ணுபுரம் விழா எப்படி நிகழ்வது என்பதை நேரில் வந்து பார்க்காதவர்கள், பார்த்தும் உளம்கொள்ளாதவர்களின் வம்புகள் மட்டுமே. இவ்விழா தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இன்றுவரை ஓர் அரங்கில்கூட என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128589

கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

மற்றவன்   அரிவாளிலிருந்து ஓங்காரம் பிறந்தது அல்லது ஓங்காரத்திலிருந்து அரிவாள் வந்தது என்று குஞ்சம்பு வாதிட்டான் அதாவது கருத்திலிருந்து ஆயுதமும் ஆயுதத்தில் இருந்து கருத்தும்   செவுளில் ஓர் அறைவிழ குஞ்சம்பு கீழே விழுந்தான்   ஓங்காரத்திலிருந்தோ அரிவாளிலிருந்தோ அடியுண்டாகலாம் என்று ஒருவன் சொன்னான் ஓங்காரத்தில் இருந்து உண்டாகாது என்று ஒருவன் அரிவாளில் இருந்து உண்டாகாது என்று இன்னொருவன்   அடி என்பது படைப்பிலிருந்து பிசாரை விரட்டுதல் என்று ஒருவன் சொன்னான் இல்லை படைப்புத்தெய்வத்தை துரத்திவிடுவது என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128684

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்

  விஷ்ணுபுரம் விருது 2016 ஆண்டு வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/128383

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 8 சத்யபாமையின் அறைவாயிலில் நின்றிருக்கையில்தான் சாரிகர் அவர் அங்கே எதற்காக வந்தார் என்பதை நினைவுகூர்ந்தார். அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை தன்னுள் உருவாக்கிக்கொள்ள முயன்றார். அதற்குள் கதவு திறந்து அவரை ஏவற்பெண்டு உள்ளே அழைத்தாள். அவர் உள்ளே நுழைந்து அந்தச் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த சத்யபாமையை வணங்கினார். அவர் அவளைப் பற்றிய பாடல்களையே கேட்டிருந்தார். அவருடைய எண்ணங்களுக்கு மாறாக அவள் முதுமையடைந்து களைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தெரிந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தமான கீறல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128340