தினசரி தொகுப்புகள்: December 24, 2019

’நான் நினைச்சதையே எழுதிட்டீங்க!’

  அன்புள்ள ஜெ,    "என் மனதில் இருந்ததை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்" என்று சொல்வது பாராட்டு அல்ல; அவமதித்தல். "இதில் புதிதாய் ஏதும் இல்லை, எல்லாம் நான் ஏற்கனவே அறிந்தது தான்" என்பதே அதன் உட்பொருளாகக்...

விஷ்ணுபுரம் விழா- நிறைவும் கனவும்

விஷ்ணுபுரம் விருதுவிழா தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. பத்தாண்டுகளுக்கு முன் மிகச்சிறிய அளவில் இதைத் தொடங்கினோம். நண்பர்களின் நிதியுதவி மட்டும். அன்று ஒருலட்சம் ரூபாய் மொத்தச்செலவு - ஐம்பதாயிரம் விருது. இன்று கருத்தரங்குகளுடன் பெரிய இலக்கியவிழாவாக...

வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை

அவேதியர்   அருவருப்புக்கு வெறுப்பின்மேல் காதல் வந்தது சித்திரையிலோ மார்கழியிலோ தம்பதிகளானார்கள்   நகரநாற்றத்தில் ஒரு வாடகை வீட்டில் இடுங்கலான அறையில் ஒருவருவருக்கு மற்றவர் நிழலாகவும் சிலசமயம் தீயாகவும் வசித்தார்கள்.   சுயநலமுனிவர் குரோதமுனிவர் லாபமுனிவர் கிறுக்குமுனிவர் காமமுனிவர் பிறந்து பிறந்து மைந்தர் புதிய பன்னிரு குலங்களானார்கள்   ரட்சகரும் ராட்சதரும் இல்லாத அன்னமும் அக்னியும் விளையாத கவிதையில் அவர்கள் சந்தஸும் தேவதையும் இல்லாத அவேதங்களைப் படைத்தனர்   மேல்நோக்கியோ கீழே நோக்கியோ உருட்டவில்லை பாறையை   அந்த அபத்தப்பாரத்தை உடைத்து வீடும் மதிலும் கட்டினர்   சத்தியத்திற்கு சர்வேக்கல் சிவத்திற்கு விக்ரஹம் அழகுக்கு தாமரை சக்திக்கு மந்திர் தியாகத்திற்கு பலிபீடம் உறவுக்கு சிறை வேகத்திற்கு வெட்கிரைண்டர் மறதிக்கு எதிராக நினைவின் டூரிசமாக புத்தன் காந்தி...

கவிதையின் ஊடுபாதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என் பார்வைக்கு வந்தது. அவர் அளிக்கும் ஏராளமான cross references மிக முக்கியமானவை என நினைத்தேன். வரலாறு, சினிமா, அரசியல், சமகாலச் செய்திகள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 24

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 7 நினைத்திருந்ததைவிட துவாரகைக்கு தொலைவில் முன்னதாகவே அஸ்வபதம் அமைந்திருந்தது. அதை அணுகுவதுவரை பாலை முடிந்து புல்வெளி தொடங்குவதை சாரிகர் உணர்ந்திருக்கவில்லை. பாலை தொடங்கியதைப் போலவே முடிவுற்றதையும் அறியமுடியவில்லை....