Daily Archive: December 23, 2019

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வளர்ந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இப்பத்தாண்டு நிறைவை ஒட்டி நம் நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஒன்றை நடத்தலாம் என எண்ணினோம். இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது எங்கள் நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128835

‘விழிப்பு’- ஜானவி பரூவா

அனுஜை வீட்டுக்குக் கொண்டுவந்த அந்த நாளில் மலையையே புரட்டிவிடும் என்று தோன்றுமளவுக்கு பலமான காற்று வீசிக்கொண்டிருந்து. அந்தக் கருமையான காற்று நதியில் இருந்து உருவானது. செங்க்குத்தான கரையில் ஏறி, வெண்ணிற மணலை வாரி வீசியது. எந்தப் பாதுகாப்புமில்லாத அந்த ஊரின்மீது அந்த மண்ணை கொடுமையாக பொழிந்து சென்றது. உமாவுக்கு அந்தப் புயல் நன்றாக நினைவிருந்தது. அந்தப் புயல் அவளுக்குள் உருவாக்கிய சீற்றத்தை அவளால் மறக்க முடியவில்லை, தன்னையறியாமல் வந்த அந்த  கட்டுப்பாடில்லாத, வெறுப்பூட்டும் தனித்த கோபம் அது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128783

வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை

காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது     உலகுக்கு வந்துசேர்வது கடினம் உலகை விட்டுச்செல்வதும் கடினம் போவது என்றால் என்னை நான் விடுவித்து எடுப்பதா அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா?   எல்லாவற்றிலும் ஒன்றுக்கொன்று வளர்வது தொலைவு எல்லாவற்றிலும் வாழ்வதும் தொலைவு   வெயில் தொடுவதில்லை வந்து காற்று தழுவுவதில்லை வந்து காதலும் வாழ்த்துவதில்லை முழுக்க மரணமும் மறைப்பதில்லை முழுக்க எதிரியும் கசப்பதில்லை முழுக்க தோல்வியும் வீழ்த்துவதில்லை முழுக்க பிரக்ஞை செயல் கொந்தளிப்பு எதுவும் நிகழ்வதில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128645

நம்பிக்கையிலிருந்து தொடங்குவது

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… அன்புள்ள ஜெ,   எதிர் விமர்சனங்களைத் தவிர்த்தல் என்னும் கட்டுரை கொஞ்சம் அந்தரங்கமானது. அதை ஏன் பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றியது. பதிவுசெய்தாலும் ஏன் அதில் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும்? அதற்கு ஒரு கிசுகிசுத்தன்மை உருவாகிறதே?   நான் ஒருவிஷயத்தைக் கவனித்தேன். இந்த விஷ்ணுபுரம் விழா டிசம்பரில் உருவாவதை ஒட்டியே நீங்கள் விலகிச்செல்பவர்கள் குறித்து ஒரு நஸ்டால்ஜியாவை அடைகிறீர்கள். பழைய கடிதங்கள், குறிப்புகளை எடுத்துப் படிப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் என்ன பயன்? நஸ்டால்ஜியா என்பது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128658

விஷ்ணுபுரம் உரைகள் 2018

அனிதா அக்னிஹோத்ரி உரை     தேவிபாரதி உரை   ராஜ் கௌதமன் உரை   ஸ்டாலின் ராஜாங்கம் உரை   மதுபால் உரை   2018 ஆம் ஆண்டு பேரா ராஜ் கௌதமனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருதை ஒட்டி  நிகழ்ந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/128376

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதம்

வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை அன்பு ஜெயமோகன்,   கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,   வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப் பின்னிருக்கும் அகத்தத்தளிப்பில் இருந்து என்னால் விடுபடவே இயலவில்லை. பலநாட்கள் அக்கவிதையைத் தொடர்ந்து வாசித்தபடியே இருந்தேன்.   நெளியும் உயிர் போல ஒரு கெட்ட வெளிச்சம், செம்புக்குடத்தில் இருந்த இருள், சற்றே பெய்த ஒரு குளிர்கனவு போன்ற பதங்களால் திகைத்ததைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128831

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 23

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 6 அவந்தியின் எல்லை கடப்பது வரை சாரிகர் பாலை என்பது என்னவென்று அறிந்திருக்கவில்லை. நூல்களில் அந்நிலத்தைப் பற்றிய பலநூறு விவரிப்புகளை அவர் படித்திருந்தார். அவையெல்லாம் வெறும் சொற்கள் என்பதை அவ்விரிவின் முன் விழிதிகைத்து நின்றிருக்கையில்தான் உணர்ந்தார். பாலை தொடங்குவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவந்தியின் எல்லைவரை பாலை நிலம் இல்லை என்பதே அவர் அறிந்திருந்தது. ஆனால் பாலை என அறியப்படும் நிலம் நெடுந்தொலைவுக்கு முன்னரே நால்வகை நிலத்தின் திரிபென தெரியத்தொடங்கியது. மரங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128266