Daily Archive: December 22, 2019

சராசரி நடையும் புனைவுநடையும்

  அன்புள்ள ஜெ,   நலம்தானே?   நான் தமிழில் எழுதத்தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படைப்புக்களை இங்கே சில மூத்த வாசகரகளிடம் அளித்தேன். அவர்கள் வாசித்துவிட்டு நான் என் தமிழறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். சொற்றொடர்களை வாசித்து அவற்றிலுள்ள இலக்கணப்பிழைகளையும் பொருள்மயக்கங்களையும் சுட்டிக்காட்டினார்கள்.   அவர்கள் சொல்வதுபோல ஒருவரியை தனியாக எடுத்துப்பார்த்தால் அவற்றில் அர்த்தம் மாறுபடுவது எனக்கும் தெரிந்தது. ஆனால் நான் எழுத நினைக்கும் எழுத்து மனத்தின் ஓட்டத்தைச் சொல்வது. இவர்கள் சொல்வதுபோல எண்ணி கூட்டி எழுதினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128596

சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சுழல்வட்டம்   பூமாலையோ பொன்மாலையோ காசுமாலையோ சிலுவைமாலையோ தாலியோ வெள்ளைக்காலரோ ஸ்டெதெஸ்கோப்போ ருத்ராக்ஷமோ சங்கிலியோ கயிறோ பாம்போ நஞ்சுநீலமோ சுற்றித்தழுவும் உன் கைகளோ   கழுத்திலிருப்பதே என் சுழல்வட்டம் விலாசம் பெயர் பாதி தன்னுணர்வில்…   கிழங்கையெல்லாம் தின்று என் விளைநிலத்தை வரளச்செய்தது யார்?   விதையறையை துளைத்து என் அடுத்தபோகத்தை அழித்தது யார்? முழவுத்தோலில் ஓட்டையிட்டு என்னை முழங்காமலாக்கியது யார்?   அடித்தளம் கூரையென என் உறுதிகளையெல்லாம் உள்ளூரக்குடைந்து மட்கவைத்தது எந்த மரணச்சரம்?   நெற்குவியலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128639

கே.ஜி.சங்கரப்பிள்ளை – கடிதங்கள்

பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள் விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1 அன்புள்ள ஜெ,   கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் அபாரமான புத்துணர்ச்சியை அளிக்கின்றன. ஒரு சூழலில் எழும் கவிதைகளுக்கு மொழியிலும் அமைப்பிலும் பார்வையிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. புறநாநூற்றுக்காலம் முதல் அப்படித்தான்.ஆகவே ஒரு அயல்மொழியிலிருந்து வரும் கவிதை புத்தம்புதியதாக இருக்கிறது.   கே.ஜி.சங்கரப்பிள்ளை எல்லா வகைக் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இரண்டு கவிதைகள் எனக்கு மிக முக்கியமானவையாக தெரிந்தன. குற்றாலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128650

விஷ்ணுபுரம் விருதுவிழா 2017 உரைகள்

      2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியப்படைப்பாளியான சீ முத்துசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் ஆற்றப்பட்ட உரைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/128381

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 5 சாரிகர் துவாரகை பயணத்தில் முற்றிலும் பிறிதொருவனாக தன்னை உணர்ந்தார். அவர் உடல் புழுதிபடிந்து, வெயிலில் வெந்து கருமைகொண்டு, மயிர் பழுப்பேறி, உதடுகள் கருகி நீர்ப்பாவையை நோக்கியபோது முற்றிலும் பிறிதொருவன் தெரிந்தான். அவருடைய குரலை அவரே திகைப்புடன் அவ்வப்போது கேட்டார். அவருடைய நிழலசைவை திரும்பி நோக்கி யார் என திகைத்தார். அந்தப் பயணத்தின் பதினேழு நாட்களில் அவர் வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு மானுடர்களாக பிறந்து வாழ்ந்தார். அவந்தியை அடையும்போது தன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128256