Daily Archive: December 20, 2019

தேசபக்தர்- ஜானவி பரூவா.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிந்தவுடன் தீரன் மஜும்தாரின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பவழமல்லி மரம் பூத்துக் குலுங்கத் துவங்கி விடும். வான் நோக்கி வளர்ந்திருக்கும் அதன் மெல்லிய கிளைகளில் மொட்டவிழ்ந்து நிற்கும் அந்த மலர்களை அதிகாலை ஒளியில் காணும்பொழுது இலைகளிலிருந்து முத்துக்கள்தான் இவ்வளவு உன்னதமாக எழுந்து நிற்கின்றனவோ என்று தோன்றுமளவிற்கு அவை பளபளப்புடன் காணப்படும். அதைக்காணும்பொழுதெல்லாம் தீரன் மஜும்தாருக்கு உள்ளம் உற்சாகத்தில் துள்ளும். தான் எத்தனை அபாயங்களைக் கடந்து சென்று அதைப் பறித்து வருகிறோம் என்ற பெருமிதமும் அவருடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128749

வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சிதையும் சிதறலும்   அம்மா போய்விட்டால் வீடு காடாகிவிடும் முன்னரே இறந்தவர்களின் படங்களுக்கு பின்னால் சுவர் விரிசலிடும் அதில் நெளியும் உயிர் போல ஓரு கெட்டவெளிச்சம் தலைநீட்டும் கல்லும் கல்லும் விலகும் அகம் புறமாகும் குருதி குருதியைப்பற்றி பொழியும் நீரிடம் குறைசொல்லும் வீட்டை வீடாக அடுக்கி நிறுத்தியிருந்த குளிர்ச்சூழலும் குளமும் மந்திரங்களும் அவிழும் வீடாகியிருந்த நிழலும் வெளிச்சமும் மரங்களுக்கே திரும்பும் செம்புகுடத்தில் இருந்த இருள் காட்டுக்குகைக்கே மீண்டு செல்லும் தரைவிரிப்பில் இருந்த பூக்களும் கொடிகளும் கொடுங்கனவில் வேரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128599

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

        விஷ்ணுபுரம் விருது விழா காணொளிகள். ஆரம்பநாட்களில் முறையாக ஒளிப்பதிவு செய்து வலையேற்றம் செய்யவில்லை. காணக்கிடைத்தவை இவை. நினைவுகளில் இருந்து எழுகின்றன

Permanent link to this article: https://www.jeyamohan.in/128385

மலேசிய விருது- கடிதம்

  அன்பின் ஜெமோ சார்,   நலம். என்றும் உங்களுக்கு நாடுவதும் அதுவே.   தங்களின் மலேசியா வருகை அளிக்கும் உவகை சொல்லின் பாற்பட்டதல்ல. கூடுதலாக இவ்வாண்டு தியான ஆசிரமத்தின் அருள் விழாவில் தாங்கள் சொற்பொழிவாற்றுவதோடு இவ்வாண்டு அருளாளர் விருதை நீங்கள் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.   இவ்விருதை இவ்வருடம் உங்களுக்கு வழங்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டப்போது ஆச்சர்யமாக கூடவே எங்கள் அனைவருக்கும் எழுந்த எண்ணம் இவ்விருதை நீங்கள் ஏற்பீர்களா என்ற சந்தேகமே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128809

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 20

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 3 சாரிகர் அரண்மனைக்குத் திரும்பியபோது புலரி எழுந்திருந்தது. அவர் யுயுத்ஸுவை பார்க்கவில்லை. அவர் ஓய்ந்து மையச்சாலைக்கு வந்தபோது அங்கே யுயுத்ஸுவின் தேர் நின்றிருக்கவில்லை. அவர் அதற்குமேல் எண்ணவுமில்லை. அவர் எண்ணங்கள் சேற்றில் புதைந்தவைபோல அசைவிழந்திருந்தன. தள்ளாடும் நடையுடன் சாலைக்கு வந்து அங்கே நின்றுகொண்டிருந்த அரசப்படைவீரன் ஒருவனிடம் தன் கணையாழியைக் காட்டி புரவியை வாங்கிக்கொண்டு அரண்மனைக்கு மீண்டார். செல்லும் வழியிலேயே துயின்றுவிட்டார். புரவி அரண்மனைக்கு வந்து முற்றத்தில் நின்றபோதுதான் விழித்துக்கொண்டார். அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128222