தினசரி தொகுப்புகள்: December 19, 2019
மலேசியப் பயணம்
இன்று திருவனந்தபுரத்திலிருந்து மலேசியாவுக்குக் கிளம்புகிறேன். நேராக பினாங்கு, அங்கிருந்து கூலிம். கூலிம் ஆசிரமமும் சுவாமி பிரம்மானந்தாவும் என் இனிய நினைவுகள். மலேசியா என்றாலே கொலாலம்பூர்தான் பெரும்பாலானவர்களின் நினைவில். நான் மலேசியாவின் உள்ளூர் முகம்...
சோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை
சோலை
வழியோர மரங்கள்
உடன்பிறந்தார் அல்ல
அகன்று வளர்வதில்லை
நண்பர்களும் அல்ல
அருகே வந்து முட்டிக்கொள்வதில்லை
தோழர்களல்ல
நிலைபாடுகளில் மாற்றமில்லை.
காதலர்கள் அல்ல
கட்டித்தழுவிப்புரள்வதில்லை
அன்புநோயும்
துரோகநோயும் இல்லை
இறந்தவர்களில் நிலைபேறுகொண்டவர்கள் மட்டுமே
மரங்களாக உயிர்த்தெழுகிறார்கள்
எரிவெயிலில்
நிழல் வரையும் ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே
பெருமரங்களென எழுகிறார்கள்.
பயத்தால் ஒருவன்
பயத்தால் ஒருவன்
பேசிப்பேசி பொழுதைப்போக்கினான்
காதலியை தொடவேயில்லை
சினிமா போல் ஒன்றும்...
பாம்பாக மாறும் கை – கடிதம்
வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை
அன்புள்ள ஜெ,
கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் சில கவிதைகளை நான் எண்பதுகளில் கேரளத்தில் எர்ணாகுளத்தில் வேலைபார்க்கும்போது மேடையில் கேட்டிருக்கிறேன். இன்றுதான் அதன் முழுமையான மொழியாக்கத்தை வாசித்தேன். அன்று அது ஒரு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 19
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 2
யுயுத்ஸு மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சாரிகர் உடன் சென்று அமர்ந்தார். யுயுத்ஸு “என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. இதைப்போல ஒரு பெருங்கொந்தளிப்பை அரசால் எந்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது....