Daily Archive: December 19, 2019

மலேசியப் பயணம்

இன்று திருவனந்தபுரத்திலிருந்து மலேசியாவுக்குக் கிளம்புகிறேன். நேராக பினாங்கு, அங்கிருந்து கூலிம். கூலிம் ஆசிரமமும் சுவாமி பிரம்மானந்தாவும் என் இனிய நினைவுகள். மலேசியா என்றாலே கொலாலம்பூர்தான் பெரும்பாலானவர்களின் நினைவில். நான் மலேசியாவின் உள்ளூர் முகம் என அறிந்த ஊர் கூலிம்தான்.   நான் 2006ல் முதல்முறையாக மலேசியா சென்றேன். சிங்கப்பூரிலிருந்து சண்முகசிவா – நவீன் ஆகியோரின் அழைப்பின் பேரில். அதன்பின் பலமுறை. ஆனால் கூலிம் சென்று அங்கிருந்து பினாங்கு சென்றபோதுதான் மலேசியாவின் முழுமையை அறிந்துகொண்டேன் என்று சொல்லவேண்டும். மலேசியாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128752

சோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை

  சோலை   வழியோர மரங்கள் உடன்பிறந்தார் அல்ல அகன்று வளர்வதில்லை நண்பர்களும் அல்ல அருகே வந்து முட்டிக்கொள்வதில்லை தோழர்களல்ல நிலைபாடுகளில் மாற்றமில்லை. காதலர்கள் அல்ல கட்டித்தழுவிப்புரள்வதில்லை அன்புநோயும் துரோகநோயும் இல்லை   இறந்தவர்களில் நிலைபேறுகொண்டவர்கள் மட்டுமே மரங்களாக உயிர்த்தெழுகிறார்கள் எரிவெயிலில் நிழல் வரையும் ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே பெருமரங்களென எழுகிறார்கள்.       பயத்தால் ஒருவன்     பயத்தால் ஒருவன் பேசிப்பேசி பொழுதைப்போக்கினான் காதலியை தொடவேயில்லை சினிமா போல் ஒன்றும் நடக்கவில்லை யாருமில்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128531

பாம்பாக மாறும் கை – கடிதம்

வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை அன்புள்ள ஜெ,   கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் சில கவிதைகளை நான் எண்பதுகளில் கேரளத்தில் எர்ணாகுளத்தில் வேலைபார்க்கும்போது மேடையில் கேட்டிருக்கிறேன். இன்றுதான் அதன் முழுமையான மொழியாக்கத்தை வாசித்தேன். அன்று அது ஒரு சொற்பொழிவுபோலத் தோன்றியது. இன்று அந்தக்கவிதையின் அழகு தெரிகிறது   அன்றைக்கு நான் தமிழ்நவீனக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஆகவே இக்கவிதை மிக நீளமானது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இப்போது வாசிக்கையில் ஒன்று தோன்றுகிறது. இத்தகைய நீளமான கவிதைகளில்தான் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128716

விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை

  அன்புள்ள ஜெ கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை வாசிக்கையில் எல்லாம் நினைத்துக்கொள்வேன், அப்படியொரு இலக்கிய விழா சென்னையில் இல்லையே என்று. இத்தனை எழுத்தாளர்கள் ஓரிடத்தில் கூடி இடைவிடாமல் இலக்கிய விவாதம் நிகழ்வதும் இளம்படைப்பாளிகளும் வாசகர்களும் கூடுவதும் மிகமிக அரிதான நிகழ்ச்சிகள். நான் 2013 ஆம் வருடம் மட்டும் வந்து கலந்துகொண்டேன். டிசம்பர் முடிவில் லீவு எடுத்துக் கிளம்புவது மிகவும் கடினமானது. ஒருநாள் என்றால்கூட வந்துசெல்லலாம். கோவையில் இது ஒரு அருமையான நிகழ்ச்சி என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128485

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 19

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 2 யுயுத்ஸு மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சாரிகர் உடன் சென்று அமர்ந்தார். யுயுத்ஸு “என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. இதைப்போல ஒரு பெருங்கொந்தளிப்பை அரசால் எந்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு நெடுநாளைய நம்பிக்கைகளும் ஒழுக்கநெறிகளும் தேவை. அஸ்தினபுரியில் முன்பு அது இருந்தது. அலைகடலை கரை என அது இந்நகரைக் காத்தது. இன்று இம்மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து கூடியவர்கள். இவர்களை நாம் அறியோம். இவர்களுக்கும் இங்குள்ள அரசையும் நெறிகளையும் தெரியாது…. ” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128220