Daily Archive: December 18, 2019

சசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி

இந்தியாவின் இருண்ட்காலம் வாங்க\ இவ்வாண்டு மலையாளத்துக்கு சாகித்ய அக்காதமி ஏமாற்றம். மதுசூதனன் நாயர் ஒரு கவிஞரே அல்ல. அலங்காரச் சொற்கூட்டி. பாடகர். ஆனால் பெரும்புகழ்பெற்றவர், வேறுவழியில்லை. ஆனால் இவ்வாண்டுக்குரிய சாகித்ய அக்காதமி விருதுகளில் இன்னொரு மலையாளி குறிப்பிடத்தக்கவர். சசி தரூர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருது பெற்றுத்தந்த நூல்An Era of Darkness: The British Empire in India இது ‘இந்தியாவின் இருண்டகாலம்’ என்ற பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது வெறுமே ஒரு பார்வைக்கோணத்தை முன்வைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128804

சோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி

  2019 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது நாவலாசிரியர் சோ.தர்மனுக்கு சூல் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. முப்பதாண்டுகளாக எழுதிவரும் சோ.தர்மன் தெற்குத் தமிழ்நாட்டின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலில் எழுதும் படைப்பாளி. அங்கத நோக்குடன் மானுடரின் இயல்புகளை பார்ப்பவை அவருடைய நாவல்கள். ’துர்வை’ ‘கூகை‘ ‘சூல்’ போன்றவை அவருடைய முக்கிய்மான படைப்புக்கள் சோ.தர்மனுக்கு வாழ்த்துக்கள்   சூல் –ஒரு பார்வை கூண்டுகள் விடுதலைகள் சோ.தர்மன், காலச்சுவடு சோ.தர்மன் சோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது இரு படைப்பாளிகள் எழுத்தாளனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128797

குடிமக்கள் கணக்கெடுப்பு

  இப்போது குடிமக்கள் கணக்கெடுப்பு, குடியுரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பலரும் கேட்கிறார்கள். இச்சிக்கலின் முழுவடிவை உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அரசியல் நோக்கங்களுக்கு உட்பட திரித்து, மிகையாக்கி, கூறப்படும் கூற்றுக்களே நீண்ட கட்டுரைகளாகக் கிடைக்கின்றன. இருதரப்பிலும் இவற்றுக்கு அப்பாற்பட்டு மெய்யாகவே இதை புரிந்துகொள்ள முடியவில்லை. என்னைப்போலத்தான் இன்று பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் தெளிவாகவே ஒன்று புரிகிறது, இஸ்லாமியர்களிடம் உருவாகியிருக்கும் அச்சமும், ஆவேசமும். அது இப்பிரச்சினையில் இருந்து தொடங்குவதல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128765

காலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

  காலியிடங்களின் காட்சி   கண்டும் கேட்டும் நடந்தும் நெரிந்தும் கூட்டத்தில் அலைக்கழியாமல் என்ன திருவிழா? நிலத்தில் ஒரு கால்விரல் மட்டுமே தொடமுடியும் தொடவேண்டும்   அந்த நிலயில்லா நிற்பில் அருகே வருகின்றது வாடிய புல் சாய்ந்த ஒரு துளி மண். வெறுமை, மௌனம்,மறதி திருவிழாவைவிட எனக்கு பிடித்திருக்கிறது அந்த காலியிடங்களின் காட்சி   ஒருவருக்கோ ஒரு விளக்குத்தூணுக்கோ நிற்பதற்குரிய இடம் ஒரு நினைவின் மின்னியணைதலோ மறுசிந்தனையோ நீள்மூச்சோ விரிவதற்குரிய இடம் இளமைப்பருவமாகவோ பெரிய மைதானமாகவோ மாறுவேடமிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128527

ஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்

  ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகளுக்கே சுவாமி இவ்விருதை அறிவிக்கிறார். தற்சமயம் குறிப்பிட்ட ஒரு துறையில் தொடர்ச்சியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர்களின் வாழ்நாள் சாதனையைப் போற்றி விருதுத் தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஓர் அறிவார்ந்த சமூகம் இதுபோன்ற விதி சமைப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் சுவாமி இதை முன்னெடுத்து வருகிறார். இதுவரை இந்த விருது பெற்றவர்கள் அனைவருமே முக்கியமான ஆளுமைகள் என அறிந்தபோது இது கௌரவமான விருது என்ற மனப்பதிவு உண்டானது.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128746

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம் அன்புள்ள ஜெ   அபி ஆவணப்படத்தின் முன்னோட்டம் அழகாக இருந்தது. நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் ஆகியவற்றைக் காணமுடிந்தது. இங்கே ஆவணப்படங்களுக்கு இடமே இல்லை. உண்மையில் நல்ல ஆவணப்படங்களைக்கூட மக்கள் பார்ப்பதில்லை. எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களுக்கு ஒரு இரண்டாயிரம்பேர் இருந்தாலே அதிகம்.   ஆனால் இவையெல்லாமே பெரிய மதிப்பு பெறும் காலம் வரும் என்று நினைக்கிறேன். ஜெயகாந்தனின் ஆவணப்படத்தை இப்போது பார்க்கையில் அவருடைய உடல்மொழியை ஆவலுடன் பார்க்கமுடிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128476

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 18

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 1 யுயுத்ஸு இடைநாழியினூடாக பதற்றமாக நடந்தான். அவனைத் தொடர்ந்து சாரிகர் விரைவு நடையாக சென்றார். செல்லும்போதே யுயுத்ஸு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்க ஏவலர் அவன் அருகே வந்து ஆணைகளை பெற்றுக்கொண்டு விலகினர். யுயுத்ஸு “நகரம் முழுக்க காவல் எவ்வாறு உள்ளது என்னும் செய்தி எனக்கு உடனே வந்தாகவேண்டும். இப்போது நமது பொறுப்பு மிகமிகக் கூடியிருக்கிறது” என்றான். காவலர்தலைவன் தலைவணங்கினான். “இந்நகரில் இதுவரை இருந்த பெருந்திரள் உரிய காவல் இல்லாமலேயே இருந்திருக்கிறது. அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128202