Daily Archive: December 17, 2019

விமர்சனத்தின் வழிமுறைகள்

  அன்புள்ள ஜெ   உங்கள் கடிதம் படித்தேன். மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும். இங்கே நீங்கள் விமர்சனங்களை முன்வைப்பதில் மாறாத கொள்கை அல்லது அளவுகோல்கள் எதையாவது கொண்டிருக்கிறீர்களா? மேடைகளில் பேசும்போது சற்று புகழ்ந்துவிடுகிறீர்களா? உங்கள் அளவுகோல்கள் சீராக இல்லை என்று நண்பர் சொன்னார். என் கேள்வி அத்துமீறல் அல்ல என நினைக்கிறேன்   எஸ்.செல்வக்குமார்.   அன்புள்ள செல்வக்குமார்,   விமர்சனக்கருத்துக்கள் அவற்றை ஏற்றும் மறுத்தும் கூடவே சிந்திப்பவர்களுக்காகச் சொல்லப்படுவன. அவ்வாறு சிந்திக்கும் திறனற்றவர்களின் வழக்கம் கூற்றுக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128587

வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை

வேனிற்கால ஞாயிற்றுக்கிழமை சம்சாரிகளெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள் ஆளோய்ந்த விடுதியில் யாரையோ எதிர்பார்த்திருக்கிறேன்   யாரேனும் வரக்கூடுமா?   மண்கூஜாவில் ஒரு துளை வராண்டா மூலையில் நீண்ட ஒட்டகக் கழுத்துடன் சரிந்து கிடக்கிறது   தாகத்துடன் வியர்வையுடன் களைப்புடன் யாரேனும் வரக்கூடுமா?   கிளிஜோசியக்காரன் நேற்று வந்துபோனான் கண்காதுமூக்கு நிபுணரின் வீடு கேட்டுவந்த கிராமத்தானும் போய்விட்டான் இந்த வீதியில் நேற்று விதிக்கு மனிதப்பலி தந்த தீர்க்கதரிசிகளும் மீட்பர்களும் வந்து சென்றனர் சோலைமரங்களும் பாதைக்கிணறுகளும் தந்து வாழ்வைப் பறித்துக்கொண்ட சக்கரவர்த்திகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128423

விஷ்ணுபுரம் விழா எதிர்பார்ப்புகள்

  அன்புள்ள ஜெ,   விஷ்ணுபுரம் விழாவின் செய்திகள் தொடர்ந்து உங்கள் தளத்தில் வந்துகொண்டிருப்பது அளிக்கும் உள்ளக்கிளர்ச்சி அபாரமானது. நான் இரண்டுமுறை விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருக்கிறேன். இந்தமுறையும் வருகிறேன். நீங்கள் பலமுறை எழுதியிருப்பதுபோல ஒரு திருவிழா மனநிலை வந்தால் மட்டும்தான் நம்மால் இப்படி நாள்முழுக்க இலக்கியம் இசை போன்றவற்றில் மூழ்கிக் கிடக்க முடியும். விஷ்ணுபுரம் விழாவில் எப்போதுமே அந்த தீவிரமும் பித்தும் இருக்கிறது. இந்தமுறையும் சிறப்பாக நிகழும் என நினைக்கிறேன்.   ஆர்.சங்கர்   அன்புள்ள ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128540

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 17

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 8 ராஜசூயத்திற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்னரே கூட்டம் பல மடங்கு பெருகத்தொடங்கியது. பாதைகள் கரைதொட்டு நிரம்பின. அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பகுப்பது கைவிடப்பட்டது. வந்துகொண்டிருப்பவர்கள் அனைவரும் அஸ்தினபுரிக்குள் தங்குவதும் இயலாதாயிற்று. முதலில் வந்தவர்கள் தங்கள் குல அடையாளங்களுக்கேற்ப ஒழிந்து கிடந்த தெருக்களில் இருந்த இல்லங்களில் குடியேற்றப்பட்டார்கள். ஆயர் தெருக்கள் முதலில் நிறைந்தன. வேளாண் தெருக்கள் இறுதியாக பெருகின. சூதர் தெருக்களிலும் மறவர் தெருக்களிலும் மீண்டும் தலைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128172

புதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019

  வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .   வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான “நீலம்” நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு முழு நூலுக்குமான சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128664