Daily Archive: December 15, 2019

பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா

  இரு வீட்டு மதிற்சுவர்களையும்  பிரிக்கும் அந்த அடர்ந்த மாமரங்களின் ஊடே ஒரு மின்மினிப் பூச்சிதான் இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருக்கிறது என்றே மதுமிதா முதலில் எண்ணினாள். பிறகுதான் அது என்னவென்று அவளுக்கு விளங்கியது. பக்கத்து வீட்டின் மின்விளக்குகளில் ஒன்று அணைந்து அணைந்து எரிவதுதான் திரையிடப்படாத அதன்  ஜன்னல்களின் வழியாக அப்படித் தோன்றியிருக்கிறது. அவ்வாறு அது அணைந்து அணைந்து ஒளிர்வது மாமரத்தின் அடர்த்தியான கிளைகளின் வழியே தெளிவாகவே தெரிகிறது. மதுமிதா தன்னுடைய அறையின் அந்த  திறந்த ஜன்னலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128424

விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்

  விஷ்ணுபுரம் விருதை ஒட்டி  விருதுபெறும் எழுத்தாளர்களைப் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டன.  முதலில் ஆசிரியர் குறித்த ஒரு வரலாற்றுநூல் எழுதப்படவேண்டும் என்பதே இலக்காக இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதை விரும்பவில்லை. குறிப்பாக முதலில் விருதுபெற்ற ஆ. மாதவன். ஆகவே அது விமர்சனநூலாக வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் மூன்றுநூல்கள் முழுமையாகவே என்னால் எழுதப்பட்டன. அதற்குள் விமர்சனப்பார்வை கொண்ட நண்பர்களின் கூட்டு ஒன்று உருவாகியது. ஆகவே நூல்கள் விமர்சனத் தொகைநூல்களாக வெளிவந்தன.   நடுவே ஞானக்கூத்தன் விருதுபெற்றபோது ஆவணப்படம் எடுத்தமையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128408

தருமை ஆதீனம் -கடிதம்

அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்   அன்பு ஜெமோ,   நலம்தானே?   என்னுடைய சித்தப்பா ஒருவர் தருமை ஆதீனத்தில் வேலையில் இருந்ததாலும், அவ்வப்போது துறவிகளை சந்தித்து ஆசி பெறும் வழக்கம் குடும்பத்தில் இருந்ததாலும், தருமை சன்னிதானம் அவர்களை நாலைந்து முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். “சாமியார்கள்” மேல் எனக்கிருந்த பார்வையை மாற்றியவர் என்று உறுதியாகச் சொல்வேன்.   துறவிகளின் மேல், அதிலும் குறிப்பாக மடாதிபதிகள் மேல் எந்த மரியாதையும், நம்பிக்கையும் அற்ற பதின் வயதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128342

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 6 சுரேசரிடம் பேசிவிட்டு மீண்ட பின்னரே சம்வகை நகருக்குள் வந்துகொண்டிருந்த மக்களை கூர்ந்து நோக்கத்தொடங்கினாள். ஏற்கெனவே பலவகையான மக்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். நகரிலிருந்து மக்கள் விலகிச்செல்கிறார்கள் என்னும் செய்தியே பலரை உள்ளே வரச்செய்ய போதுமானதாக இருந்தது. முன்பு வந்துகொண்டிருந்தவர்கள் இரவலரும் நாடோடிகளுமாக தெரிந்தனர். பின்னர் சிறுவணிகர்களும் கைவலரும் சூதர்களும் வரலாயினர். பின்னர் ஆயரும் உழவுக்குடியினரும்கூட தென்பட்டார்கள். அஸ்தினபுரியில் புதியவர்களுக்கு இடமிருக்கிறது என்னும் செய்தியை அந்நகரைவிட்டுச் சென்றவர்கள் பரப்பினர். அங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128167