Daily Archive: December 13, 2019

கரவுப்பாதைகள்

அடிக்கடிக் கவனிக்கும் கவிஞர்களின் கவிதைகள் இவை. ஆனாலும்கூட எவரேனும் சுட்டிக்காட்டாமல் ஒரு கவிதையை நானே கவனிப்பதில்லை என்னும் அளவுக்கு கவிதைகளின் வெளியீட்டு வெளி சிதறிப்பரந்துவிட்டிருக்கிறது. முழுநேரவேலையாக கவிதை வாசிக்கும் நண்பர்கள், இது ஒரு நோய்க்கூறா என்றுகூட எனக்கு ஐயமுண்டு, இருப்பதனால் நல்ல கவிதைகளை அதிகமும் தவறவிடுவதில்லை என நினைக்கிறேன் ஆகவே இக்கவிதைகளை நான் சுட்டிக்காட்டுகிறேன். இச்சூழலில் இப்படிச் சுட்டிக்காட்டுவதன் வழியாகவே கவிதைமேல் கவனம் படியமுடியும். வெறுமே சுட்டிக்காட்டுவதுதான் உகந்தது. ஆனால் இக்கவிதைகளின் தெரிவில் கொண்ட அளவுகோல் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128244

விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா

  அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜானவி பருவா. பெரும்பாலும் அசாமிலேயே வளர்ந்து பின்னர் கல்விக்காக வேறு பகுதிகளுக்கு சென்று தற்போது பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். கல்வியால் மருத்துவராக இருந்தாலும் மருத்துவ பணியை விட்டுவிட்டு முழு நேர எழுத்தாளராக மட்டும் இருக்கிறார். இவரின் முதல் சிறுகதை தொகுதி ‘அடுத்த வீட்டு கதவு’ (next door) 2008 ல் வெளியாகியது. இந்த தொகுதி பல்வேறுதரப்பட்ட வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்பட்டது. வடகிழக்கில் இருந்து முதன்முறையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறுகதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128345

நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்

ஒரு பருக்கை அரிசி எப்படி எவ்வளவு பேரின் உழைப்பால் நம் தட்டிற்கு வருகிறதோ அதுபோல்தான் ஒவ்வொரு நூலிழையும் துணியாக உருமாறி அத்தனை பேரின் கைகள் தொட்டு நம்மிடம் வந்துசேர்கிறது.ஒரு பொருள் உருவாவதன் பின்னணி தெரிய வரும்போது அந்த பொருளின் மதிப்பும் அந்த பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சூழலும் தூக்கி எரியாத மனநிலையும் உருவாகும். ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சோற்று பருக்கை போல் இந்த நூற்பும் என்னிடம் வந்து சேர்ந்தது. பல நெருக்கடிகள் தாண்டி மிகுந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128373

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 4 சம்வகை கவசங்கள் அணிந்துகொண்டு அறையைவிட்டு வெளிவந்தபோது எதிர்ப்பட்ட முதற்காவல்பெண்டு திகைத்து உடனே தலைவணங்கினாள். அவளில் நிகழ்ந்த அந்த அதிர்வை ஒரு கணத்தில் மிக அணுக்கமாக சம்வகை கண்டாள். அந்தக் கவசங்களை அவளுக்கு அணிவித்த ஏவல்பெண்டு “எடைமிக்கது” என்றாள். அவள் “உம்” என்றதும் மேற்கொண்டு பேசாமல் அவளுக்கு அதை அணிவித்தாள். முதலில் நெஞ்சக்கவசம். அது இரும்பாலானது. இரு இரும்புத் தகடுகளுக்கு நடுவே நுரைபோல கம்பிகள் பின்னி அமைக்கப்பட்டது. அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128124