Daily Archive: December 11, 2019

அபியின் அருவக் கவியுலகு-4

அபியின் அருவக் கவியுலகு-1 அபியின் அருவக் கவியுலகு-2 அபியின் அருவக் கவியுலகு-3 பகுதி நான்கு- மெத்திடும் மாலை   தமிழிலக்கியத்தில் அபியை முக்கியமானவராக ஆக்கும் இரண்டு சாதனைகள் தன் கவிவாழ்வின் பிற்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதை வரிசைகளான காலம், மாலை ஆகியவை. இவற்றில் காலம் ஒரு தொடக்க முயற்சியாக பல பகுதிகள் கொண்ட ஒரு நீள்கவிதைத் தன்மையுடன் உள்ளது. மாலை ஒரு வகையான நவீன காவியம்.   தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகிய மூன்றிலும் எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127843

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்

  விஷ்ணுபுரம் விழாவின் விவாத நிகழ்ச்சியில் இளம்எழுத்தாளர் வெண்பா கீதாயன் கலந்துகொள்கிறார். நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும் மரபிலக்கிய அழகியலையும் ஒரே சமயம் எழுதுபவர்   மின்னம்பலம் இணைய இதழில் இவர் எழுதிய நீ கூடிடு கூடலே என்னும் தொடர் இன்றைய பெண் சந்திக்கும் சிக்கல்களை ஆராய்வது. வீழ்கலிங்கச்சுவை கலிங்கத்துப்பரணியின் அழகியல் குறித்த ஆய்வு. வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128268

காந்தியின் உணவு பரிந்துரை

  ஆசிரியருக்கு,   காந்தியின் உணவுப் பழக்க பரிந்துரை மிக சுவாரஸ்யமானது, கூறிய அவதானிப்புகளை கொண்டது. சமீபத்தில் கச்சித்தமான எளிமையான மொழியில் எழுதப்பட்ட  இவ்வளவு வசீகரமான ஒரு கட்டுரையை நான் படித்ததில்லை, ஆகவே உடனே மொழி பெயர்த்தேன். அதை கீழே கொடுத்துள்ளேன் :       உணவும் உணவுத் திட்டமும் – காந்தி (http://www.gandhi-manibhavan.org/diet_pro.htm)   மனிதன் காற்றும் நீருமின்றி வாழ இயலாது என்றாலும், உடலுக்கு ஊட்டமளிப்பது உணவேயாகும். எனவேதான் ‘உணவே வாழ்வு’ என சொல்லப்படுகிறது.   உணவை மூன்று பகுதிகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128178

அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்

  அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்   அன்புள்ள ஜெ, கிருஷ்ணன் இவ்விஷயத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு கொள்வார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நாம் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நான் என் நினைவறிந்து ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் சிக்கல்களை உங்களிடம் கூறிக்கொண்டு தான் இருக்கிறேன். 2018, புதிய வாசகர் சந்திப்பில் நண்பர் ஜனார்த்தனன் உங்களிடம் முன்வைத்த கேள்வி எனக்கு வாசிக்க வேண்டும் எழுத வேண்டுமென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128176

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 2 சுரேசரின் ஆணைப்படி நகர் விழாக்கோலம் பூண்டது. ஆனால் அவர் எண்ணியதுபோல் எதுவும் நிகழவில்லை. அதை அவருடைய அலுவலவையில் அவர் ஆணையை ஏற்று நின்றிருக்கையிலேயே சம்வகை உணர்ந்தாள். நகரில் அப்போது கோட்டைக்காவலுக்குக்கூட போதிய காவல்பெண்டுகள் இருக்கவில்லை. முதிய பெண்களே அரண்மனையிலும் அடுமனையிலும் பணிபுரிந்தனர். ஆகவே விழவொருக்கங்கள் அரைகுறையாக நிகழ்ந்தன. அவற்றைச் செய்பவர்களுக்கு தாங்கள் மெய்யான ஒரு பணியைச் செய்கிறோம் என்னும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆகவே அவர்களிடம் விழவுக்குரிய கொண்டாட்டமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128100