Daily Archive: December 10, 2019

விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களுக்கு கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128300

அபியின் அருவக் கவியுலகு-3

  பகுதி மூன்று -இரவிலி நெடுயுகம்   அபியின் கவிதைகளின் முழுத்தொகுப்பு 2003ல் கலைஞன் பதிப்பகத்தால் (பிரம்மராஜனின்  முன்னுரையுடன்) வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் அபி தன்னுடைய தொடக்க காலக்கவிதைகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்திருப்பது காணக்கிடைக்கிறது. அவரது முதல் தொகுதியான “மெனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து ஒருசிலகவிதைகள் இறுதியில்தரப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் எழுதிய விமரிசனம் காலத்தின்ஒரு பகுதியாக நிற்கவேண்டிய ஒன்றுமட்டுமேயாகும். நாளை அக்கவிதைகள் வாசகனுக்கு கிடைக்காமலே ஆகக்கூடும்.தமிழின் அருவக் கவிதையின்தலைசிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அபியின் இக்கவியுலகம்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127840

இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்

இலக்கியவிழாக்கள்   அன்புள்ள ஜெ..   தி இண்டு லிட்ஃபெஸ்ட் திருவிழா நடத்துவோருக்கு தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லை என்பதும் அது வீண் செலவு என்பதும் மறுக்கவொண்ணா உண்மை.   ஆனால் இந்த நிலை அப்படியே நீடிப்பதே நல்லது என்பதுதான் யதார்த்தமான நிஜம்   உதாரணமாக இந்து குழுமம் தமிழ் நாளிதழ் போக்கில் ஒரு மாற்றம் கொணர முயன்றது. அப்படி உருவான தமிழ் இந்து அரசியல்வாதிகளுக்குத்தானே பயன்படுகிறது. ஒரு ஜெயமோகனுக்கோ , சாரு நிவேதிதாவுக்கோ எந்த இடமாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128209

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அபி குறித்த ஆவணப்படம். விஷ்ணுபுரம் விழாவில் இது வெளியிடப்படும். பின்னர் யூடியூபில் வெளியாகும்.   ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண் படத்தொகுப்பு – குமரேசன் படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன் ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர் ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ் வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்   தயாரிப்பு& தொழில்நுட்ப ஆலோசனை – குரல் – ராஜா சந்திரசேகர்   இசை  ராஜன் சோமசுந்தரம்   இயக்கம் கே.பி.வினோத்குமார்    

Permanent link to this article: https://www.jeyamohan.in/128259

ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு

  பெண்ணெல்லாம் பேய்ச்சி ஆகும் கதை என ஒருவரியில் சொல்லலாம். நாவல் 1981, 1999, 2019 என மூன்று காலகட்டங்களில் மாறி மாறி நிகழ்கிறது. இக்காலகட்டங்களுக்கு அப்பால் நினைவுகளின் ஊடாக இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பாக பயணித்து மலேசிய வரலாற்றின் கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் எண்பதுகளில் பல தமிழர்களின் உயிரைக்குடித்த  சாராய உயிரிழப்பு தான் நாவலின் களம்.   ரப்பரில் இருந்து செம்பனைக்கு மலேசியா மாறிய ஒரு காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128181

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 1 அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை முகப்பில் காவல்மாடத்தில் நின்றபடி சம்வகை கீழே மையச்சாலையில் கரை நிரப்பிப் பெருகி வந்து, முகமுற்றத்தை செறிய நிரப்பி, அதிலிருந்து கிளைத்தெழுந்து சிறு சுழி போலாகி, கோட்டைவாயிலை அடைந்து, எட்டு புரிகளாகப் பிரிந்து உள்ளே நுழைந்து, நகர் முகப்பின் பெரிய முற்றத்தையும் அலைகொண்டு நிரப்பி அதிலிருந்து பிரியும் எட்டுச் சாலைகளையும் பற்றிக்கொண்டு வழிந்து நகருக்குள் நிறைந்துகொண்டிருந்த மக்களை பார்த்துக்கொண்டிருந்தாள். முற்றிலும் அறியாத மக்கள். முற்றிலும் அறியாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128098