Daily Archive: December 9, 2019

திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு

நண்பர் ஷாகுல் ஹமீதின் கடைத் திறப்புவிழா திருவனந்தபுரத்தில் டிசம்பர் ஆறாம்தேதி நடைபெற்றது. கப்பல்காரனாக இருபதாண்டுகளுக்குமேல் வாழ்ந்தவர் ஷாகுல். காடாறுமாத வாழ்க்கையை கடந்து கரையிலேயே நீடிக்க முடிவெடுத்து அவருடைய நெடுநாள் நண்பரின் பங்குத்துணையுடன் தொடங்கியிருக்கும் இயற்கை உணவுப்பொருள் – செக்கு எண்ணைக் கடை. [Jeevasurabhi Naturo Products,Tc No 15/746 Edapazhanji , Vazhuthacaud, Trivandrum, [email protected] ]   கடையை திறந்துவைக்க ஒரு விஐபி தேவை என்று சொன்னார். எனக்கு முதலில் தோன்றிய முகம் மதுபால். மலையாள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128224

அபியின் அருவக் கவியுலகு-2

அபியின் அருவக் கவியுலகு-1 பகுதி இரண்டு: யாருடையதென்றிலாத சோகம்   அபியின் இரண்டாம் கட்டத்தில் அவரது கவியுலகில் அருவமான படிமங்கள் செறிவான மொழியில் வெளிப்படுகின்றன. அதேசமயம் மிக அரிதாகவும் அவை உள்ளன. அலங்காரங்களும், செயற்கையான ஒலி அழகுகளும் முற்றாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன உண்மையான அனுபவப் பின்புலம் உடையதாகவும் உள்ளன   உறக்கங்களுக்குள் ஒளிக்கனவுகளுக்காய் பதுங்கிய பகலைத் தேடுகின்றதோ   என்று முந்தைய காலகட்டத்தில் எழுதிய அதே அருவமான அனுபவ நிலையையே   என்றைக்குமில்லாமல் இன்று பின்னணி ஓசைகள் இன்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127807

விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை

  விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர் இசை கலந்துகொள்கிறார். அவருடனான ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை என்ற பேரில் எழுதும் ஆ. சத்தியமூர்த்தி மெல்லிய பகடியும் நட்பார்ந்த  சொல்லாடலும் நுண்ணிய கனிவும் கொண்ட கவிதைகள் வழியாக தமிழில் இன்று முதன்மையான கவிஞராகக் கருதப்படுபவர். இசை விக்கிபீடியா இசை இணையதளம் =========================================== ரகசியச் சலங்கை ஜெயமோகன் அலைச் சிரிப்பு ஜெயமோகன் ஒரு செல்லசிணுங்கல்போல…. ஜெயமோகன் பழைய யானைக் கடைகடலூர் சீனு இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன் கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128211

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 9 கட்டற்றுப் பெருகி சாலையை நிறைத்துச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரள் சீப்பால் வகுந்ததுபோல எட்டு நிரைகளாக மாறி அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமுகப்பு நோக்கி சென்றது. வலது ஓரம் எருதுகள் இழுத்த வண்டிகள். அதையொட்டி பொதியேற்றிய அத்திரிகளும் கழுதைகளும் அடங்கிய மக்கள்திரள். இடதுஎல்லை புரவிகளுக்குரியது. பிற நிரைகள் நடந்துசெல்பவர்களுக்குரியவை. நிரைகளின் நடுவே இரு வடங்கள் இணைசேர்த்து நீட்டிக் கட்டப்பட்டிருந்தன. அரசத்தேர்கள் செல்வதென்றால் அந்த இரு வடங்களையும் இழுத்து விலக்கி இடைவெளி உருவாக்கினர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128036