Daily Archive: December 6, 2019

விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்  

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உரையில் நான் தமிழகத்தின் பெருமிதமான கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் தம்பதியினருக்கு ஒரு வாழ்க்கைவரலாறு கூட தமிழில் இல்லை என்று சொல்லியிருந்தேன். அதை கேட்டவர்கள் இருபதாயிரம்பேருக்கு மேல். ஆனால் அந்த வரியிலிருந்து ஊக்கம் கொண்டு கிருஷ்ணம்மாளைச் சென்று கண்டு அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற, லாரா கோப்பா அவர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களைப்பற்றி எழுதிய நூலை தமிழில் அழகிய பதிப்பாக வெளிக்கொண்டுவர முன்வந்தவர்கள் குக்கூ – தன்னறம் அமைப்பினர். இலக்கியம் பேசப்படுவதற்கான ஓர் அமைப்பாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128090

கப்பல்காரனின் கடை

பார்ஸிலோனாவில் நடை பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது ஜப்பான் – ஷாகுல் ஹமீது அனைவருமெழுதுவது… ஈராக் போர் அனுபவங்கள் நண்பர் ஷாகுல் ஹமீது திருவனந்தபுரத்தில் ஒரு செக்குஎண்ணை- இயற்கை உணவுப்பொருள் கடையை இன்று [டிசம்பர் ஆறு] தொடங்குகிறார். அதன்பொருட்டு நான் திருவனந்தபுரத்தில் இருப்பேன். என் நண்பர் இயக்குநர் மதுபால் விழாவில் கலந்துகொள்கிறார் ஆம், கப்பல்காரன் டைரி எழுதிய அதே ஷாகுல் ஹமீதுதான். கப்பல் பணியிலிருந்து வணிகத்திற்கு திரும்புகிறார். வாழ்த்துவது நண்பர்களின் கடமை. திருவனந்தபுரத்தில் இருக்கும் நண்பர்கள் வரலாம் ஷாகுல்- +91 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128086

மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு

  ஒன்று வட்டத்தின் சுழற்சியில் நடுவே தோன்றி வளர்ந்தது பேரொளி   அதற்குப் பேச்சுவரவில்லை சைகைகளும் இல்லை எனினும் அதனிடம் அடக்கமாய் வீற்றிருந்தது நோக்கமற்று ஒரு மகத்துவம்.   அபி. கேதார்நாத் நோக்கிய பயணத்தில், குளிர்காலை ஒன்றினில், இமயச்சரிவில் பசுமை வழிந்திருந்த கிராமம் ஒன்றின் மேட்டிலிருந்த மையச்சாலையோர தேநீர்க்கடையில் நின்றிருந்தேன். தூரத்து மலைவளைவின் சரிவுகளின் கிராமத்துப் பாதை வழியே மேலேறிக் கொண்டிருக்கும் பசுக்கூட்டம். காண்பவற்றை வெள்ளைக் கொசுவலைக்குள் நின்று காணும் காட்சியென மாற்றும் வெண்பனிப் புகைசூழ்கை, பின்புலச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127934

உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?

ஹராரியின் கலகச்சட்டகம் அன்புள்ள ஜெ, யுவால் பற்றி வந்த கடிதமும் அதில் இருந்த எழுத்தாளர் ச.க உரையாடலும் பார்த்தேன். சா.க அது முக்கிய புத்தகம் என ஏற்றுக்கொள்கிறார். அது அறிவுசார்ந்த புத்தகம் என்கிறார். ஆனால் கடிதத்தில் இது கலகத்துக்காக எழுதப்பட்ட புத்தகம் என்ற தொனி இருக்கிறது. https://www.jeyamohan.in/127830#.XeQXMpMzb3g நீங்களே ஒருமுறை குறிப்பிட்டது போல சம்பவங்களையும் செய்திகளையும் நிகழ்காலத்தில் மட்டுமே வைத்துப்பார்ப்பதும் ஒருமுனைப்படுத்துவதி பொங்குவதுமே இப்போதைய பொது சிந்தனைப்போக்காக இருக்கிறது.இதனால் முழுமையான பார்வை இல்லாமல் வெறும் சச்சரவும் எழுகின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128046

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 6 பெருங்கந்தர் எழுந்து சென்றபின் சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது. அனல் வெடித்து வெடித்து உலைந்தாடிக்கொண்டிருந்தது. உண்டு முடித்து ஓரிருவர் எழுந்து படுக்கும்பொருட்டு சென்றார்கள். அழிசி பூதியிடம் “பாணரே, அஸ்தினபுரியைப் பற்றி மேலும் பாடுக!” என்றான். “நாங்கள் இருவரும் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறோம்.” பூதி ஆதனை நோக்கி புன்னகைத்துவிட்டு “அது பெருங்களிறுகளின் நகரம்” என்றார். குறுமுழவில் விரலோட்டி அதை பேசவிட்டு அதனுடன் தன் பேச்சையும் இணைத்துக்கொண்டார். “அஸ்தினபுரி மண்ணுக்கு அடியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127957