Daily Archive: December 5, 2019

அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்

  1998 ல் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது என் நண்பர் ‘தாசில்பண்ணை’ ராஜசேகரன் அவர்கள் மயிலாடுதுறையில் ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். விஷ்ணுபுரம் குறித்து அவர் எழுதிய சிறுநூலும் வெளியிடப்பட்டது. அதற்குமறுநாள் நிகழ்ந்த இன்னொரு விழாவில்தான் தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் சீர் வளர் சீர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களை நேரில் சந்திக்க வாய்த்தது. ஜி.கே. மூப்பனார் முதலியோர் பங்குகொண்ட மேடை. என்னிடம் விஷ்ணுபுரம் நாவலின் ஒரு பிரதியை குருமகாசன்னிதானம் அவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128110

சொற்சிக்கனம் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன்,   வணக்கம்.   கவிதைகளில் ‘சொற்சிக்கனம்’ என்ற சொல்லை சமீப காலங்களில் அதிகமாக கேட்க வேண்டி வருகிறது. பிரக்ஞை பூர்வமான, பிரக்ஞை பூர்வமற்ற இரு தரப்பு கவிஞர்களின் பார்வையிலும் இது வேறுபடுகிறது. தேவதச்சன் ஒரு முறை பிரக்ஞையின்மை என்பது கவிதை உருவாகும் (மனம்,அக/புற சூழல்) இடத்திலும், பிரக்ஞைப்பூர்வம் என்பது கவிதையை உருவாக்கும் (கவிஞன்) இடத்திலும் இருக்க வேண்டும் என்றார். தேவதேவனின் கவிதைகள் முழுக்க பிரக்ஞை பூர்வமற்றவை. அதில் சொற்சிக்கனம் குறைவே. ஆனால், உணர்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128052

அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்

விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க   வணக்கம்!   உங்களின் விசும்பு சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் எழுதி, படிக்கும் பழக்கம் உள்ள எனக்கு தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள் தேடிப் படிப்பதில் ஒரு தனி ஆர்வம்.   உங்களின் விசும்பு புத்தகம் மிக அருமை. “தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன்று, நாளை” பகுதியில் நீங்கள் குறிப்பிடும் மூலையில் பொருத்தப்படும் இம்பிளான்ட்கள் இப்பொழுது உண்மையிலேயே பிரபலமடைய ஆரம்பித்துவிட்டன. கவனித்தீர்களா? Elon Musk- ன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127884

பாரதியும் ஜெயகாந்தனும்

அன்புள்ள ஜெமோ, இதை இன்று காண நேர்ந்தது. பாரதியின் பேத்தி டாக்டர் விஜயா அவர்கள் மறைந்தார் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து யூடியூப் இந்தக்காணொளியை எனக்கு அளித்தது. ஓரளவு மனம் அமைதியடைந்தது. https://youtu.be/4uN6WOT_Uuw அன்புடன், ஜெய்கணேஷ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/127929

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 5 காஞ்சியிலிருந்து வடபுலம் நோக்கி கிளம்பிய ஓரிரு நாட்களிலேயே ஆதன் அஸ்தினபுரிக்குச் செல்லும் செய்தி அவ்வணிகக்குழுவில் பரவிவிட்டது. அழிசியால் அதைப்பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “எவரிடமும் கூறிவிடவேண்டாம், இது மந்தணமெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் இதை அவர் இன்னும்கூட எவரிடமும் சொல்லவில்லை. ஆகவே நான் சொன்னால் நன்றாக இருக்காது“ என்று அவன் அனைவரிடமும் அதை சொல்லிவிட்டான். அவர்கள் ஆதனிடம் இயல்பாக பேச்சைத் தொடுத்து அது வளர்ந்தெழும் ஒழுக்கின் நடுவே அஸ்தினபுரிக்கா அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127955