Daily Archive: December 4, 2019

கவிதைகள் பறக்கும்போது…

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம் மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி… மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் கவிதைகளை ஒலிவடிவமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவை ஒலிவடிவில் மேலும் அழகுகொள்பவை.உரைநடையில் சற்று கீழிறங்குபவை. அப்போதுதான் ஜோதிபாய் பரியாடத்து என்னும் கவிஞரின் வலைத்தளத்தைச் சென்றடைந்தேன்.   1965 ல் பிறந்த ஜோதிபாய் பேசாமடந்தை, கொடிச்சி, ஆத்மகதாக்யானம் போன்ற கவிதைநூல்களை எழுதியவர். பாலக்காட்டுக்காரர் ஆகையால் தமிழ் தெரிந்திருக்கிறது. மயிலம்மாள். போராட்டமே வாழ்க்கை என்னும் நூலை தமிழில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128028

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்

  கே. என் செந்தில் 2000களுக்கு பிறகு வந்த குறிப்பிடதகுந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். 1982ஆம் ஆண்டு அவிநாசியில் பிறந்தார். இளங்கலை மேலாண்மையியல் பட்டம் பெற்றபின், தற்போது திருப்பூரில் ஆடிட்டிங் சார்ந்த அலுவலகத்தை நடத்தி வருகிறார். கபாடபுரம் இணைய இதழை சில காலம் நடத்தி வந்தார். 2016-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை பெற்றுள்ளார்.   இவரது படைப்புகள் 1.இரவுக் காட்சி-முதல் சிறுகதைத் தொகுப்பு-2009-காலச்சுவடு பதிப்பகம். 2.அரூப நெருப்பு -இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு-2013-காலச்சுவடு பதிப்பகம். 3. விழித்திருப்பவனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128038

சமகாலப் பிரச்சினைகள் -கடிதம்

  சமகாலப்பிரச்சினைகள் – ஆமையின்பாதை அன்புள்ள ஜெயமோகன்,   நலம்தானே? உங்களுக்கு நீண்ட காலமாக கடிதம் எழுதவில்லை. கடந்த வருடம் நம்முடைய ஜெர்மனி சந்திப்புக்குப் பிறகு உங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். அதற்குள் ப்ரியா உங்களுக்கு எழுதிவிட்டாள். அதன் பிறகு ஏனோ கடிதம் எழுதத் தோன்றவில்லை. அருணாவிடம் தொடர்பில் இருப்பதுவும் ஒரு காரணம். இப்போது இந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம் உங்களுடைய “சமகாலப் பிரச்சினைகள்” குறித்த பதிவு. நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், இது நான் உங்களுக்கு எழுதும் கடிதமே இல்லை. இந்தச் சமூகத்துக்கு, குறிப்பாக தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128033

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 4 ஆதன் ஊரைவிட்டுக் கிளம்பி பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னரே அஸ்தினபுரிக்குச் செல்வதென்று அறுதியாக முடிவெடுத்தான். அவனை கேட்காமலேயே அவன் மதுரைக்குச் செல்பவன் என உமணர்கள் எண்ணிக்கொண்டனர். அவன் அண்ணாமலையானை நாடிச்செல்லும் வழியில் மதுரையில் சின்னாள் தங்குபவன் என்று கருதினர். உமணர்களின் வண்டிநிரையுடன் அவர்களின் ஏவலனாக அவன் சென்றான். அவர்கள் சில நாட்களிலேயே அவனுடைய இயல்பை புரிந்துகொண்டு அவனுக்குரிய தனிமையை அளித்தனர். அவன் சருகுப்படுக்கை அமைத்து படுத்துக்கொள்கையில் எவரும் அருகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127951