Daily Archive: December 2, 2019

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4 5. காலமுகம் நோக்கும் தவம்   பிரமிளின் கவிதைமொழி பற்றிய ஒரு விவாதமின்றி இக்கட்டுரை நிறைவு பெறமுடியாது. அவரது கவிதைகள்தமிழின் மிகச்சிறந்த மொழிச்சாத்தியங்களை நிகழ்த்தியவை என்று கூறப்படுகிறது. தேர்ந்த வாசகன் அதை எப்போதும் ஒத்துக்கொள்வான். ஆனால் அவர் மொழியைப் பயின்றாரா, நேர்த்தியான மொழி குறித்த புரிதல் அவருக்கு இருந்ததா ,அதற்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127795

உலகம் யாவையும்-கடிதங்கள்

அறம் வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   அறம் தொகுப்பில் உள்ள உலகம் யாவையும் கதையை இப்போது தான் வாசித்தேன்.   மறக்கமுடியாத ஒரு அனுபவமாக அது மாறிவிட்டது. முந்திய கடிதத்தில் சில சிறுகதைகளை குறிப்பிட்டிருந்தேன். (யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஊமைச் செந்நாய், புலிக்கலைஞன் என) அந்த வரிசையில் இப்போது உலகம் யாவையும்.   இந்திய பயணங்கள் குறித்த தங்களின் எல்லா கட்டுரைகளிலும், இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் சுதந்திரம் குறித்தான களிப்பை கண்டிருக்கிறேன். இச்சிறுகதையின் முடிவிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127882

வன்மேற்குநிலம்

கடவுள் இல்லாத நிலம் அன்புள்ள ஜெ,   “கடவுள் இல்லாத நிலம்” கட்டுரை (https://assets2.jeyamohan.in/95874#.XdcWn-hKhPY) படித்தபின் உண்டான எண்ண அலைகள்…   வன்மேற்குக் கதைகள் எனக்குப் பிடித்தமான ஒரு கதை வகை. முதன் முதலில் நான் படித்தது முல்லை தங்கராசனின் முத்து காமிக்ஸில் வந்த சிஸ்கோ கிட் (Cisco Kid) சித்திரக் கதைகள்; பின் லோன் ரேஞ்சர் (Lone Ranger) சித்திரக் கதைத் தொகுப்புக‌ள். மாக்ஸ் ப்ராண்ட் என்ற புனைபெயரில் ஃப்ரெடெரிக் ஃபாஸ்ட் (Frederick Faust) எழுதிய முழு நீள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127886

அமிர்தம் சூர்யா – விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-2

இவரின் இயற் பெயர் இரா.ந.கதிரவன்.(அகவை 52) தன்னுடைய இயற்பெயரை இவர் சூர்யா என மாற்றிக் கொண்டார். இவர் அமிர்தம் என்ற சிற்றிதழை 1985 களில் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியதால் “அமிர்தம் சூர்யா” வாகப் பெயர் மாற்றம் கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக பணியாற்றுகிறார். https://ta.wikipedia.org/s/4byn   அமிர்தம் சூரியா – வலைதளம் – http://amirthamsurya.blogspot.com/   இணைய சுட்டிகள் அமிர்தம் சூர்யா கவிதைகளில் சில: http://andhimazhai.com/news/view/selvarajjegadesan-34.html ஓவிய ஃபரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் ( காதலியக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127998

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2 அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள் சுழன்றன. ஆரங்களில் உரசி அச்சு ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் ஒரு சொல்லை கேட்டான். விழித்துக்கொண்டபோது அச்சொல் என்ன என்பது மறந்துவிட்டிருந்தது. அவன் திகைப்புடன் அச்சொல்லுக்காக அகத்தை துழாவினான். அது எப்போதைக்குமாக என மறைந்துவிட்டிருந்தது. அவன் புலரியின் கருக்கிருளில் நிழலுருக்களாகச் சூழ்ந்திருந்த புதர்களை நோக்கியபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127907