சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உரையில் நான் தமிழகத்தின் பெருமிதமான கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் தம்பதியினருக்கு ஒரு வாழ்க்கைவரலாறு கூட தமிழில் இல்லை என்று சொல்லியிருந்தேன். அதை கேட்டவர்கள் இருபதாயிரம்பேருக்கு மேல். ஆனால் அந்த வரியிலிருந்து ஊக்கம் கொண்டு கிருஷ்ணம்மாளைச் சென்று கண்டு அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற, லாரா கோப்பா அவர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களைப்பற்றி எழுதிய நூலை தமிழில் அழகிய பதிப்பாக வெளிக்கொண்டுவர முன்வந்தவர்கள் குக்கூ – தன்னறம் அமைப்பினர். இலக்கியம் பேசப்படுவதற்கான ஓர் அமைப்பாகவே …
Monthly Archive: December 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/128090
கப்பல்காரனின் கடை
பார்ஸிலோனாவில் நடை பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது ஜப்பான் – ஷாகுல் ஹமீது அனைவருமெழுதுவது… ஈராக் போர் அனுபவங்கள் நண்பர் ஷாகுல் ஹமீது திருவனந்தபுரத்தில் ஒரு செக்குஎண்ணை- இயற்கை உணவுப்பொருள் கடையை இன்று [டிசம்பர் ஆறு] தொடங்குகிறார். அதன்பொருட்டு நான் திருவனந்தபுரத்தில் இருப்பேன். என் நண்பர் இயக்குநர் மதுபால் விழாவில் கலந்துகொள்கிறார் ஆம், கப்பல்காரன் டைரி எழுதிய அதே ஷாகுல் ஹமீதுதான். கப்பல் பணியிலிருந்து வணிகத்திற்கு திரும்புகிறார். வாழ்த்துவது நண்பர்களின் கடமை. திருவனந்தபுரத்தில் இருக்கும் நண்பர்கள் வரலாம் ஷாகுல்- +91 …
Permanent link to this article: https://www.jeyamohan.in/128086
மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
ஒன்று வட்டத்தின் சுழற்சியில் நடுவே தோன்றி வளர்ந்தது பேரொளி அதற்குப் பேச்சுவரவில்லை சைகைகளும் இல்லை எனினும் அதனிடம் அடக்கமாய் வீற்றிருந்தது நோக்கமற்று ஒரு மகத்துவம். அபி. கேதார்நாத் நோக்கிய பயணத்தில், குளிர்காலை ஒன்றினில், இமயச்சரிவில் பசுமை வழிந்திருந்த கிராமம் ஒன்றின் மேட்டிலிருந்த மையச்சாலையோர தேநீர்க்கடையில் நின்றிருந்தேன். தூரத்து மலைவளைவின் சரிவுகளின் கிராமத்துப் பாதை வழியே மேலேறிக் கொண்டிருக்கும் பசுக்கூட்டம். காண்பவற்றை வெள்ளைக் கொசுவலைக்குள் நின்று காணும் காட்சியென மாற்றும் வெண்பனிப் புகைசூழ்கை, பின்புலச் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/127934
உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
ஹராரியின் கலகச்சட்டகம் அன்புள்ள ஜெ, யுவால் பற்றி வந்த கடிதமும் அதில் இருந்த எழுத்தாளர் ச.க உரையாடலும் பார்த்தேன். சா.க அது முக்கிய புத்தகம் என ஏற்றுக்கொள்கிறார். அது அறிவுசார்ந்த புத்தகம் என்கிறார். ஆனால் கடிதத்தில் இது கலகத்துக்காக எழுதப்பட்ட புத்தகம் என்ற தொனி இருக்கிறது. https://www.jeyamohan.in/127830#.XeQXMpMzb3g நீங்களே ஒருமுறை குறிப்பிட்டது போல சம்பவங்களையும் செய்திகளையும் நிகழ்காலத்தில் மட்டுமே வைத்துப்பார்ப்பதும் ஒருமுனைப்படுத்துவதி பொங்குவதுமே இப்போதைய பொது சிந்தனைப்போக்காக இருக்கிறது.இதனால் முழுமையான பார்வை இல்லாமல் வெறும் சச்சரவும் எழுகின்றன. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/128046
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 6 பெருங்கந்தர் எழுந்து சென்றபின் சற்றுநேரம் அங்கே அமைதி நிலவியது. அனல் வெடித்து வெடித்து உலைந்தாடிக்கொண்டிருந்தது. உண்டு முடித்து ஓரிருவர் எழுந்து படுக்கும்பொருட்டு சென்றார்கள். அழிசி பூதியிடம் “பாணரே, அஸ்தினபுரியைப் பற்றி மேலும் பாடுக!” என்றான். “நாங்கள் இருவரும் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறோம்.” பூதி ஆதனை நோக்கி புன்னகைத்துவிட்டு “அது பெருங்களிறுகளின் நகரம்” என்றார். குறுமுழவில் விரலோட்டி அதை பேசவிட்டு அதனுடன் தன் பேச்சையும் இணைத்துக்கொண்டார். “அஸ்தினபுரி மண்ணுக்கு அடியில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/127957
அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
1998 ல் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது என் நண்பர் ‘தாசில்பண்ணை’ ராஜசேகரன் அவர்கள் மயிலாடுதுறையில் ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். விஷ்ணுபுரம் குறித்து அவர் எழுதிய சிறுநூலும் வெளியிடப்பட்டது. அதற்குமறுநாள் நிகழ்ந்த இன்னொரு விழாவில்தான் தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் சீர் வளர் சீர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களை நேரில் சந்திக்க வாய்த்தது. ஜி.கே. மூப்பனார் முதலியோர் பங்குகொண்ட மேடை. என்னிடம் விஷ்ணுபுரம் நாவலின் ஒரு பிரதியை குருமகாசன்னிதானம் அவர்களுக்கு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/128110
சொற்சிக்கனம் பற்றி…
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். கவிதைகளில் ‘சொற்சிக்கனம்’ என்ற சொல்லை சமீப காலங்களில் அதிகமாக கேட்க வேண்டி வருகிறது. பிரக்ஞை பூர்வமான, பிரக்ஞை பூர்வமற்ற இரு தரப்பு கவிஞர்களின் பார்வையிலும் இது வேறுபடுகிறது. தேவதச்சன் ஒரு முறை பிரக்ஞையின்மை என்பது கவிதை உருவாகும் (மனம்,அக/புற சூழல்) இடத்திலும், பிரக்ஞைப்பூர்வம் என்பது கவிதையை உருவாக்கும் (கவிஞன்) இடத்திலும் இருக்க வேண்டும் என்றார். தேவதேவனின் கவிதைகள் முழுக்க பிரக்ஞை பூர்வமற்றவை. அதில் சொற்சிக்கனம் குறைவே. ஆனால், உணர்வு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/128052
அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க வணக்கம்! உங்களின் விசும்பு சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் எழுதி, படிக்கும் பழக்கம் உள்ள எனக்கு தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள் தேடிப் படிப்பதில் ஒரு தனி ஆர்வம். உங்களின் விசும்பு புத்தகம் மிக அருமை. “தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன்று, நாளை” பகுதியில் நீங்கள் குறிப்பிடும் மூலையில் பொருத்தப்படும் இம்பிளான்ட்கள் இப்பொழுது உண்மையிலேயே பிரபலமடைய ஆரம்பித்துவிட்டன. கவனித்தீர்களா? Elon Musk- ன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/127884
Permanent link to this article: https://www.jeyamohan.in/127929
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5
பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 5 காஞ்சியிலிருந்து வடபுலம் நோக்கிக் கிளம்பிய ஓரிரு நாட்களிலேயே ஆதன் அஸ்தினபுரிக்கு செல்லும் செய்தி அவ்வணிகக்குழுவில் பரவிவிட்டது. அழிசியால் அதைப்பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “எவரிடமும் கூறிவிடவேண்டாம், இது மந்தணமெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் இதை அவர் இன்னும்கூட எவரிடமும் சொல்லவில்லை. ஆகவே நான் சொன்னால் நன்றாக இருக்காது“ என்று அவன் அனைவரிடமும் அதைச் சொல்லிவிட்டான். அவர்கள் ஆதனிடம் இயல்பாக பேச்சைத் தொடுத்து அது வளர்ந்தெழும் ஒழுக்கின் நடுவே அஸ்தினபுரிக்கா அவன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/127955