Monthly Archive: November 2019

ஆற்றூர் ரவிவர்மா- அஞ்சலி உரை

ஆற்றூர் ரவிவர்மாவின் அஞ்சலிக்கூட்டத்தில் ஆற்றிய உரை. திரிச்சூர் சாகித்ய அக்காதமி விழாவில் Aug 7, 2019 அன்று  நடந்த அஞ்சலிக்கூட்டம் இது. கே.சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப்பிள்ளை முதலிய இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பேசினர். ஆகவே சுருகக்மான உரை. .    

Permanent link to this article: https://www.jeyamohan.in/127824

விடுதலையின் முழுமை- அய்யன்காளி

    [1]   அய்யன்காளியின் பெயரை என்னிடம் முதலில் சொன்னவர் மலையாள நாவலாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான பி.கே பாலகிருஷ்ணன். 1988-89 களில் நான் அவரை அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் வழக்கமாக அமரும் உதரசிரோமணி சாலையில் உள்ள சிறிய மதுக்கடையில் சந்தித்தேன். அப்போது அவர் மது அருந்துவதை நிறுத்திவிட்டிருந்தார். வழக்கம்போல கொதிப்பும் கொந்தளிப்பும் வசைபாடலுமாக பேசிக்கொண்டிருந்தார். அய்யன்காளியின் பெயர் அவர் நாவில் எழுந்தது. அதுவும் அப்பெயர் எனக்கு நன்கு பழக்கமிருக்கும் என்பது போல.   நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127733

ரேஸ் உலகின் கர்ணன்

அன்புள்ள ஜெ,   இந்த வாரம் ford vs ferrari என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.  போர்ட் கார் நிறுவனத்துக்கும் பெராரிக்கும் நடந்த போட்டியைப் பற்றிய படம்.   நிறுவனங்க்களுக்கு இடையிலான போட்டி போலத் தெரிந்தாலும் இதில் எஞ்சி இருப்பது கர்ணன் போன்ற கதாபாத்திரமாக இருக்கும் கென் மைல்ஸ் என்பவரின் சாதனை மற்றும் தியாகம் அவரைக் காத்து நிற்கும் துரியன் போன்ற ஷெல்பி. உலகத்தின் கண்களில் மறைந்த அவரை இந்தப் படம் கண்முன் நிறுத்துகிறது. வாய்ப்பிருந்தால் நீங்கள் கண்டிப்பாக பார்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127853

ஹராரியின் கலகச்சட்டகம்

அன்பு ஜெயமோகன்,   யுவால் ஹராரியின் சேப்பியன்ஸ் நூல் குறித்து சா.கந்தசாமி அவர்கள் பேசியதைக் காணொலியாய்க் கண்டு கேட்கும் வாய்ப்பு அமைந்தது.   அறிவு, ஞானம் என்ற இரு சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றை சா.க நேர்த்தியாய் விளக்கினார். அறிவும், ஞானமும் ஒன்றாகவே புரிந்து கொள்ளப்படும் அவலத்தை ஆதங்கமாகப் புலப்படுத்தினார்.   தகவல்களைத் திரட்டுவதோடு அவற்றைப் புறவயமான புரிதலுக்கு நகர்த்துவது அறிவின் பணி. தகவல்களைக் கொண்டு அகவயமான உணர்தலுக்கு நகர்வது ஞானத்தின் வழி. நகர்த்துவது, நகர்வது எனும் சொற்களை ஊன்றிக் கவனிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127830

கூண்டுகள் விடுதலைகள்

    ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையும் சமூக ஆவணத்தன்மையும் எந்த முயற்சியும் இன்றி அவற்றைக் கடந்துசெல்லும் வாழ்க்கைத்தரிசனமும் கொண்ட ஒரு நாவலை அதன் முகப்பில் அமர்ந்துகொண்டு வரையறுக்கவோ விளக்கவோ முயல்வது என்பது வாசகர்களுக்கு நலம் பயப்பதாகாது. ஆனாலும் சோ.தர்மனின் இந்நூலைப்பற்றிய சில மதிப்பீடுகளை முன்வைக்க விரும்புகிறேன்.   ஏனென்றால் நாம் பாலில் வெண்ணை மிதந்து கிடக்கவேண்டும் என விரும்பும் வாசகர்கள். பாலில் கலந்திருக்கும் வெண்ணையை எடுக்கும் கடைசலில் பயிற்சி இல்லாதவர்கள். யதார்த்தவாத அழகியல் கொண்டது இந்நாவல். ஆகவே ‘நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127734

ஆத்மாநாம் விருது விழா உரை

  23- 11-2019 அன்று சென்னையில் ஆத்மாநாம் விருது கவிஞர் வெயிலுக்கு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரை .கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது   உரையை எழுதியளிக்கவேண்டும் என ஸ்ரீனிவாசன் நடராஜன் கேட்டார். ஆகவே எழுதி அளித்தேன். ஆனால் பேசியது வேறொன்று. ஆகவே இரு உரைகள் – ஒன்று வரலாறு இன்னொன்று யதார்த்தம்   வெயில் கவிதைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/127821

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு

மும்மொழி கற்றல் மும்மொழி- கடிதம் மும்மொழிகற்றல்- மறுப்பு வணக்கம் ஜெ, சா.விஜயகுமாரின் எதிர்வினையை (https://assets1.jeyamohan.in/126335#.Xdl3ZWZS9PY)  படித்தேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ் இணையச் சூழலில் வரைவு தேசியக் கல்விக்கொள்கை தொடர்பாக எழுத்துப் பூர்வமான, கொள்கையை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட ஒன்றை முதன்முதலில் பார்க்கிறேன்.  பொதுவாக இதுகுறித்து சில காணொலிகளும், மேடைப் பேச்சுகளுமே அதிகம் பகிரப்பட்டன. இனி, அவரது கடிதத்தில் உள்ளவற்றுக்கு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.   அ. பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் தமிழில் கல்விக்கொள்கை வெளியிடப்பட்டிருப்பது நல்ல செயல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127827

விஷ்ணுபுரம் விருது விழா

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நிகழ்கிறது. ராஜஸ்தானி அரங்கு கிடைப்பதில் இருந்த சிக்கலால் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்துகிறோம். நண்பர்கள் விடுப்பு, முன்பதிவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என கோருகிறேன். வெள்ளி அன்றே காலையில் அனைவரும் வந்துவிடவேண்டும். இது ஒரு குடும்ப விழா. ஆகவே தனிப்பட்ட அழைப்பு.   இவ்வாண்டு கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126692

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…

அன்பு நண்பர்களுக்கு, டிசம்பர் 27, 28 (வெள்ளி, சனி) அன்று நடைபெறும் விஷ்ணுபுரம் விழாவுக்கு அருகில் உள்ள  இருவேறு இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால்  மற்ற ஏற்பாடுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.  தங்குமிடம் வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம். விஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு ஜெ   தொடர்புக்கு:- விஜயசூரியன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127557

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை

  வெண்முரசு நாவல்தொடரின் அடுத்த படைப்பு டிசம்பர் ஒன்றுமுதல் வெளியாகும். அஸ்தினபுரியில் யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்வது மட்டுமே அதிலிருக்கும் என்பது என் திட்டம். முதல் பகுதியை இன்று எழுதத் தொடங்கிவிட்டேன் களிற்றியானைநிரை என்று நாவலின் பெயர். அகநாநூற்றுச் செய்யுள் வைப்புமுறையின் பெயர் அது . யானைநகரின் தோற்றம் என அது எனக்குள் தோன்றுகிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/127833

Older posts «

» Newer posts