பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் அன்புள்ள ஜெ, ஒரு சங்கடமான கேள்வி, தவறாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். உங்கள் படைப்புலகில் நேரடியான காமச்சித்தரிப்புக்கள் இல்லை, அல்லது குறைவாகவும் மென்மையாகவும் உள்ளன. அல்லது நான் சொல்வதை இப்படி மாற்றிச் சொல்கிறேன். நீங்கள் காமத்தை எழுதும்போது அதை உடல்சார்ந்து வர்ணிப்பதில்லை. அந்நிகழ்ச்சிகளை நீடிக்கவிடுவதில்லை. நான் சரியாகச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. பல இடங்களில் ஒரு ஜாக்ரதையுடன நின்றுவிடுகிறீர்கள். அல்லது கவித்துவமான மொழியைக்கொண்டு போர்த்திவிடுகிறீர்கள். இதை நாங்கள் நண்பர்கள் …
Daily Archive: November 23, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/127773
சகஜயோகம் – கடிதங்கள்
சகஜயோகம் அன்புள்ள ஜெ சகஜயோகம் கட்டுரை வாசித்தேன். அதில் ஓர் அமைப்புசார்ந்து செயல்படுபவர்களிடம் இருக்கும் அளவில்லாத காழ்ப்பைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் சொல்லவிட்டுப்போனது புலிகள் இயக்கம் பற்றி. நானும் அதில் இருந்தவன். புலிகளின் மொத்த இருபத்தைந்தாண்டுக்காலச் செயல்பாட்டிலும் துரோகிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதுதான் மையமாக நிகழ்ந்தது. யார் வேண்டுமென்றாலும் துரோகி ஆகிவிடலாம். எப்போதுவேண்டுமானாலும் எந்தக்காரணமும் இல்லாமல் அப்படி ஆகவேண்டியிருக்கும். யார் வேண்டுமென்றாலும் அப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டாலே போதும். தமிழ்நாட்டில் சும்மா வசைதான். இங்கே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/127596
ஒரு வாசகனின் வழி- சக்திவேல்
அன்பு ஜெயமோகன், வாசிப்புக்குள் எப்போது நுழைந்தேன் என்பதை இக்கணம் யோசித்தால், ஏழாம் வகுப்புதான் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு பாபு என்பவர் தமிழாசிரியராக இருந்தார். வகுப்பறையில் பாடம் எடுக்க மாட்டார்; பெரும்பாலும் மரத்தடிகள்தான். திருக்குறளை அவர் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க, அதைக்கேட்டு மயங்கி இருந்திருக்கிறேன். சில தனிப்பாடல்களை சுவைகுன்றாமல் அவர் பாணியில் சிலாகிப்பார்; அப்பாடல்களில் உள்ள பல சொற்களைச் சுட்டி அதன் அழகை விவரிப்பார். தமிழ்ச்சொற்களின் மீது இன்ம்புரியா காதல் கொண்டிருந்த என்னை, அவர் இன்னும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/127629