Daily Archive: November 20, 2019

புதுவை வெண்முரசு கூடுகை 32

  வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது .   வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான “நீலம்” நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு முழு நூலுக்குமான சிறப்புரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127705

நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்

  புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு சில ஆலோசனைகள். முதலில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். கைகால்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்துவிடுங்கள். நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை நினைக்கலாம். ஒன்றும் ஆகப்போவதில்லை. தைரியமாக இருங்கள். இதுவரை பல்லாயிரம் பேர் எழுதிவிட்டார்கள். இனியும் எழுதுவார்கள்.சிறந்த புதுக்கவிதை கொந்தளிப்புகளை உருவாக்கும்– அக்கவிதையில். அதைப்படிப்பவர்கள் உச்சகட்ட எதிவினைகளை உருவாக்குவார்கள், தங்கள் கவிதைகளில். ஆகவே கவிதை என்பது கவிதைக்காக மட்டுமே நிகழும் ஒருசெயல் என்பதை மீண்டும் நினைவுகூருங்கள். ஆரம்பிக்கும் முன்பாக உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/311

இசையின் கவிதை,அழகுநிலா -கடிதங்கள்

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா அன்புள்ள ஜெயமோகன்   வணக்கம். நலம்தானே?  இசையின் சிவாஜிகணேசனின் முத்தங்கள் கவிதைத்தொகுதி பற்றி அழகுநிலா எழுதியிருந்த கட்டுரையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  தான் அடைந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தங்குதடையின்றி எழுத்தில் முன்வைக்கத் தெரியும் அளவுக்கு கச்சிதமான மொழி.  உண்மையிலேயே  அழகுநிலாவின் மொழியனுபவத்துக்காகவே நான் அக்கட்டுரையை இரு முறை படித்தேன். படித்த நாவல்களிலின் காட்சிகள், பார்த்த படத்தின் காட்சிகள் என பல தருணங்களோடு இணைத்து கவிதையை மேலதிகமாக உள்வாங்கிக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127614

ஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ ஆரோக்கியநிகேதனம் அன்பின் ஜெ,   நலம்தானே? திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் விஜயா பதிப்பகத்தின் சிறிய கடை ஒன்றிருக்கும். ஒவ்வொரு முறையும் மல்லிகா வீட்டிற்குப் (பல்லடம் லட்சுமி மில்ஸ்) போகும்போதும் வரும்போதும் அங்குதான் ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கி வருவது. அந்த முறை பாம்பேயிலிருந்து வந்தது, மல்லிகாவின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனதால். இராமநாதபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, அருகில் கவனித்துக்கொள்ள மல்லிகாவை விட்டுவிட்டு தனியே பாம்பே திரும்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127616

சகஜ யோகம்,கடிதம்

  சகஜயோகம் அன்புள்ள ஜெ. .   நான் முன்பு எப்படி உங்கள் வாசகனோ? அப்படித்தான் இன்றும் நான் உங்கள் வாசகன்.அன்று எப்படி இலக்கியத்தில் உங்களை அணுக முடியாத இடத்தில் வைத்து பார்தேனோ அப்படியேதான் இன்றும் பார்க்கிறேன்..   ஒருவர் இந்து ஞான மரபினை  நவீன கண்கொண்டு அந்த தத்துவத்தை பயில உங்களைத்தான் அணுக முடியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். .ஒருவர் தமிழிலியக்கியத்தில் பரிட்சயமாகி அதன் வீச்சில் நான் இன்னும் வேகமாக பயணிக்க வேண்டும் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127717