Daily Archive: November 17, 2019

சமகாலப்பிரச்சினைகள் – ஆமையின்பாதை

  சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்லுங்கள் என்ற அழுத்தம்தான் இன்றைய எழுத்தாளர்களின் மிகப்பெரிய சுமை. எழுத்தாளர்கள் தங்களுக்கே உரிய பிரச்சினைகளும் அதிலிருந்து தனித்தன்மைகொண்ட கேள்விகளும் உடையவர்கள். எழுத்தினூடாக அதற்கான விடைகளை தேடுபவர்கள். அந்த தனித்தன்மை காரணமாகத்தான் அவர்கள் வாசிக்கப்படுகிறார்கள். ஆனால் சமகாலச் சூழல் அவர்களிடம் எப்போதும் பொதுவான பிரச்சினைகளைப் பேசு, பொதுவான பதில்களை கூறு என அழுத்தமளிக்கிறது. அந்த அழுத்தத்துக்குப் பணிந்து பொதுப்பிரச்ச்னைகளில் பொதுவான கருத்துக்களைக் கூறும் எழுத்தாளர்களை அதே சமகாலச் சூழல் பொருட்படுத்தாமல் தூக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127643

பொன்னீலன் 80- விழா

  இன்று காலை முதல் பொன்னீலன் 80 விழா. சமீபத்தில் நாகர்கோயிலில் நடந்தவற்றில் மிகப்பெரிய விழா இதுவே.கோவை, சென்னை, மதுரை என பல அயலூர்களிலிருந்தும் வாசகர்களும் எழுத்தாளர்களும் திரண்டு வந்திருந்தனர். ஐநூறுக்கும் மேல் பங்கேற்பாளர்கள். கணிசமான எழுத்தாளர் முகங்கள்   பொன்னீலனின் ஊர்க்காரர்கள் காலையிலேயே வந்திருந்து பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்திவிட்டுச் சென்றபின் அரங்கில் பெரும்பாலானவர்கள் இலக்கியவாசகர்களும் எழுத்தாளர்களும்தான். ஆர்.நல்லக்கண்ணு விழாவை தொடங்கிவைத்து உரையாற்றினார். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். சு.வேணுகோபால், ஸ்ரீனிவாசன் நடராஜன், விஜயா வேலாயுதம், அமிர்தம் சூரியா, பாரதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127651

ஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்

ஒரே ஆசிரியரை வாசித்தல் பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு   நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?   பெண்கள் அணியும் ஆடையில் ஒரு சிறு மாற்றம் வந்தாலும் முதல் எதிர்ப்பு பெரும்பாலும் பெண்கள் பக்கமிருந்துதான் வருகிறது என்று நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவ்வாறு தமிழ் கலாச்சாரப்படி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை நேர்த்தி பற்றிய ஒரு விவாதம் என் மனைவியின் பெண் நண்பர்கள் மட்டுமே கொண்ட வாட்சப் குழுமத்தில் நடந்தது. அதில் பெரும்பானவர்கள் என் மனைவியின் ஆடையில் ஏற்படுத்திய சிறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127580

ராமனின் பெயருடன்

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு, ‘ஹே ராம்’ நேற்று பார்த்தேன். படம் வெளியானபோது எனக்குப் பதினோறு வயது. அப்போதெல்லாம் தினத்தந்தி இதழின் சினிமாப் பக்கங்களில்தான் புதியப் படங்களைப் பற்றியச் செய்திகளைத் தெரிந்துகொள்வது. விளம்பரத்தில் கமல் துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி பூணூலைப் போட்டுக்கொண்டு வெற்று உடம்போடு நிற்பதைப் பார்த்தபோது பெரிய அதிர்ச்சி. அதைவிட அதிர்ச்சி படத்தின் கதையாக அப்போது எல்லோரும் சொன்னது, நாயகன் காந்தியைக் கொல்ல முயற்சி செய்கிறான். மஹாத்மா காந்தியை கொல்ல முயற்சிப்பவன் எப்படி ஹீரோவாக இருக்க முடியுமென்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127582